Thursday, October 19, 2006

Actress Srividya dies of Heart Attack !!!

நடிகை ஸ்ரீவித்யா நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53.
நடிகை ஸ்ரீவித்யா கடந்த சில வருடங்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். தமிழ் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு மலையாள படங்களிலும்

டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கு நோய் தீவிரமடைந்ததால் திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ உத்ராடம் திருநாள் தனியார் Hospital லில் சேர்க்கப்பட்டார்.



கடந்த வாரம் நடிகர் கமல்ஹாசன் அவரை பார்த்தார். நேற்று மாலை ஸ்ரீவித்யாவின் உடல் நிலை மோசமடைந்தது. இரவு 8 மணிக்கு ஸ்ரீவித்யாவின் உயிர் பிரிந்தது.
இன்று மாலை அவரது உடல் திருவனந்த புரத்தில் அடக்கம் செய்யப் படுகிறது.
பிரபல carnatic இசைப் பாடகி எம்.எல். வசந்தகுமாரியின் மகளான ஸ்ரீவித்யா , தமிழில் திருவருட் செல்வர் என்ற படத்தில் அறிமுகமானார். அபூர்வராகங்கள் படத்தின் மூலம் அவரது புகழ் உயர்ந்தது. பல மொழிகளில் 900 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

Related Posts:
Kamal Visits Srividya at the Hospital
Srividya Admitted in Hospital

Source: Dinakaran

7 Comments:

At 1:22 PM, Blogger Sivabalan said...

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

 
At 1:40 PM, Blogger Boston Bala said...

Great spontaneous actress

: (

 
At 2:31 PM, Anonymous Anonymous said...

Yes...She was a great actress though she had a rough personal life.

 
At 2:34 PM, Blogger ராஜாதி ராஜ் said...

அவரின் ஆன்மா ஷாந்தி அடைவதாக...வித்யா பட்டம்மளின் மகள் அல்லவா?
-Raj.

 
At 2:37 PM, Blogger துளசி கோபால் said...

எனக்குப் பிடிச்ச மனிதர்களில் இவரும் ஒருவர்.

இவரின் ஆன்ம சாந்திக்கு இறைவனை வேண்டுகின்றேன்.

 
At 2:40 PM, Blogger oosi said...

rajadhi raj ...


ஸ்ரீவித்யா, மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஆவார்.

இங்கே பார்க்கவும்

 
At 8:04 PM, Blogger  வல்லிசிம்ஹன் said...

நல்ல நடிகை. அநியாயமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை விரயமானது.

இனிமேலாவது சாந்தி அடையட்டும்.

 

Post a Comment

<< Home

Powered by Blogger