Forbes List -ல் கலாநிதி மாறன் !!!

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 36 மகா கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளனர். சன் டிவி அதிபர் கலாநிதி மாறனுக்கு 349வது இடம் கிடைத்துள்ளது. அவரது சொத்து மதிப்பு ரூ. 11,700 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை 2007ம் ஆண்டின் மிகப் பெரிய கோடீஸவரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 36 பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்தியாவச் சேர்ந்த லட்சுமி மிட்டல், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ஆசிம் பிரேம்ஜி ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
மொத்தம் 946 பெரும் பணக்காரர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்தியர்களின் மொத்த சொத்து மதிப்பு 191 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எஃகு நிறுவன தொழிலில் உலகைக் கலக்கி வரும் லட்சுமி மிட்டல், இந்தப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 32 பில்லியன் டாலராக (அதாவது ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி) தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 14வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 20.1 பில்லியன் டாலராகும் (ரூ. 90 ஆயிரம் கோடி.) அவரது தம்பி அனில் அம்பானி 17.1 பில்லியன் டாலர் சொத்துடன் (ரூ. 80 ஆயிரம் கோடி) 21வது இடத்தில் உள்ளார்.
விப்ரோ நிறுவன அதிபர் ஆசிம் பிரேம்ஜி ரூ. 76 ஆயிரம் கோடி சொத்துடன் 22வது இடத்தில் உள்ளார்.
டிஎல்எப் நிறுவனத்தின் கே.பி.சிங் 10 பில்லியன் டாலர் சொத்துடன் 62வது இடத்தில் உள்ளார். பார்தி டெலிகாம் நிறுவனத்தின் பாரதி மிட்டல் 69வது இடத்திலும், குமாரமங்கம் பிர்லா, எஸ்ஸார் நிறுவனத்தின் சசி, ரவி ரூயா ஆகியோர் 86வது இடத்திலும் உள்ளனர்.
சன் டிவி அதிபர் கலாநிதி மாறனும் இந்தப் பட்டியலில் உள்ளார். 349வது இடம் கலாநிதி மாறனுக்குக் கிடைத்துள்ளது. அவரது சொத்து மதிப்பு ரூ. 11,700 கோடி என கணிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ்தான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து புதிதாக 14 கோடீஸ்வரர்கள் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர். சீனாவிலிருந்து 13 பேர் சேர்ந்துள்ளனர்.
Source: Thatstamil.com
Related News :
Hyundai Car நிறுவனத்தையும் வாங்கிவிட்டாரா மாறன்?
கோடீஸ்வர மாறன்
1 Comments:
கணக்கு காட்டியே இம்முட்டுன்னா, எல்லாத்தையும் கணக்குல கொண்டு வந்தா பில்கேட்ஸை மிஞ்சினாலும் மிஞ்சிடுவாங்க.
Post a Comment
<< Home