சொறி சிரங்கு, அரிப்பு, ரத்தம், எரிச்சல் - TN முதல்வர் பதில்
கேள்வி: திரையரங்கக் கட்டணக் குறைப்பு குறித்து சில பத்திரிக்கைகள் சென்னையில் அதிகப்படியான வசதிகள் கொண்ட இரண்டே திரையங்குகளுக்கு மாத்திரம், உயர் வகுப்புக்கு மட்டும் கட்டணம் உயர்த்தியிருப்பதை பெரிதுபடுத்தி, அரசு சினிமாக்காரர்களுக்கு பணிந்தது என்றும், அரசு பல்டி என்றும் செய்தி வெளியிட்டுள்ளார்களே?
கருணாநிதி: இந்த அரசு ஏழை, எளிய சாதாரண சாமான்ய மக்களின் நலன் கருதி, திரையரங்கு கட்டணங்களைக் குறைத்து ஆணை பிறப்பித்ததிலிருந்து அணுவளவும் மாறவில்லை. அந்த ஆணை அப்படியே செயல்படுத்தப்படுகிறது.
அரசு குறியிட்டு வகுத்துள்ள 15 அல்லது 10 வசதிகள் கொண்ட திரையரங்குகள் இரண்டே இரண்டு மட்டும் சற்று கூடுதலாக அதாவது அடிப்படைக் கட்டணம் ரூ. 10 என்றும், அதிகபட்சக் கட்டணம் ரூ. 85 லிருந்து 120 ரூபாய் என்றும் கட்டணம் வசூலித்துக் கொள்ள சிறப்பு வாய்ப்பு வழங்கியிருக்கிறது.
குறைந்த கட்டணப் பயனை இரண்டாயிரம் திரையரங்குகளுக்கு செல்வோர் அனுபவிப்பதற்கு அரசின் 2வது அறிவிப்பால் எந்தத் தடையும் இல்லை. இதை விஷயமறிந்தோர் உணர்ந்தே இருக்கின்றனர்.
அவசரப்படுவோர், ஆத்திரத்தில் அம்மிக் குழவியால் குத்திக் கொண்டு அவதிப்பட்டால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? சொறி சிரங்கு பிடித்தவன், அரிப்பு தாங்காமல் உடம்பை பிராண்டிக் கொள்வான். அப்போது சுகமாக இருக்கும். சிறிது நேரம் கழித்து ரத்தம் கசியும், எரிச்சல் எடுக்கும். அப்போது பாவம், அவன் துடிப்பான். என்ன செய்வது, சிரங்கு பிடித்தவர் நிலையில் சிலர் இருக்கிறார்கள்.
பல்டி என்றும் பணிந்தது என்றும் தலையைப் பிய்த்துக் கொண்டு தலைப்பு போடுகிறார்கள். உண்மை தெரிந்தும் ஊமையாகி விடுகிறார்கள். அவர்களுக்காக அனுதாப்படுவோம்.
Source: Thatstamil.com
4 Comments:
கலைஞர் தமிழ்மணத்தில் இருந்தால் விலக்கிவிடுவார்கள்.
:-))
தேன்கூட்டில் சேர்க்கவே மாட்டார்கள்...!
அப்படி தலைப்பு வைத்தது எந்தப் பத்திரிக்கை?
ரசிக்க சிந்திக்க நல்ல கமெண்ட்
பின்னூட்டமிட்ட எல்லா அனானிகளுக்கும் நன்றி !!!
/*அப்படி தலைப்பு வைத்தது எந்தப் பத்திரிக்கை?
*/
தலைப்பு எந்த பத்திரிக்கையும் வைக்கலை. நான் இந்த பதிவுக்காக வைத்தது.
Post a Comment
<< Home