Thursday, October 19, 2006

Chennai Silks Demolition : மேலும் 4 தளங்கள் காலி!!!

சென்னை தி.நகரில் உள்ள பிரபல சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் 4 மாடிகளை இடித்துத் தள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.நகர் உஸ்மான் சாலையில் பிரபலமான சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் 7 மாடிக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டத்தின் பூமிக்கடியில் உள்ள தரைத் தளம் உள்ளிட்ட 4 தளங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் குற்றம் சாட்டியது.

அனுமதியின்றி கட்டப்பட்ட நான்கு தளங்களையும் இடிக்கவும் அது முடிவு செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது சென்னை சில்க்ஸ். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 4 மாடிகளையும் இடிக்கலாம் என அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து சென்னை சில்க்ஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சேமா, பி.கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.

அதில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே என்று கூறிய நீதிபதிகள் அனுமதியின்றி கட்டப்பட்ட 4 தளங்களையும் இடிக்க உத்தரவிட்டனர்.

ஏற்கனவே இதே கட்டத்திற்கு அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த சென்னை சில்க்ஸ் நிறுவனத்திலும் அனுமதியின்றி 3 தளங்களை கட்டியிருந்தனர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார். அந்த தளங்களையும் இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

Related Post :
Chennai Silks தப்பிக்குமா?



தகவல்: தட்ஸ்தமிழ்.காம்

0 Comments:

Post a Comment

<< Home

Powered by Blogger