Thursday, December 07, 2006

Grandma stops train with Red Saree !!!

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தில் பிளவு ஏற்பட்டிருந்ததைப் பார்த்த பாட்டி தான் அணிந்திருந்த சிவப்பு வண்ண சேலையை காட்டி ரயிலை நிறுத்தினார்.

மாராபட்டு என்ற இடத்தில் சுரேஷ், தினகரன் ஆகியோர் இன்று காலை தண்டவாளம் பக்கமாக நடந்து சென்றபோது அதில் பிளவு ஏற்பட்டிருப்பதைக் கண்டனர். அந்த நேரத்தில் தூரத்தில் Trivandrum Super Fast Express வந்து கொண்டிருந்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இளைஞர்கள் தவித்தபோது அந்த வழியாக சிவப்பு சேலை அணிந்த ராணி (வயது 63) என்ற முதிய பெண் வந்தார். அவரிடம் விஷயத்தைக் கூறியவுடன், உடனே தனது சேலையை காட்டியபடி தண்டவாளத்தின் அருகே ரயில் வரும் திசையில் ஓடினார்.

இதைப் பார்த்த என்ஜினின் டிரைவர் ஏதோ விபரீதம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து ரயிலை அவசரமாக நிறுத்தினார். இதையடுத்து அந்த வழியாக வந்த எல்லா ரயில்களும் நிறுத்தப்பட்டன.

ரயிலை நிறுத்த பாட்டிக்கும், அந்த இளைஞர்களுக்கும் ரயில் டிரைவரும் பயணிகளும் நன்றி தெரிவித்தனர்.

Source: Thatstamil.com

4 Comments:

At 7:38 AM, Blogger oosi said...

testing

 
At 8:37 AM, Blogger வெங்கட்ராமன் said...

பாட்டி சொல்ல தட்டாதேங்கறது எவ்வளவு சரியானது . . . . ..

 
At 11:13 AM, Blogger Sivabalan said...

பாராட்டக்கூடிய விசயம்!!

 
At 11:17 AM, Blogger நாமக்கல் சிபி said...

பாராட்டப்பட வேண்டிய விஷயம்...

அவரின் சமயோஜித புத்தியினால் எத்தனை உயிர்கள் தப்பித்தன... அந்த இளைஞரும் பாராட்டப்பட வேண்டியவரே...

விபரீதத்தை உணர்ந்து வண்டியை நிறுத்திய ஓட்டனருக்கும் பாராட்டுக்கள்

 

Post a Comment

<< Home

Powered by Blogger