Shocking news : இந்திய பெண் விவசாயிகள் அரை நிர்வாணத்தில் ..
இது IBN CNN ல் வெளி வந்த வருத்தமான செய்தி. விவசாயிகள் விசயத்தில் இந்திய அரசு தூங்கி கொண்டிருப்பதையே இந்த செய்தி மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
இங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.
15 Comments:
This comment has been removed by a blog administrator.
"
Partha said...
தருமி,
**************
**********
"
என்ன Partha தவறுதலா அனுப்பிட்டீங்களா?
ஆமா மன்னிச்சிக்குங்க. பின்னூட்டத்த எடுத்திட்டாலும் நல்லது தான். உங்களுக்கு எழுத நினைச்ச பின்னூட்டம் இதோ, உங்க தலைப்ப பார்த்து, வறுமையால அரை நிர்வாணம்னு நினைச்சேன், உங்க ஒரு வரி செய்தியும் அதுக்கு மேல ஒன்னும் சொல்லல. அப்புறம் செய்தியை படிச்சோனே தான் புரிஞ்சது. கொஞ்சம் விளக்கமா சொல்லி இருக்கலாமே.
ஆனா விவசாயிங்க துயர் ரொம்ப வருத்தமா இருக்கு. இதுக்கு என்ன வழின்னே புரிய மாட்டேங்குது.
உருக்கமான செய்தி !!!
ஆமா...பார்த்தாவை இங்க இருந்து தூக்குங்க..! பதிவின் seriousness முறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஹ்ம்!
20,000 கோடி ரூபாய் செலவு செய்து மனிதனை விண்ணுக்கு அனுப்பலாமா என்று ISRO ஒரு பொறும் யோசித்துக் கொண்டிருக்கிறது.
300 கோடி ரூபாய் பணம் வெறும் பெட்டிகளில் பதுக்கப்பட்டு நம்மூர் அரசியல் பெருச்சாளிகளின் வீட்டில் முடங்கிக் கிடக்கிறது.
பல பல ஆயிரம் கோடி ரூபாய் பாஸ்ரா ஏவு கணைகள் வாங்கும் போதும், மிக் ரக விமானம் வாங்கும் போதும் லஞ்சமாக கைமாறுது.
இங்கே என்னடான்னா ஒரு வேளை உணவு கூட உண்ண இல்லாமல், அம்மணமா உழுது ஆண்டவன வேண்டுது.
கதி இல்லாமல் கிடக்கும் என் மக்களை ஏமாற்றும் சதிகாரர்கள் ஒவ்வொருவனும் உயிரோடு புதையுண்டு போகும் நாள் என்னாளோ?
சொமாலியா பாத்து உச்சு கொட்டறோம். நம்மூரிலேயே பல சொமாலியாக்கள் இருக்கே. என்ன செய்யப் போறோம் ?
Bad News India ,
இதுதான் முன்னர் நான் என் பதிவில் சொன்னது.
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html
மன்மோகன்களாலும், IT ஜம்பாவான்களாலும் யார் இலாபம் அடைகிறார்கள்?
மேலும் பெரிய அளவில் விவசாய நிலங்களைக் கபளீகரம் பண்ணி MNC களுக்கு தாரைவார்த்துவிட்டு சக மனிதன் சோத்துக்கே சாகும் போது கோட்டு சூட்டுடன் பல்லைக்காட்டிக் கொண்டு பொருளாதார வளர்ச்சி பற்றிப் பேச வெட்கமாயில்லை இவர்களுக்கு.
இவர்கள் இந்தியாவின் புனித பிம்பங்கள் அல்ல.இவர்கள்தான் இந்தியவை கூறுபோட்டு விற்பவர்கள்
2020 க்குள் இன்னும் பல கொடுமைகள் நடக்கும். :-((( அரசு இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும்.
//சொமாலியா பாத்து உச்சு கொட்டறோம். நம்மூரிலேயே பல சொமாலியாக்கள் இருக்கே. என்ன செய்யப் போறோம் ?
