Sunday, January 21, 2007

உடன்பிறப்பே வெட்கம் கொள் !!!

Dayalau Saibaba Karunanithi

19 Comments:

At 11:39 AM, Anonymous Anonymous said...

இதுல வெட்கம் கொள்ள ஒன்றும் இல்லை ஊசி சார்.

ஒரு விதத்தில் Mr.கருணாநிதி பெருமைப் பட வேண்டிய விஷயம். அவர் கொள்கையை அவர் இல்லத்தார் மீது திணித்து ஆட்டிப் படைக்காமல், சுதந்திரம் கொடுத்திருக்கிறாரே. தூள்!

(ஆனா, ஊருக்கு தான் உபதேசம், மஞ்சள் துண்டு, பாபா அருள் இதெல்லாம் அவங்களுக்கு மட்டும் ஒ.கே.. கழகக் கண்மணிகள் மட்டும் பகுத்தறிவுல phd வாங்கணும்.. நல்ல கூத்து :) )

நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா என்ன வேணா பண்ணலாம் ஊசி.. என்ன வேணா பண்ணலாம்... டன் ட டன் ட டன் ட டன்.. டன் ட டன்.. ட ட ட டன்.

:)))))))

 
At 12:32 PM, Blogger oosi said...

வருகைக்கு நன்றி SurveySan...

இரு வேறு கருத்துக்கள சொல்லிருக்கீங்க. Anyways கட்சியினர் மீது மட்டும் கருத்துக்களை திணிக்கலாமா?

Dayanithi அரசியலுக்கு குதிக்க மட்டும், அவர்களுக்கு 'இன்னாருடைய' பையன், 'இன்னாருடைய' பேரன் So அந்த influence இருக்கும் இல்லையான்னு கேள்வி கேக்கறது? அதே logic இதுக்கு கிடையாதா?

காலக் கொடுமைடா சாமி...

Vaiko, Ramdoss எல்லாம் எவ்வளவோ மேல் ..

 
At 1:48 PM, Blogger வெற்றி said...

தமிழறிஞர் திருமுருக கிருபானந்த வாரியாரைக் கொலை செய்ய முயற்சித்த தமிழ்மானச் சிங்கம் கருணாநிதி, மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் ஒருவரோடு சேர்ந்து அவருக்கு விளம்பரம் கொடுப்பதில் இருந்தே தெரிகிறது பெரியாரின் கொள்கைகள் மேலிருக்கும் கருணாநிதியின் பற்று.

கருணாநிதி போன்றவர்கள் திராவிடக் கழகத்தில் இருந்து பிரிந்து கட்சி தொடக்கிய போது பெரியார் கடுமையாக எதிர்த்தார். ஏனெனில் அவர் கருணாநிதி போன்றவர்களை
நன்றகவே அறிந்து வைத்திருந்தார். இவர்கள் அரசியலுக்கு வந்தால் பதவிக்காக கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு குத்துக்கரணம் போடும் கூட்டம் என்று நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்.

பெரியாரின் தீர்க்கதரிசனம் உண்மையில் வியப்பளிக்கிறது. சாதிகள் வேண்டாம் என்று சொன்னவர் பெரியார். தேர்தலில் வெல்லவேண்டும் என்பதற்காக சாதிக்கட்சிகளைத் தேடிப்பிடித்து கூட்டு வைத்தவர் கருணாநிதி. இவர் பெரியார் வழி வந்தவர் என்று இன்னும் பலர் நம்பிக்கொண்டிருப்பது மிகவும் வேதனை.

 
At 3:04 PM, Blogger oosi said...

சரியாக சொன்னீர்கள் வெற்றி !! நன்றி !!!

 
At 3:46 PM, Anonymous Anonymous said...

நண்பரே!
கருணாநிதியை ஆதரித்துப் பேசும் எண்ணமோ, அவர்மீதான நல்லபிப்ராயமோ இல்லை என்பதை இப்பின்னூட்டத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிக்கொண்டு...

சிந்தித்துப்பாருங்கள்: ஒரு தலைவனும், தொண்டனுக்கும் உள்ள பிணைப்பு கொள்கை ஒன்று தான்.(தனிநபர் கவர்ச்சி என்ற சாபக்கேடுகளை ஒப்பிடாதீர்கள்). அவ்வகையில் கொள்கை (அது சரியோ, மோசமோ) மாறும் விதமாகச் செல்லும் தொண்டனை கண்டிக்கும் தகுதி தலைவனுக்கு இருக்கக்கூடாது என்பதை ஏற்க முடியவில்லை.

அதே நேரம், கணவன் மனைவி உறவும் பிணைப்பும் கொள்கையைச் சார்ந்து இருக்கத்தான் வேண்டும் என்று சொல்வதற்கில்லை. எனவே, தொண்டனைக் கண்டிப்பவன், மனைவியை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்பது சிறுபிள்ளைத்தனம்.

(கருணாநிதியின் கொள்கைகளை நான் ஆதரிப்பதில்லை -அது வேறு விடயம்).

 
At 4:11 PM, Anonymous Anonymous said...

