America வில் கஜினி !!!
தான் யார், எங்கே இருக்கிறோம் என்பதே தெரியாமல் அமெரிக்காவில் ஒருவர் தத்தளித்து வருகிறார்.
அமெரிக்காவின் டென்வர் நகரில் சில நாட்களுக்கு முன்பு ஒருவர் மயங்கிய நிலையில் சாலையில் கிடந்தார். அவராகவே மயக்கம் தெளிந்து எழுந்தபோது தான் யார், எங்கே இருக்கிறோம் என்பது தெரியாமல் அவர் பேந்தப் பேந்த விழித்துள்ளார்.
இதையடுத்து அவர் மீது பரிதாபப்பட்ட சிலர் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள், அந்த நபருக்கு அம்னீஷியா நோய் இருப்பதாக கண்டுபிடித்தனர்.
அந்த நபரிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது, தனது பெயர் என்ன, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட எதுவுமே நினைவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் யார் என்றே தெரியவில்லை. எனது ஊர் எது என்றும் தெரியவில்லை.
கட்டடங்கள், ஊரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. சாலைகளும் எனக்குப் புரியவில்லை. என்னிடம் பண¬ம் இல்லை, அடையாள அட்டையும் இல்லை என்றார்.
இவர் குறித்த செய்தி அமெரிக்க டிவிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியானது. இதைப் பார்த்ததும் அவரைத் திருமணம் செய்து கொள்ளவிருந்த பெண்மனி விரைந்து வந்தார். அதேபோல அந்த நபரின் நண்பர்களும், குடும்பத்தினரும் கூட வந்து சேர்ந்தனர்.
இருப்பினும் அவர்கள் யாரையுமே அந்த நபருக்கு அடையாளம் தெரியவில்லை. அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் கூறிய தகவல்களின்படி அவரது பெயர் என்ரான் எனத் தெரிய வந்துள்ளது.
குடும்பத்தோடு தற்போது அவர் சேர்ந்து விட்டாலும் கூட இன்னும் பழைய நினைவுகள் திரும்பாமல் அவதிப்பட்டு வருகிறார் அந்த அப்பாவி அமெரிக்கர்.
தகவல்: தட்ஸ்தமிழ்.காம்
0 Comments:
Post a Comment
<< Home