Friday, May 05, 2006

MGR-க்கு மக்கள் திலகம் பட்டம் கொடுத்தது யார்?

விஜயகாந்த் என்றவுடன் நினைவிற்கு வருவது.


Votes %
பிறந்தநாள் நன்கொடை 6 5.9%

சிவந்த கண்கள் 38 37.6%

தமிழ் உச்சரிப்பு 14 13.9%

தொப்புளில் பம்பரம் 43 42.6%




Total Votes : 101




--------------------------------------------------------------------------------

நம்ம மக்களிடம் இருக்கும் குரும்பிற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது...MGR-க்கு மக்கள் திலகம் பட்டம் கொடுத்தது யார்? னு கேட்டு ஒரு poll நடத்தினா அதில் வந்தும் கிண்டல் பண்றாங்க...நானும் ஒரு தாமசுக்காக தான் "ஊசி" ங்ற choice யும் கொடுத்தேன்னு வெச்சுகோங்க.... ஆனா அதை போய் இவ்வளவு பேர் தேர்ந்து எடுப்பானேன் ? :-)

But on a serious note...poll -ல் ஆர்வமா கலந்துகிட்டவங்களுக்கு நன்றி ...மத்தவங்க சீக்கிரம் கலந்துக்கிட்டு உங்க எண்ணங்களை தெரியப்படுத்துங்க...நாளையோட உங்க வாய்ப்பு முடிஞ்சிரும்...அப்புறம் என் மேலே வருத்த பட கூடாது ....

POLL CLOSE UPDATE:


MGR-க்கு மக்கள் திலகம் பட்டம் கொடுத்தது யார?

சரியான விடையான தமிழ்வாணனை தேர்ந்தெடுத்த 10 பேர்கள் தங்களை தாங்கள் ஷொட்டி கொள்ளலாம்.

Votes %
கருணாநிதி 21 30.0%

புலமை பித்தன் 20 28.6%

தமிழ்வாணன் 10 14.3%

ஊசி 19 27.1%


Total Votes : 70

23 Comments:

At 6:41 PM, Anonymous Anonymous said...

aahaa... enna arumaiyaana poll....vaazhga vaLarga...

 
At 7:11 PM, Blogger Vassan said...

கிருபானந்தவாரியார் கொடுத்ததாக, படித்ததாக பழைய ஞாபகம் !

 
At 7:39 PM, Blogger மாயவரத்தான் said...

அட.. அப்போ நீங்க கொடுக்கலயா? ஹூம்.. என்னோட ஒரு வோட்டு வேஸ்ட்டா?

 
At 9:20 PM, Blogger Karthik Jayanth said...

பழைய பல்லவர் கால ஏடுகளில் இருந்து படிச்சி, நீங்க குடுத்த பட்டம்ன்னு நான் நினைச்சேன் :-)

 
At 9:35 PM, Blogger oosi said...

அனானி...வருகைக்கு நன்றி.

வாசன்...கிருபானந்தவாரியார் கொடுத்தது பொன்மன செம்மல் பட்டம்.

மாயவரத்தான்..."புரட்சித்தலைவர்" பட்டம் யார் கொடுத்தாங்கனா கேட்டேன்??

karthik jayanth...

:-)

 
At 9:37 PM, Blogger மாயவரத்தான் said...

அது சரி.. பின்னூட்டத்திலே அது என்ன 'அன்புடன் மாயவரத்தான்'..? நான் 'அன்புடன்' எல்லாம் சொல்லல! :)

 
At 9:50 PM, Blogger oosi said...

/*
அது சரி.. பின்னூட்டத்திலே அது என்ன 'அன்புடன் மாயவரத்தான்'..? நான் 'அன்புடன்' எல்லாம் சொல்லல! :)
*/
காதலுடன் -னு போட்டா நல்லா இருக்காது ஓய் ...

உங்கள் பதிவு ஏன் இன்று முதல் எழுத்தக்கள் எல்லாம் பூச்சி மாதிரி தெரியுது? ...இது எனக்கு மட்டும் தானா..இல்லை வேறு யாராவதும் சொன்னார்களா?

 
At 9:57 PM, Blogger மாயவரத்தான் said...

எனக்கும் அப்படி தான் தெரியுது. ஒவ்வொரு தபாவும் மேல போய் unicode அப்படீன்னு மாத்தி தொலைக்க வேண்டியிருக்கு. தெரிஞ்சவங்க எப்படி மாத்துறதுன்னு சொல்ல மாட்டேன்றாங்க. (அப்படியாச்சும் இவன் தொந்தரவு இல்லாம இருந்தா சரிதான்னு நெனப்பு!)

 
At 10:24 PM, Blogger dondu(#11168674346665545885) said...

உங்கள் தேர்தல் கான்ஸப்டில் ஒரு பொருட் குற்றம் உள்ளது. அதாவது நடந்து போன ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது அதற்கு ஒரு விடைதான் இருக்க முடியும்.

சரியான விடையை மக்கள் கூறவில்லை என்பதால் தவறு என்று கூறிவிட முடியுமா? இதற்கு மாறாக எவ்வளவு பேர் சரியான விடை கூறுகிறார்கள் என்று பார்ப்பதில் அதிகம் பொருளுள்ளது.

உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டத்தை இட்டான் என்பதைப் பார்க்க போட்டோ மற்றும் எலிக்குட்டி சோதனையில் சரியான பிளாக்கர் எண் 4800161 தெரிதல் என்ற இரண்டு சோதனைகளும் பாசிடிவாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும். பிறகே மட்டுறுத்தவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 10:26 PM, Blogger வெற்றி said...

