இது கொஞ்சம் ஓவர்தான் !!!
பரிகாரத்திற்காக இளைஞர் ஒருவர் நாய்க்கு தாலி கட்டிய விநோத நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடந்தது.
மானாமதுரை அருகே ஏ.விலாக்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (33). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு `உல்லாசமாக' இருந்த நாய்களை அடித்து கொன்று மரத்தில் தொங்கவிட்டார். இதற்கு பிறகு நான்கு நாட்களில் செல்வக்குமாரின் கை, கால்கள் முடங்கின. காது கேட்கவில்லை. பலவித சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. `இறந்த நாய்களின் சாபம் எனவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனவும்' ஒரு ஜோதிடர் கூறினார். பரிகாரமாக பெண் நாய்க்கு தாலி கட்ட வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டது. இதன்படி செல்வி என்ற நாய்க்கும், செல்வக்குமாருக்கும் நேற்று திருமணம் நடந்தது. `செல்வி' க்கு சேலை கட்டி ஊர்வலமாக கணபதி கோயிலுக்கு அழைத்து வந்தனர். செல்வக்குமார் மாப்பிள்ளை கோலத்துடன் மணமேடை வந்தார். இருவரும் மாலை மாற்றிக்கொண்ட பிறகு, செல்வக்குமார் தாலி கட்டினார். தடபுடல் விருந்தும் நடந்தது. மணமகள் செல்விக்கு `பன்' கொடுக்கப்பட்டது. இதுகுறித்து செல்வக்குமார் கூறுகையில், `நான் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்துள்ளேன். மனைவி செல்வியை பத்திரமாக பார்த்துக்கொள்வேன்' என்றார்.
நன்றி : தினமலர்
3 Comments:
என்ன கொடுமையிது! நம்மோட அறிய்யாமைக்கு அளவேயில்லாது போச்சி!
மாப்பிள்ளை நைட்ல நாய்க்கு பாலியல் தொந்தரவு கொடுக்காம இருந்தா சரிதான் :-)
அப்புறம் நாய் ஏடாகூடமான இடத்த கவ்வீற போகுது!
ஐஸ்வர்யா ராய்(பச்சன்)க்கும், வாழை மரத்துக்கும் கல்யாணம் நடந்ததாகவும், படித்தேன்.
இந்த வினோதம் படிக்காதவர் மத்தியில் மாத்திரமல்ல,,,,,
Post a Comment
<< Home