Jothika in her new Job !!!
சூர்யாவுடன் குடித்தனத்தை ஆரம்பித்திருக்கும் ஜோதிகா புது அவதாரம் எடுத்துள்ளார். அதாவது சூர்யா நடிக்கும் படங்களின் கதைகளை கேட்கும் வேலையை அவர்தான் மேற்கொள்கிறாராம்.

ரொம்ப நாளாக சத்தமே போடாமல் காதலித்து வந்த சூர்யாவும், ஜோதிகாவும் மண வாழ்க்கையில் புகுந்து அம்சமாக குடும்பம் நடத்தி வருகின்றனர். இனிமேல் நடிக்க மாட்டேன் என ஜோதிகா ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
இருந்தாலும் சினிமாவுடனான தொடர்பை அவர் துண்டிக்கவில்லை. தொடர்ந்து சினிமாவுடன் ஒட்டி உறவாடித்தான் வருகிறார். சூர்யாவிடம் கதை சொல்ல வருகிறவர்களை ஜோதிகாதான் சந்தித்து கதை கேட்கிறாராம்.
எனவே சூர்யாவை புக் பண்ண விரும்புகிறவர்கள் முதலில் ஜோ.வைத்தான் பார்க்கிறார்கள். அவரிடம் கதை சொல்லி, ஜோதிகா ஓ.கே. சொல்லி விட்டால் சூர்யா கால்ஷீட் கிடைக்குமாம்.
இதேபோல சூர்யா நடிக்கும் படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் குறித்தும் ஜோதிகாவிடம் ஆலோசனை கேட்டு விட்டே இயக்குநர்கள் ஹீரோயின்களை ஃபிக்ஸ் செய்கிறார்களாம். சூர்யாவின் கால்ஷீட்டையும் ஜோதிகாவை நிர்வகிக்க ஆரம்பித்துள்ளார்.
சில்லுன்னு ஒரு காதல் படம் சரியாக போகாததால் அப்செட் ஆன சூர்யாவை, ஜோதான் சமாதானப்படுத்தினாராம். அடுத்த படத்தில் பின்னிடுவீங்க பாருங்க என்று ஆறுதல் கூறினாராம். அந்தப் புத்துணர்வில் கௌதமின் வாரணம் ஆயிரம் படத்தில் அடித்துத் தூள் கிளப்ப சூர்யா ரெடியாகி வருகிறாராம்.
வாரணம் ஆயிரம் என ஏன் பெயர் வைத்தீர்கள் என்று கௌதமிடம் கேட்டேபாது, வாரணம் என்றால் யானை என்று பொருள். எனது நாயகனும் ஆயிரம் யானைகளின் பலத்தை கொண்டவன். அந்த அர்த்தத்தில்தான் வாரணம் ஆயிரம் என பெயர் சூட்டினேன் என்கிறார் கௌதம்.
வாரணம் ஆயிரம் படத்தில் அம்சமான ஆண்ட்ரியாதான் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவரைப் பரிந்துரைத்ததும் ஜோதானாம்.
சூர்யாவை இன்னும் ஷேப் செய்ய ஜோ.வின் இந்த புதிய 'ஜாப்' உதவட்டும்!
1 Comments:
Super
Post a Comment
<< Home