Saturday, September 30, 2006

Tamil Actress Srividya in Hospital - Advanced Cancer

Srividya passes away

நடிகை ஸ்ரீவித்யா புற்று நோயால் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.

ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர் ஸ்ரீவித்யா. சிவாஜி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஏராளமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீவித்யா, மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஆவார்.



ஸ்ரீவித்யா கடந்த 2 ஆண்டுகளாகவே வெளியில் எங்கும் காண முடியவில்லை. படங்களிலும் அவர் நடிக்கவில்லை. மலையாள டிவி தொடர் ஒன்றில் நடித்து வந்த அவர் அதிலிருந்தும் விலகி விட்டார். அத்தொடரும் நிறுத்தப்பட்டு விட்டது.

Click here for India Movie News

சென்னையைக் காலி செய்து விட்டு கேரளாவுக்கு இடம் பெயர்ந்த ஸ்ரீவித்யாவுக்கு என்ன ஆனது என்பதே தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் ஸ்ரீவித்யா, உடல் நிலம் மோசமாகி கேரளாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியானது. ஆனால் எந்த மருத்துவமனை என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அந்த விவரம் தெரிய வந்துள்ளது.



கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் ஸ்ரீவித்யா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவும், அது உச்சத்தை அடைந்திருப்பதாகவும், இதனால் அபாய கட்டத்தில் ஸ்ரீவித்யாவின் உடல் நலம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீவித்யாவின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் கடுமையாக முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கணவரை விட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்ட ஸ்ரீவித்யா, உற்றார், உறவினர்களுடனும் சேராமல் தனித்தே வாழ்ந்து வருகிறார்.

தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீவித்யாவுக்கு மலையாள நடிகரும், எம்.எல்.ஏவுமான கணேஷ்குமார்தான் உதவியாக இருந்து வருகிறார். ஸ்ரீவித்யாவின் நிலை குறித்து கணேஷ்குமார் கூறுகையில், ஸ்ரீவித்யா எனக்கு தாய் போன்றவர். அவரது உடல் நிலை மோசமாக உள்ளது. அவரைக் காப்பாற்ற கடுமையாக முயன்று வருகிறோம் என்றார்.

Courtesy : Thatstamil.com

10 Comments:

At 11:37 PM, Blogger  வல்லிசிம்ஹன் said...

நன்றி. அருமையான நடிப்புத்திறன்
கொண்டவர் ஸ்ரீ வித்யா.
தனி வாழ்க்கை இப்படியானது வருத்தம்.
நலம் பெற பிரார்த்திக்கலாம்.

 
At 11:38 PM, Blogger துளசி கோபால் said...

வருத்தமான செய்தி.
எனக்குப் பிடித்த மனிதரில் அவரும் ஒருவர்.

 
At 1:21 AM, Blogger G.Ragavan said...

ஸ்ரீவித்யாவின் உடல்நலம் முன்னேறி குணம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

 
At 10:47 AM, Blogger மங்கை said...

நல்ல நடிகை.. அவர் குணம் அடைய கடவுளை பிரார்த்திபோம்

மங்கை

 
At 12:10 PM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

விரைவில், நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

 
At 5:25 PM, Anonymous Anonymous said...

God must be crazy

 
At 3:53 AM, Blogger மணியன் said...

அழகான பேசும் கண்களால் நடிப்பில் சிகரம் எட்டிய நடிகையின் தனிவாழ்வு மிகவும் துன்பமயமாக இருந்தது. இனியாவ்வது துன்பங்கள் விலகவேண்டும் என்று இறைவனை இந்த்த இரசிகன் வேண்டுகிறான்.

 
At 9:33 AM, Blogger VB said...

May Srividya get relief from the disease.

She is a great actress....one of the few natural performers who can excel in any genre...

 
At 11:46 AM, Anonymous Anonymous said...

Actress Sri Vidya passes away.
Thiruvananthapuram: Veteran south Indian actress Sri Vidya passed away at a private hospital in Kerala Thursday evening after suffering from cancer. She was 53

 
At 11:47 AM, Anonymous Anonymous said...

Actress Sri Vidya passes away.
Thiruvananthapuram: Veteran south Indian actress Sri Vidya passed away at a private hospital in Kerala Thursday evening after suffering from cancer. She was 53

 

Post a Comment

<< Home

Powered by Blogger