Vijaykanth சூளுரை : கொசுவை ஒழித்து கட்டுவேன்
எங்களுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள் ஒரே ஆண்டில் சென்னையில் கொசுக்களை ஒழித்துக் காட்டுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டேன்.
நான் தனித்து நிற்பதுபோல் மற்ற கட்சிகளும் போட்டியிட தயாரா என்று கேட்டேன் யாரும் பதில் சொல்லவில்லை.
இப்போது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - திமுகவுக்கு மாற்றாக எங்கள் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கவே வந்துள்ளேன்.
எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். ஒரே ஆண்டில் சென்னையில் கொசுக்களை ஒழித்துக் காட்டுவேன். தவறு என்றால் ஒப்புக் கொள்வேன்.
மாநகராட்சி பள்ளிகளை தனியார் பள்ளிகள் போல் தரமானதாக மாற்றிக் காட்டுவேன்.
ஆளும் கட்சியாக வந்தால்தான் மாநகராட்சிக்கு நிதி கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். மாநகராட்சிக்கு என்று தனி நிதி இருக்கிறது.
மத்திய அரசு தரும் நிதியும் இருக்கிறது.
நூற்றுக்கு நூறு என்று டி.வி.யில் விளம்பரம் செய்கிறார்கள். மக்கள் அப்படி சொல்லவில்லை. டி.வி. விளம்பரத்துக்கு கொடுக்கப்படும் பணம் நமது வரிப்பணம்.
காட்டு யானையைத்தான் நாம் பார்க்கவேண்டும். சின்ன முயலைப் பற்றி சிந்திக்கத் தேவையில்லை என்கிறீர்கள்.
நீங்களும் முயலாகவும் எலியாகவும் பூனையாகவும் இருந்ததை யோசித்துப் பாருங்கள். சின்னத்தை முடக்கிய பின்னரும் நாங்கள் தனித்து நிற்கிறோம். நீங்கள் சின்னம் இல்லாமல் நிற்க தயாரா?
எனக்கு மக்கள்தான் எஜமானர்கள். திமுகவும் அதிமுகவும்தான் மாறி மாறி ஆட்சி செய்வார்கள் என்று பட்டாப் போட்டு கொடுக்கவில்லை. அவர்கள்தான் ஆட்சிக்குத் தொடர்ந்து வரவேண்டுமா?
உண்மையைப் பேசினால் என்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்கிறார்கள். நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. ஆறிலும் சாவு நூறிலும் சாவு எனவே உண்மையைச் சொல்ல அஞ்சமாட்டேன் என்றார் விஜயகாந்த்.
தகவல் : தினமணி
2 Comments:
முழுவதுமாக என்பது கொஞ்சம் அதிகமாக தோனுகிறது!!
ஆனாலும் 80 சதவீதம் குறைக்க முடியும்.
முதலில் தண்ணீர் தேங்குவதை இல்லாமல் பண்ணினாலே குறைந்துவிடும்.
சரியான கழிவு நீர் செல்லும் வழியை ஏற்படுத்தவேண்டும்.
Mr.Vijayakanth says that he is not afraid of telling the truth. At first let him tell whether he has shown all the income received for acting in his income tax returns. Then he can talk about the other truths.
Post a Comment
<< Home