Thursday, September 28, 2006

திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க: J அறிக்கை




விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2001 பேரவைத் தேர்தலில் திமுக சின்னத்தில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொல் திருமாவளவன், திமுக-வுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக அதிலிருந்து விலகி அதிமுக அணியில் இணைந்தார்.

இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைந்து தேர்தலைச் சந்தித்தது.

சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். சட்டப் பேரவையில் திமுகவுடன் இணக்கமான போக்கையே அவர்கள் மேற்கொண்டனர். இலவச கலர் டி.வி. வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் அக்கட்சியின் உறுப்பினர் செல்வம் பங்கேற்றார்.

இருப்பினும் ஆளும் திமுகவை எதிர்த்து முதலாவதாக அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்திலும், அண்மையில் சிக்குன் குனியா நோயைக் கட்டுப்படுத்த தவறியதற்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் ஜெயலலிதாவுடன் இணைந்து திருமாவளவன் பங்கேற்றார்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பேச்சு நடத்தி அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இடங்களும் ஒதுக்கப்பட்டன.

""போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்றும், இருப்பினும் ஒதுக்கப்பட்டதை திருப்தியோடு ஏற்றுக் கொள்வதாக,'' திருமாவளவன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் திடீரென புதன்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்ததோடு, அக்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதியை அறிவாலயத்தில் அவர் சந்தித்தார். இதனடிப்படையில் திமுக போட்டியிடும் இடங்களில் சில விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சகோதரர் திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க. சகோதரி என்ற முறையில் அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான்: ""ஆத்திரமும் அவசரமும் அரசியலில் என்றும் பலன் தராது''.

Courtesy : Dinamani

3 Comments:

At 8:03 AM, Blogger ஜயராமன் said...

என்ன பாசம்!! என்ன கனிவு!! என்ன விட்டுக்கொடுக்கும் பெரிய புத்தி!! என்ன ஒரு அரசியல் முதிர்ச்சி!! என்ன ஒரு தேர்ந்த பக்குவம்!!! என்ன ஒரு அழகான கருணை பொங்கும் உள்ளம்!!!

ஆகா, நான் பெற்றேன் பாக்கியம். இம்மாதிரி தலைவன் (தலைவி) இனி இந்த பாரினில் இல்லை.

வாழ்க வளமுடன்!!

நன்றி

 
At 8:05 AM, Anonymous Anonymous said...

Hai Sister JJ!

dont try to cheat to Leopards.
We never try to eat Grass.

 
At 11:05 AM, Blogger oosi said...

வருகைக்கு நன்றி ... ஜயராமன் !!!

 

Post a Comment

<< Home

Powered by Blogger