Saturday, May 20, 2006

கலைஞர் காலில் விழும் முடிவை விஜயகாந்த் மாற்றியது ஏன்?

கடந்த வார குமுதம் இதழில் .....















ஆனால் உண்மையில் சந்திப்பு நட்ந்த போது ....




8 Comments:

At 9:11 AM, Blogger மாயவரத்தான் said...

வடிவேலு பாணியில கைய காலா நெனச்சிருப்பாரோ?!

 
At 11:59 AM, Blogger வெற்றி said...

//கலைஞர் காலில் விழும் முடிவை விஜயகாந்த் மாற்றியது ஏன்? //

நல்ல முடிவு. ஒருவர் காலில் விழுவது மோசமான, சுயமரியாதை இல்லாத , தன் மானமற்ற செயல். அரசியல்வாதிகளின் காலில் விழும் பழக்கம் தந்தை பெரியார் கொள்கைகளுக்கே முரணானது. எனவே விஜயகாந்த் தனது முடிவை மாற்றியது பாராட்டப்பட வேண்டும். இதில் எள்ளி நகையாட ஒன்றும் இல்லை.

//நிகழ்ச்சி முடிந்ததும் விஜயகாந்த் எழுந்து சென்று கருணாநிதியின் கையை குலுக்கி முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.அமைச்சர்கள் அன்பழகன், ... ஆகியோருக்கும் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.//

நல்ல பண்பு. நாகரீகமான செயலும் கூட. கலைஞர் கருனாநிதியிடமோ அல்லது ஜெயலலிதாவிடமோ அன்றி மு.க.ஸ்ராலினிடமோ கூட இந்த அடிப்படை அரசியல் பண்போ நாகரீகமோ கிடையாது என்பது அவர்களின் கடந்த கால , சம கால செயல்களில் இருந்து புரியும். இவர்கள் எல்லோரும் இத்தகைய அரசியல் பண்புகளை விஜயகாந்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, கலைஞர் தேர்தலில் வென்று முதல்வர் ஆன போது, ஜெயலலிதா கலைஞருக்கு வாழ்த்துச் சொல்லியிருக்க வேண்டும். அது தான் நாகரீகம். அது தான் அரசியல் பண்பு. அதே போலத்தான் ஜெயலலிதா முதல்வரான போது, கலைஞர் அவர்கள் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துச் சொல்லி, சட்டசபைக்குச் சென்று முறையான எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டசபைக்குச் செல்லாமல், தேர்தலில் தன்னை வாக்குப் போட்டு வெல்ல வைத்த மக்களுக்கு சேவை செய்யாமல், மக்களின் வரிப்பணத்தில் வரும் ஊதியத்தை மட்டும் பெற்றுக்கொண்டது ,கலைஞர் அரசியல் பண்போ நாகரீகமோ இல்லாதவர் என்பதையே காட்டுகிறது. இப்படியானவர்கள் மத்தியில் விஜயகாந்தின் செயல் மிகவும் மெச்சத்தக்கது. மற்றைய அரசியல்வாதிகளை விட தான் வேறுபட்டவர் என்பதை விஜயகாந்த் தனது செயல்களின் மூலம் நிரூபித்துள்ளார். விஜயகாந்திற்கு என் வாழ்த்துக்கள். இப் பண்புகளை அவர் தொடர்வார் என நம்புகிறேன்.

 
At 4:37 PM, Blogger VSK said...

எல்லாரும் பாராட்டி விட்டீர்கள்!

இனி, சொல்ல என்ன இருக்கிறது?!!

இதுவரை சொன்னதும், செய்ததும் நன்றாகத்தான் இருக்கிறது!

தொடர வாழ்த்துகள்!

 
At 9:38 PM, Blogger மணியன் said...

தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்றம். இது எல்லா பக்கமும் தொடருமானால்........ ஹும்.

 
At 11:15 PM, Blogger oosi said...

உண்மையில் மாற்றமா இல்லை நாடகமா என்று புதிராகத்தான் உள்ளது.

 
At 8:59 PM, Anonymous Anonymous said...

When MS.Jayalalitha became CM in 2001,Mr.Anbazhagan and Mr.Stalin attended the swearing in ceremony where they were not provided the seat as per the protocl. Perhaps Mr.Vetri might have forgotten this or he wants to hid this information.

 
At 10:55 AM, Blogger G.Ragavan said...

வெற்றி இங்கு குறிப்பிட்டிருக்கும் கருத்தோடு நான் முழுதும் ஒத்துப் போகிறேன்.

கருணாநிதி கூட்டத்தாரும் சரி. ஜெயலலிதா கோஷ்டியாரும் சரி. அரசியல் நாகரீகத்தின் நேரெதிர் துருவத்தில் நிற்கிறவர்கள். இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும். இவர்கள் மாறவில்லை என்றால் மக்கள் இவர்களை மாற்றி விடுவார்கள்.

 
At 10:59 AM, Blogger G.Ragavan said...

// Anonymous said...
When MS.Jayalalitha became CM in 2001,Mr.Anbazhagan and Mr.Stalin attended the swearing in ceremony where they were not provided the seat as per the protocl. Perhaps Mr.Vetri might have forgotten this or he wants to hid this information. //

அனானி. உண்மைதான். இந்த நாகரீகத்தைத்தான் இவர்களிடமிருந்து எதிர் பார்க்க முடியாதே. தினமும் கடிதம் எழுதுகிறவர், ஜெயலலிதா முதல்வர் ஆனதிற்கும் வாழ்த்தி எழுதியிருக்கலாமே. பக்கத்து மாநிலங்களில் நடக்கிறது அனானி. நான் வசிக்கும் கர்நாடகத்தில் நடக்கிறது. குமாரசாமியால் தனது ஆட்சியை இழந்த தரம்சிங், குமாரசாமிக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கிறார். ஏன் நமது நாட்டில் மட்டும் இந்தக் கொடுமையோ!

 

Post a Comment

<< Home

Powered by Blogger