கபட கருணாநிதியின் கைது நாடகம்
இது கொஞ்சம் பழைய விசயம் இருப்பினும் மக்கள் படிக்க வேண்டிய தருணம் கடந்து விட்டது என நான் எண்ணவில்லை.....
கருணாநிதி கைது ஆன போது சன் டிவி எப்படியெல்லாம் திரித்து காட்டியது என்று புட்டு புட்டு வைக்கிறது இந்த கட்டுரை.
இங்கே கிளிக் செய்யவும்.
6 Comments:
ப்ளசன்ட் ஸ்டே வழக்கில் ஜெ. தண்டனை அடைந்த போது தருமபுரியில் மூன்று மாணவிகள் எரித்துக் கொள்ளப்பட்ட போதும், அதற்கு பின்பு குற்றவாளிகளை காக்க ஜெ. அரசு எப்படி யெல்லாம் நடந்து கொண்டது என்பதற்கு எதாவது சுட்டியை காட்டினீர்களேயானால் அதுவும் நன்றாக இருக்கும்.
குற்றவாளிகளை இன்னும் எப்படிக் காத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள்!
கருணாநிதி எப்படி கபட நாடகம் ஆடினார் என்றும் சொல்லுங்கள்!
சொல்லுவதியெல்லாம் கேட்டுவிட்டு, சொரணையில்லாமல் இந்த மக்கள் போய் சூரியனுக்கும், இரட்டை இலைக்கும், மாம்பழத்துக்கும், பம்பரத்துக்கும், குத்த ஓடிஉகிறார்கள் என்ற வெட்கம் கெட்ட கதையையும் சொல்லுங்கள்!
சம்மட்டி, அப்பறம் சிதம்பரத்தில டாக்டர் பட்டம் வாங்கும் போது செஞ்ச கொலை எல்லாத்தையும் சொல்ல சொல்லுவீங்க போல இருக்கே.
இது தப்பு/சரி இல்ல அப்பிடினு சொல்லுங்கப்பு அத விட்டுபுட்டு...
அந்த வழக்கு போட்டு, நாலரை வருஷமாச்சி. இன்று வரை குற்றப் பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப் படவில்லை. ஒரு கமிஷன் போட்டு, அந்த கமிஷன் அறிக்கையும் கொடுத்துவிட்டது. அதை சட்ட மன்றத்திலும் வைக்க முடியவில்லை. அம்மாவே, அதை ஒரு துன்பியல் சம்பவமா நினைத்து மறந்துட்டாங்கன்னா, நீங்க ஏன் சார் ஞாபகப்படுத்தறீங்க.
ஒரு முன்னாள் முதல்வரையே, தகுந்த ஆதாரமில்லாமல் நடுராத்திரியில் அப்படி கைது செய்யக்கூடிய தங்கத்தாரையின் ஆட்சியில், சாமான்யர்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்படுவார்கள் என்பதைத் தக்க சமயத்தில் ஞாபகப்படுத்தியற்கு நன்றி. ( உள்குத்து வேலைய ரொம்ப அழகா செய்யறீங்க. யார் சார் குரு?)
என்ன பண்றது SK, இவங்கள விட்டுட்டு முறசுக்கு போடலான்னா, அவரு, நான் வருஷாவருஷம் லட்ச ருபாய்க்கு வருமான வரிக்காக தானம் பண்ணேன், கறுப்பா வாங்கிய பணத்தயும், காலேஜ் நடத்தி ஏழை மக்கள் கிட்ட வாங்கிய நன்கொடையையும் போட்டு கட்ன கல்யாண மண்டபத்த காப்பத்த யார் யார் கால்லயோ விழுந்து பார்த்தும் முடியாததால அதிலிருந்து கொஞ்ச இடத்த மக்களுக்காக விட்டு கொடுக்க முடிவு பண்ணிட்டேன், என் கட்சியிலே நாந்தான் எல்லாம், மத்தவங்கெல்லாம் விசிலடிச்சான் குஞ்சுங்கன்றதால சும்மா, போடுங்கம்மா ஓட்டு நான் சினிமால ரவுடிகளையும், தீவிரவாதிகளையும் வீழ்த்தறத பார்த்துன்னு சொல்றதயும், மச்சானயும் மனைவியையும் இப்பவே அதிகார மையமாக்கறதையும் பார்த்தா, பழகிய/சொந்தக்கார பேயி, தெரியாத பிடாரிய விட மேலுன்னு நினைக்கத் தோனுதே....
அய்யய்யோ...அய்யய்யோ...கொல்றாங்களே..கொல்றாங்களே..
ரவி
Post a Comment
<< Home