Sunday, September 24, 2006

முரசு சின்னம் காலி : Vijaykanth பாய்ச்சல்

திமுக அரசு மத்திய அரசை கைக்குள் போட்டுக் கொண்டு, சதி செய்து, உள்ளாட்சி தேர்தல் பட்டியலில் முரசு சின்னமே இல்லாத அளவுக்கு மோசடி செய்துள்ளது என்று விஜய்காந்த் கூறியுள்ளார்.



அவர் கூறுகையில்,

கட்சி தொடங்கி ஓராண்டு ஆகிவிட்டது. எங்கள் கட்சியில் தினமும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் இணைந்து வருகிறார்கள். திமுக, அதிமுகவின் மக்கள் விரோத போக்குகளால் அக்கட்சியினரும் இணைந்து வருகின்றனர்.

தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்படுகின்றன. மாற்று அரசியலை மக்கள் விரும்புவதையே இது காட்டுகிறது. என் கட்சியில் இணைபவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, மாஜி அமைச்சர்கள் கண்ணப்பன், இந்திர குமாரி போன்றவர்களும் ஊழல் குற்றசாட்டுகளில் சிக்கியவர்கள் தானே.

அவர்கள் திமுகவில் இணைத்தால் நல்லவர்களாகி விட முடியுமா? ஆனால் கு.ப.கிருஷ்ணன் போன்றவர்கள் தனித்து செயல்பட்டு வந்தவர்கள். கடலில் பல வகையான ஆறுகள் இணைகின்றன. ஆனாலும் கடலின் தன்மை மாறாது. அதுபோல என் கட்சியில் இணைபவர்கள் என் வழிக்கு வந்துவிடுவர்.

எம்எல்ஏவாக தேர்வான 100 நாட்களில், விருத்தாசலம் தொகுதியில் பள்ளி, மருத்துவமனை கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓப்பந்தம் விடப்பட்டு பணிகள் துவங்கும் நிலையில் உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசு நிதி கிடைப்பதற்கு முன் எனது சொந்த நிதியில் ஏராளமான உதவிகளை செய்துள்ளேன். ஐந்து ஆண்டுகளில் அரசு நிதி மற்றும் என் சொந்த பணத்தைக் கொண்டு, விருத்தாசலத்தை மாநிலத்தின் மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன்.

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை படைத்தாக திமுகவினர் கூறுகின்றனர். ஆனால், நான்கு மாதங்களுக்கு முன்பு 50 ரூபாயாக இருந்த ஒரு கிலோ மிளகாவத்தல் ரூ.75 ஆக உயர்ந்துள்ளது.

புளி ரூ. 36லிருந்து ரூ.42 ஆகவும், துவரம் பருப்பு ரூ. 32லிருந்து ரூ.36 ஆகவும், கடலைப் பருப்பு ரூ.26லிருந்து ரூ.40 ஆகவும், ஏலக்காய் ரூ.300லிருந்து ரூ.500 ஆகவும், கடலைமாவு மூட்டைக்கு ரூ.2,400லிருந்து ரூ.3,800 ஆகவும், கோதுமை, மைதா போன்ற பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது. இதுதான் திமுக அரசின் சாதனையா?

இலவச டிவி, நிலம் வழங்குவதாக பறைசாற்றும் முதல்வர் கருணாநிதி, இலவசமாக கேபிள் இணைப்பு கொடுப்பதாக அறிவிக்க வேண்டியது தானே. கேபிள் டிவியை அரசுடைமையாக்குவது மத்திய அரசிடம் இருப்பதாக விளக்கமளிக்கும் கருணாநிதி, மத்திய அமைச்சரøவியல் திமுக இடம் பெற்றிருப்பதை மறந்து விட்டாரா?

மத்திய அரசை வலியுறித்தி, கேபிள் டிவிகளை அரசுவுடமையாக்கி, மக்களுக்கு இலவச சேவை கிடைக்கச் செய்ய வேண்டியது தானே. உள்ளாட்சி தேர்தலில் என் பிரச்சாரம் எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.

கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்டடது. ஆனால், மத்திய அரசை கைக்குள் போட்டுக் கொண்டு திமுக அரசு சதி செய்து முரசு சின்னமே இந்த உள்ளாட்சி தேர்தல் பட்டியலில் இல்லாத அளவுக்கு செய்துள்ளனர்.

இதனால் நான் பின் வாங்கிவிட மாட்டேன். எனக்கு பின்னால் மக்கள் உள்ளனர் என அவர் கூறினார்

தகவல் : தட்ஸ்தமிழ்.காம்

4 Comments:

At 8:57 AM, Blogger Vaa.Manikandan said...

விஜயகாந்த் மேல் எனக்கு சற்று அபிமானம் இருக்கிறது. இந்த சதி எனக்கு வருத்தத்தைத் தருகிறது :(

 
At 1:11 PM, Blogger நாமக்கல் சிபி said...

பக்கா ப்ராக்டிக்கலாக பேசுகிறார்.
இப்படியே மேடையிலும் பேசனார்னா கண்டிப்பா இந்த முறையும் கலக்கிடுவார்.

மக்களின் அன்றாட தேவைகளை பற்றி பேசுவதால் மக்கள் மனதில் கண்டிப்பாக இடம்பிடிப்பார்.

முரசி சின்னம் இல்லாதது ஒரு வகைல சறுக்கல்னு பாத்தாலும் இது அனுதாப அலையை உருவாக்கும்னு அரசியல் சாணக்கியருக்கு தெரியவில்லையா?

 
At 8:52 AM, Blogger CAPitalZ said...

தல உன் மேல தான் எனக்கு முழு நம்பிக்கை. நீ வெல்லு தல. நான் வேண்டுறன் கடவுள் கிட்ட.

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/

 
At 4:15 PM, Anonymous Anonymous said...

Captain ! You are right. Price goes to Sky.

 

Post a Comment

<< Home

Powered by Blogger