ஊசி,
மதிப்புக்குரிய கலைஞர் மு.கருனாநிதி அவர்கள் தான் இப் பட்டத்தைக் கொடுத்திருக்கலாம் என் நினைக்கிறேன்.
கலைஞர் மு.கருனாநிதி அவர்கள் தான் கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு 'கவிஞர்' என்ற பட்டத்தைக் கொடுத்ததாக கவியரசர் எழுதியிருந்ததை எங்கோ வாசித்த ஞாபகம்.

 
At 10:58 PM, Blogger மாயவரத்தான் said...

கவியரசு கண்ணதாசனுக்கு கருணாநிதி 'கவிஞர்'ன்னு பட்டம் கொடுத்தாரா? பின்ன..அவருக்கு என்ன 'இசையமைப்பாளர்'ன்னா பட்டம் கொடுக்க முடியும்? தாங்க முடியலடா சாமி.

 
At 11:00 PM, Blogger oosi said...

வருகைக்கு நன்றி டோண்டு ராகவன் அவர்களே...நீங்கள் சொல்வது மிக சரியானது. எவ்வளவு பேர் சரியான விடை சொல்கிறார்கள் என்று பார்க்கவே இந்த முயற்சி ...
மற்றபடி "சரியான விடையை" ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்க அல்ல !!!

வெற்றி...வருகைக்கு நன்றி. சரியான விடை நாளைய பதிவில்.

 
At 11:17 PM, Blogger Karthik Jayanth said...

ஊசி சார்,

நீங்களும் Go White Sox ?

அதான் சார் Chicago வா ?

 
At 11:25 PM, Blogger oosi said...

ஆமாம் கார்த்திக் Chicago தான் ஆனால் பெரிய "White Sox" fan எல்லாம் கிடையாது. நீங்களும் Chicago ?

 
At 11:29 PM, Blogger Sivabalan said...

//நீங்களும் Chicago ? // Me too!!

 
At 11:36 PM, Blogger oosi said...

படத்திலேயே தெரியுதே :-)

கண்டிப்பாக ஒரு நாள் சந்திக்க முயற்சி செய்வோம்.

வேறு யாரவது Chicago மக்கள் இருக்கீங்களாப்பா?

 
At 11:40 PM, Blogger மாயவரத்தான் said...

டோண்டு சார், உண்மையான டோண்டுவின் பின்னூட்டம் என்பதற்கு இப்போதெல்லாம் எலிக்குட்டி சோதனையெல்லாம் தேவையில்லை. 'கனாமானா' போன்ற இலக்கியத் தரம் வாய்ந்த சொற்கள் இருந்தால் அந்த இழிபிறவி என்பது எல்லாருக்கும் தெரியுமே. எனவே, இனிமேல் நீங்கள் 'எலிக்குட்டி' வாசகத்தத எழுத வேண்டாம் என்பது என்னுடைய கருத்து.

 
At 11:41 PM, Blogger மாயவரத்தான் said...

ஊசி..இப்போ என் பதிவுல ஒழுங்கா தெரியுதா?!

 
At 12:04 AM, Blogger Karthik Jayanth said...

ஊசி சார்,

நானும் Chicago தான் ..

இபோதைக்கு நீங்க, சிவபாலன் & நான், 3 பேருதான் Go White Sox

சிரில் அலெக்ஸ் சாரும் இங்க வார்றதா சொல்லி இருந்தார் .. ஆனா இன்னும் ஒன்னும் சேதி தெரியல..

 
At 12:43 AM, Blogger மாயவரத்தான் said...

இப்போ தான் கவனிச்சேன். இந்தப் பதிவை ஆன்மீகம் / இலக்கியம் வகையிலே வகைப்படுத்தியிருக்கீங்க. ரொம்ப தான் லொள்ளு உங்களுக்கு.

 
At 1:12 AM, Blogger வெற்றி said...

மாயவரத்தான்,
உண்மையிலேயே நீங்கள் மிகவும் நகைச்சுவையாளர் தான். தங்களின் சில பதிவுகளைப் படித்து இரசித்திருக்கிறேன்.
கடைசியாக நீங்கள் எழுதிய 'கடைசிக் கட்ட தேர்தல் கணிப்பையும்' படித்தேன். நல்ல நகைச்சுவையான பதிவு.

//கவியரசு கண்ணதாசனுக்கு கருணாநிதி 'கவிஞர்'ன்னு பட்டம் கொடுத்தாரா? பின்ன..அவருக்கு என்ன 'இசையமைப்பாளர்'ன்னா பட்டம் கொடுக்க முடியும்? தாங்க முடியலடா சாமி.//

கவியரசர் திரையுலகில் கொடிகட்டிப் பறக்க முன்பே, கவியரசரை தமிழ் உலகம் அறிய முன்பே, கலைஞர் அவர்கள் தான் அவருக்கு கவிஞர் பட்டத்தைக் கொடுத்தார் என்று சொல்ல வந்தேன்.

//நீங்களும் Go White Sox ?//
கார்த்திக், சிக்காக்கோவில் white sox ஜ விட Cubs தான் மக்களிடம் செல்வாக்குள்ள baseball team, Cubs ஜ சொல்லமல் விட்டு Cubs இரசிகர்களிடம் திட்டு வாங்கப் போகிறீர்கள். Bulls, Black hwaks அணிகளையும் மறந்து விடாதீர்கள்.

 
At 1:00 PM, Blogger oosi said...

poll closed.

 
At 3:13 PM, Blogger Sivabalan said...

நிச்சயம் சந்திப்போம்!!

 

Post a Comment

<< Home

Powered by Blogger