//
ஒன்றும் செய்ய முடியாது. சும்மா ஹை-டெக் வாழ்க்கை வாழலாம் என்று சொந்த சகோதரனின் துன்பங்களை கண்டு கொள்ளாமல் இதுபோல்
http://tamilkings.blogspot.com/2006/10/blog-post_26.html
மல்டிபிளக்ஸ்களில் சாப்ட்வேர் நிபுணர்கள் 200 ரூபாய் செழவளித்து சினிமாவும், 30 ரூபாய் செலவளித்து காபியும் அருந்தும் காட்சி தமிழக மாவட்டங்களிலும் வராதா என்ற ஏக்கத்துடன் வாழலாம்.
:-((((
கல்வெட்டு, செய்ய முடியாது என்று ஒன்றுமே கிடையாது.
மசு வேணும்.
நாரயண மூர்த்தி, 10,000 ரூபாயில் ஆரம்பித்தது இன்று 10 லட்சம் குடும்பங்களுக்கு மேல் படி அளக்கிறது. இது அவரிடம் முடியும் என்ற மனதிருந்ததால்தான்.
மூர்த்தி, அவர் வேலையை ஒழுங்காக செய்துவிட்டார். நாட்டின் பொருளாதாரம் IT மூலம் உயர அவர்தான் முதல் வித்திட்டார், இல்லியா?
problem lies mostly with politicians and people like us who spend our lives just by eating and enjoying and not thinking about the people who are not equally lucky and gifted like us.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, சுனாமிக்கும், பூகம்பத்துக்கும் பத்து ரூபாய் கொடுத்தால் நம்ப கடம முடிஞ்சது என்ற நினைப்பு நமக்கு!
//
http://tamilkings.blogspot.com/2006/10/blog-post_26.html
மல்டிபிளக்ஸ்களில் சாப்ட்வேர் நிபுணர்கள் 200 ரூபாய் செழவளித்து சினிமாவும், 30 ரூபாய் செலவளித்து காபியும் அருந்தும் காட்சி தமிழக மாவட்டங்களிலும் வராதா என்ற ஏக்கத்துடன் வாழலாம். //
எனது இந்தப் பதிவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.தமிழ் டைப்பில் அவ்வளவு அனுபவம் இல்லாததால் நான் சொல்ல நினைத்ததை சுருக்கமாக சொல்லியிருந்தேன்.நான் சொல்ல வந்தது இது தான்.
பெருகிவரும் சாப்ட்வேர் கலாச்சாரம் நாட்டின் ஆணி வேரான விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களை அழித்துவிடும்,அதன் பிறகு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்து அரிசி இறக்குமதி செய்யும் அவலம் வரும் என்பது தான். வெள்ளை காலர் உடையணிந்தவர்கள் 5-6 இலக்க சம்பளம் வாங்கி வீக்-என்ட் குடிகூத்துகள் மூலம் பார்,பப்பெட் முதலாளிகள் வேண்டுமானால் சௌகர்யம் அடையலாம்,அதை தவிர்த்த மற்றவர்கள் கதி என்ன என்பது தான்.
Bad News India ,
நாராயணமூர்த்தி நல்ல உழைப்பாளி அவரால் இந்தியாவில் தகவல்துறை (Information Technology ?? சரிதானே??) ஒரு முக்கிய வளர்ச்சி அடைந்துள்ளது. மறுக்கவில்லை.
இவரைப் போலவே பெட்ரோலியத்துறையில் அம்பானி குழுமம்,மோட்டார் தொழிலில் டாட்டா என்று பலர் தங்களின் பங்களிப்பைச் செய்துள்ளனர்.இவர்களாலும் பல குடும்பங்கள் வாழ்கின்றன. மறுக்கவில்லை.
மழை எப்போது வரும் என்று உறுதியாகக் கூறும் ஒரு "Weather Information" கூட இன்னும் இந்திய விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. :-((( சும்மா இன்னும் பழைய ஆகாசவானி பாணியில்தான் ...ஒரு சில இடங்கலில் இடியோ மழையோ...என்ற அளவில் செய்தி உள்ளது.
