Friday, December 08, 2006

Vijaykanth : தமாசு !!!

சட்டமன்றக் கூட்டம் நடக்கும்போது அங்குள்ள செய்தியாளர்கள் அறைக்கு அமைச்சர்களோ அல்லது எம்எல்ஏக்களோ திடீரென வந்து நிருபர்களிடம் கொஞ்ச நேரம் அரட்டை அடித்துவிட்டுப் போவது வழக்கம்.

மிக கேசுவலாக, ஆப்தரெக்கார்டாக சில தகவல்களை பகிர்ந்து கொண்டு போவார்கள்.

அதே போல சட்டசபைக்கு புதியவரான விஜய்காந்தும் பிரஸ் ரூமுக்குள் வந்தார். அவரை நல்லபடியாகவே வரவேற்றனர் நிருபர்கள். அப்போது அவரிடம் ஒரு நிருபர், தமிழகத்தின் சட்டம்ஒழுங்கு எப்படி இருக்கு என்று 'எதார்த்தமாக' கேட்டார்.

இதற்கு 'பதார்த்தமாக' ஏதாவது பதில் சொல்லியிருக்கலாம் அல்லது சீரியஸாகவாவது ஏதாவது பதில் சொல்லியிருக்கலாம். அதை விட்டுவிட்டு கேள்வி கேட்டவர் மீதே பாய்ந்தார் விஜய்காந்த். (நிருபர்கள் மீது விஜய்காந்த் பாய்வது இது புதிதல்ல என்பது வேறு விஷயம்)

இப்படி எங்கிட்ட கேள்வி கேட்க உங்களுக்கு வெக்கமாயில்லையா? நான் ஒரு பத்திரிக்கை நடத்தி ஒரு விஷயத்தை எழுத முடியாத நிலை இருந்தா, அந்த பத்திரிக்கைøயையே நிறுத்திடுவேன் என்று சினிமா டயலாக் மாதிரி சம்பந்தமே இல்லாமல் பேசினார்.

சும்மா இருந்த தங்களை தேடி வந்து வெட்டியாக திட்டிய விஜய்காந்தை 'ரவுண்டில் விட' நினைத்த இன்னொரு நிருபர், நீங்க சட்டசபைக்கு குடிச்சிட்டு வர்றதா ஜெயலலிதா சொல்றாங்களே, என்றார்? அதான்.. பக்கத்துல இருந்து ஊத்தி குடுத்தீங்களானு கேட்டுட்டேனே. அப்புறம் என்ன? என்று அவரை முறைத்தார்.

அதெல்லாம் சரி, நேரடியா ஏதாவது பதில் சொலுங்க.. என்று நிருபர்கள் கேட்டவே, ஜெயலலிதா இப்படி பேசுனதுக்காக மக்கள் என்ன போராட்டமா நடத்துறாங்க? என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசினார் விஜய்காந்த்.

உங்கள ஜெயலலிதா திட்டுனதுக்கு மக்கள் ஏதுக்கு போராட்டம் நடத்தனும், நீங்க தானே நடத்தனும் என்று ஒரு நிருபர் மடக்கவே என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தார்.

சரி விடுங்க, நீங்க போதையில சட்டசபைக்கு வர்றதுண்டா என்று விடாமல் இன்னொரு நிருபரும் கேட்கவே, என்ன பேசுறீங்க? யாரையும் நம்பி நான் இல்ல என்று டென்சனாகி மீண்டும் கோபமானார்.

நாங்க கூப்பிட்டோமா, நீங்களா தானே பிரஸ் ரூமுக்குள்ள வந்தீங்க.. சாதாரணமா தானே கேள்வி கேட்டோம், கேட்குற கேள்விக்கு பதில் சொல்ல முடிஞ்சா சொல்லுங்க.. இல்லாட்டி கிளம்பி போயிட்டே இருங்க, இங்க வந்துட்டு எங்களை என்ன திட்றது என்று நிருபர்கள் பிலுபிலுவென பிடித்துக் கொள்ளவே, வாயை குடுத்து மாட்டிக்கிட்டோமா என்று வடிவேலு மாதிரி பம்மி அங்கிருந்து மெதுவாக வெளியேறினார் விஜய்காந்த்.

'அக்ரி'யின் அக்லி பேச்சு:

சட்டமன்றத்தில் அதிமுகவின் முக்கிய எம்எல்ஏக்களில் ஒருவரும் சசிகலா குடும்பத்துக்கு ரொம்ப வேண்டியவருமான 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தியின் சீட் திடீரென மாற்றப்பட்டது. அந்த சீட் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ சண்முகத்துக்கு ஒதுக்கப்பட்டது.

இது குறித்து சபாநாயகர் ஆவுடையப்பனின் நிருபர்கள் கேட்டபோது,

பெண் எம்எல்ஏக்களுக்கு அருகில் அமர்ந்திருந்த 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி ஆபாசமாக பேசுவதாகவும், தங்களை கிண்டல் செய்வதாகவும், கெட்ட வார்த்தையெல்லாம் பேசுவதாகவும் பெண் எம்எல்ஏக்கள் புகார் தந்ததனர். இதனால் தான் அவரை இடம் மாற்ற வேண்டியதாகிது என்று உண்மையை வெளியில் சொன்னார்.

இதனால் சபாநாயகர் மீது கடுப்பில் இருக்கும் 'அக்ரி' அதை முல்லைப் பெரியாறு தொடர்பான விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் விவாதம் நடந்தபோது காட்டினார்.

அரசுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தபோது, 'அக்ரி' மட்டும் சபாநாயகர் ஒழிக என்று தனியே சவுண்டு விட்டார்.

இதைப் பார்த்த சபாநாயகர் ஆவுடையப்பன் சிரித்தபடியே, நேற்றைய கோபத்தின் (சீட் மாற்றியதற்கான காரணத்தைச் சொன்னது) எதிரொலியோ? என்று கேட்டவே அக்ரியைப் பார்த்து சட்டமன்றமே சிரித்தது.

Source: Thatstamil.com

2 Comments:

At 10:17 AM, Anonymous Anonymous said...

Super !!

 
At 12:19 AM, Anonymous Anonymous said...

Shows the immaturity of vijaykanth...

 

Post a Comment

<< Home

Powered by Blogger