Tuesday, October 24, 2006

Dharmapuri Film Review by Dinamalar

புதுமை இல்லாவிட்டாலும் புளித்துப் போகவில்லை


களிமண் பொம்மைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வரும் கிராம மக்களை மணிவண்ணன் ஏமாற்றி, அவர்களுயை நிலத்தை உள்ளூர் எம்.எல்.ஏக்கு கொடுத்து விடுகிறார். இதனால் வேதனை அடைந்த கிராம மக்கள் விஜய குமாரின் மகனான விஜயகாந்தைத் தேடிப்பிடித்து தங்கள் துயரத்தை எடுத்துக் கூறி உதவுமாறு கேட்க முடிவு செய்கின்றனர். ஏற்கனவே கிராம மக்களுக்கு நன்மை செய்ததால் மணிவண்ணன் குடும்பத்தினரால் விரட்டப்பட்ட விஜயகாந்த், ராமேஸ்வரத்தில், அப்பகுதி மக்களின் நலனுக்காக போராடி வருவதை அறிந்து அங்கு சென்று முறையிடுகின்றனர். மீண்டும் தங்கள் ஊருக்கே திரும்பி வந்து , மணிவண்ணன் குடும்பத்தினருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். விஜயகாந்தின் தர்மபுரியில் புதுமை ஏதும் இல்லை என்றாலும் அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரவில்லை. அவரகள் விரும்பும் அனைத்து அம்சங்களும் தர்மபுரியில் உள்ளன. நல்லதையே செய்ய விரும்புவராக தோன்றும் விஜயகாந்த், அவருடைய கிராமத்தில் சுயநல, ஊழல் கும்பலிடம் சிக்கித் தவிக்கும் மக்களைத் தனியாளாக போராடி காப்பாற்றுகிறார். இந்த படத்தில் அவர் கூறும் பஞ்ச் வசனங்கள் அவருடைய ரசிகர்களை, குறிப்பாக அவருடைய கட்சியினரை உற்சாகப்படுத்துவதாக உள்ளது. சண்டை காட்சிகளில் மட்டுமல்லாமல், ஆடல் காட்சிகளிலும் விஜயகாந்த் துõள் பரத்தி இருக்கிறார். கதாநாயகியாக வரும் லட்சுமி ராய், வழக்கம்போல் விஜயகாந்தையே சுற்றி சுற்றி வருகிறார். விஜயகாந்தின் நண்பராக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் நகைச்சுவை காடசிகள் சிறப்பாக உள்ளன. மணிவண்ணன் வல்லனாக வருகிறார். இயக்குநர் பேரரசு, தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை நன்கு புரிந்து கொண்டு கதையை நகர்த்தி இருக்கிறார். இந்த படத்தின் பாடல்களை எழுதி இருப்பதோடு ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் விஜயகாந்தை புகழ்வதாகவும் வசனங்கள் தமிழகத்தின் தற்போதைய அரசியலைச் சுற்றியும் அமைந்துள்ளன. ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு மெருகூட்டுகிறது ....

1 Comments:

At 2:31 PM, Blogger நாமக்கல் சிபி said...

நான் ஆவலுடன் எதிர்பார்த்த கேப்டன் படத்திற்கு விமர்சனம் போட்டு புண்ணியம் தேடி கொண்டீர் ;)

 

Post a Comment

<< Home

Powered by Blogger