இந்த முதலாளிகள் பின்னேலேயெ அரசும் ஊடகங்களும் ,உங்களைப் போன்ற பதிவர்களும் சுத்திக் கொண்டு இந்தியா முன்னேறுகிறது, என்று சொல்லிக் கொண்டு, இந்தியாவின் 80 சதவீத (தோராயமாக எந்த ஆதராமும் என்னிடம் இபோது இல்லை) மக்கள் சுகாதரமான தண்ணிக்கே சிங்கி அடிக்கும்போது இந்தியாவின் வளர்ச்சி பற்றி பெருமைப்பட ஒன்றும் இல்லை.
அரசு தனது பார்வையை கிராமங்களின் பக்கம் திருப்ப வேண்டும்.
மும்பை பங்கு மார்க்கட்டில் ஒரு நாள் சரிவு ஏற்பட்டாலே விளக்கம் கொடுக்கும் ப.சி இந்த மக்களின் பட்டினி பற்றி என்றாவாது பேசி இருக்காரா?
எந்த அரசாவது விவசாசியின் நலனுக்காக ஏதாவது உருப்படியாக செய்கிறதா?
ஒரு ஊருக்கு கலர் டி.வி கொடுக்கும் காசில் அந்த ஊரில் நல்ல தண்ணீர் பிடிக்கும் கண்மாய்களை உருவாக்கலாம்.
மிட்டலிடம் ஒரு பத்திரிக்கையாளர் charity பற்றி கேட்டதற்கு "I am too young for charity " என்று சொன்னார்.
பணம் வந்தவுடன் அனைவரும் கீழே உள்ள மக்களை மறந்து விட்டு சொரணை இல்லாமல் வாழக்கற்றுக் கொள்கிறோம்.
ஒன்றும் சொல்வதற்கு இல்லை. :-((((
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து :((((
இதன் தீர்வு மிகவும் complexஆனது. சமூக, அரசியல் மாற்றங்கள் தழுவியது. மன்மோகன்கள் நாட்டு அளவில் பொருளாதாரத்தை முன்னேற்றினால், கிராமங்களுக்கு முகமது யூனஸ்கள் முளைக்க வேண்டும். உறைக்க வேண்டியவர்களுக்கு உறைக்க மாட்டேன் என்கிறதே :((
முதலில் கீறல் விழுந்த வட்டாக அரசியல் கோஷங்களை முழங்கிக்கொண்டிராமல் BNI சொல்வதுபோல் காரியத்தில் இறங்க வேண்டும்.
இப்போதுதான் அதே பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள லிங்க் மூலம் விவசாய அமைச்சர் சரத் பவார் "விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது எல்லாம் சகஜமப்பா" என்று கரன் தாபருக்கு கொடுத்த பேட்டியைப் படித்தேன்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.:((
தருமி ,
வருகைக்கு நன்றி ! Partha வின் பின்னூட்டத்தை நீக்கி விட்டேன் .
There is one thing that doesnt seem to be obvious to others. So here it is my friends.
It is not pathetic that farmers are suiciding and the minister says its normal. Its pathetic that some criminal came up with this humanly degrading ritual, and not only the mass media but even the educated bloggers dont care to worry about it. Yeah you all just forgot to notice the very obvious unfairness isnt it?
இந்த மக்கள் படும் துயரங்கள் ஒருபுறம் நம் மனதை பாதித்தாலும்,அதே மாநிலத்தை சேர்ந்த ஒரு மூத்த இத்துறையின் அமைச்சரின் விவசாயிகளின் தற்கொலை சாதாரணமானதுதான் என்ற பேட்டி என்னை அதிர்சிக்குள்ளாக்கியது.இறைவன் இருப்பது உண்மையெனில் இந்த ஏழைகளின் கண்ணீரால் நாட்டை ஆள்வோர் (கல்நெஞ்சம் படைத்தோர்) வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
Post a Comment
<< Home