Wednesday, September 20, 2006

Internet ல் இப்படியும் சம்பாதிக்கலாமோ !!!

இமெயில் மூலம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக, நைஜீரியா நாட்டு இளைஞர் கோவையில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

கோவை மாநகரக் குற்றப் பிரிவு போலீஸôர் கூறியது:

கோவை என்.எச். சாலையைச் சேர்ந்த தொழிலதிபர் அலெக்ஸ் ஜார்ஜ் (51). இமெயிலில் இவரைத் தொடர்பு கொண்ட கோபி என்பவர், வெளிநாடு வாழ் இந்தியர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

கோவையில் தொழில் தொடங்க விரும்புவதாகவும் அதற்காக ரூ.20 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அந்தத் தொழிலை கவனித்துக் கொள்ளுமாறு, அலெக்ஸ் ஜார்ஜுடம் கேட்டுக் கொண்டாராம். இதற்கு அலெக்ஸ் ஜார்ஜும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, ரூ.20 கோடியை விமானம் மூலம் கண்டெய்னரில் அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளார்.

இதன்பின், அலெக்ஸ் ஜார்ஜை தொடர்பு கொண்ட கோபி, ரூ.20 கோடியை கண்டெய்னரில் அனுப்ப செலவாகும் ரூ.10 லட்சத்தை மும்பையில் உள்ள தனது ஏஜெண்ட் மூலம் தனக்கு அனுப்பி வைக்கும்படி கூறினாராம்.

இதை நம்பிய அலெக்ஸ் ஜார்ஜ், மும்பை சென்று கோபி குறிப்பிட்ட 3 பேரிடம் ரூ.10 லட்சத்தைக் கொடுத்துள்ளார். இச்சம்பவம் 23.8.2006-ல் நடந்தது.

இதன்பின்பும் ரூ.20 கோடியை அனுப்பி வைக்கவில்லையாம். ஆனால், கூடுதலாக ரூ.ஒரு லட்சம் கேட்டுள்ளார் கோபி. இதனால் சந்தேகம் அடைந்த அலெக்ஸ் ஜார்ஜ், பணத்தை நேரில் வந்து வாங்கிக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

அதன்படி, கோபியின் உதவியாளர் எனக் கூறி விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை கோவை வந்த இளைஞரைப் பிடித்து போலீஸில் அலெக்ஸ் ஜார்ஜ் ஒப்படைத்தார்.

இதுதொடர்பாக, வழக்குப் பதிந்து அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மைக்கேல் (31) என்பது தெரியவந்தது.

மைக்கேலை கைது செய்த போலீஸôர், இமெயில் மூலம் ரூ.10 லட்சத்தை ஏமாற்றிய கோபி மற்றும் மும்பையில் அப் பணத்தை வாங்கிய ஏஜெண்ட்கள் 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தகவல் : தினமணி

3 Comments:

At 9:14 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

நைஜீரியாவிலிருந்து இதுபோல ஸ்காம்கள்பல நடத்தப் படுகின்றன. லாட்டரியில் வெற்றிபெற்றுவிட்டீர்கள் என்றெல்லாம் வரும் மயில்கள் பல அங்கிருந்துதான் வருகின்றன.

 
At 11:53 AM, Blogger oosi said...

சிறில் அலெக்ஸ் ...நானும் பார்த்து இருக்கிறேன் .. ஆனாலும் இப்படியா ஏமாறுவார்கள்?

 
At 3:35 PM, Blogger மஞ்சூர் ராசா said...

எவனோ ஒருத்தன் இமெயில் 10 லட்சம் கொண்டுபோய் யாருக்கோ குடுன்னு சொன்னா இந்த ஆளும் கொண்டு போய் கொடுத்திருக்காருன்னா, இதெ என்ன சொல்றது.... ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எல்லாம் பேராசைதான் காரணம்.

 

Post a Comment

<< Home

Powered by Blogger