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, காவிரி பிரச்சினையை சரிவர சுமுகமான முறையில் கையாள தெரியாமல், முரண்டுபிடித்து, சண்டித்தனம் செய்து, யார் பேச்சையும் கேட்காமல் சுயநல, கர்வம் பிடித்த அரசியல் செய்து கடைசியில் எதற்கும் உபயோகமில்லாமல் விவசாயிகள் வயிற்றில் அடித்து பிரச்சினையை முடித்தார். கலைஞர், ஜெயாவைப்போல் அல்ல. மக்களுக்காக, தமிழ்நாட்டுகாக சொந்த தனிப்பட்ட கொள்கை, விருப்புகளை, வெறுப்புகளை ஓரம் கட்டி காரியத்தில் கண்ணாயிருக்கிறார். கலைஞர் செய்வது நல்லதிற்கே! வீணாக அவதூறு செய்யாதீர்.

 
At 4:13 PM, Anonymous Anonymous said...

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, காவிரி பிரச்சினையை சரிவர சுமுகமான முறையில் கையாள தெரியாமல், முரண்டுபிடித்து, சண்டித்தனம் செய்து, யார் பேச்சையும் கேட்காமல் சுயநல, கர்வம் பிடித்த அரசியல் செய்து கடைசியில் எதற்கும் உபயோகமில்லாமல் விவசாயிகள் வயிற்றில் அடித்து பிரச்சினையை முடித்தார். கலைஞர், ஜெயாவைப்போல் அல்ல. மக்களுக்காக, தமிழ்நாட்டுகாக சொந்த தனிப்பட்ட கொள்கை, விருப்புகளை, வெறுப்புகளை ஓரம் கட்டி காரியத்தில் கண்ணாயிருக்கிறார். கலைஞர் செய்வது நல்லதிற்கே! வீணாக அவதூறு செய்யாதீர்.

 
At 4:14 PM, Blogger VSK said...

பெருந்தன்மை, அது, இது என்றெல்லாம் சொல்லிப் பெருமைப் படுத்த வேண்டாம்!

வீட்டில் அவர் செல்லாக்காசு என்பது இதன் மூலம் நன்கு தெளிவாகிறது.

மற்றபடி "மாற்றன் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு" என்ற சந்தர்ப்பவாத திராவிட அரசியல் கருத்துக்கும், இதற்கும் அதிக வேறுபாடு இல்லை.

பொதுவில் வந்து பாராட்டியது,தமிழனின் நன்றிக்குணம்!

ஆனால், வீட்டில் நடந்தது.....?

உடன்பிறப்புகளே சொல்லட்டும் போ!

'இலவசம்' என்ற சொல்லை வைத்து அவர் பொதுவில் ஆடிய புரட்டுத்தனம் பற்றிய உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்!

 
At 9:09 PM, Anonymous Anonymous said...

செல்லா,
சில சாமியார்கள் தன் மீதுள்ள கொலைவழக்கில் இருந்து நழுவ நாத்திக திமுக அரசின் காலில் விழுகிறார்கள் என்ற கழுகார் செய்திகளை நாம் படிப்பதில்லையா ?

கொள்கைக்கும் தனிப்பட்ட மனிதர்களை மதிப்பதற்கும் தொடர்பு இல்லை என்று நினைக்கிறேன்.

 
At 1:02 AM, Anonymous Anonymous said...

If he can let the enemy come into his home and let his wife worship him, why should I treat even strangers of the same kind as m enemy?

 
At 4:20 AM, Anonymous Anonymous said...

இத யாராவது செல்வி கனிமொழியிடம் காமிச்சு கமெண்ட் கேட்டு போடுவீங்களா???

 
At 7:04 AM, Blogger oosi said...

கோவி.கண்ணன் ,

நான் செல்லா இல்லை....ஊசி :-)

 
At 7:11 AM, Anonymous Anonymous said...

நேற்று சங்கராச்சாரியார், கொலை வழக்கு, மற்றும் செக்ஸ் வழக்கில் மாட்டியது போல, நம்ம பாபா ஓரினச்சேர்க்கை அல்லது வேறு வழக்குகளில் மாட்டும் போது நம்ம கருனாநிதி தன் முகத்தை எங்கு கொண்டுபோய் வைத்துக்கொள்வார்.

ஏற்கனவே இந்தியா டுடே-யில் இவரின் ஓரினச்செயற்கை-யை பற்றி பல வெளிநாட்டவர் சொல்லியிருக்கின்றனர்.

 
At 9:20 AM, Blogger Bhuvan said...

Hi...

On hearing this news and seeing the photo of Mr. M.K. in humble obeisance to Baba, only one thing comes to my mind---

"Sathhyameva Jayathe" - Truth alone prevails!!!

Cheers,
Bhuvan

 
At 11:44 AM, Blogger குமரன் (Kumaran) said...

//தமிழறிஞர் திருமுருக கிருபானந்த வாரியாரைக் கொலை செய்ய முயற்சித்த தமிழ்மானச் சிங்கம் கருணாநிதி, //

இது என்ன புதிதாக இருக்கிறதே வெற்றி. இதுவரை கேள்விபட்டதில்லை. வேறு யாராவது சொல்லியிருந்தால் அவதூறு என்று பேசாமல் சென்றிருப்பேன். நீங்கள் சொல்லியிருப்பதால் வியப்பாக இருக்கிறது. ஆதாரங்கள் என்ன?

 
At 11:50 AM, Blogger குமரன் (Kumaran) said...

This comment has been removed by a blog administrator.

 
At 11:52 AM, Blogger குமரன் (Kumaran) said...

This comment has been removed by a blog administrator.

 
At 12:14 PM, Blogger வெற்றி said...

குமரன்,
பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் எழுதிய கவியரசர் என் காவலர் எனும் புத்தகத்தில், தி.மு.க வினர் வாரியாரை வழிமறித்துத் தாக்கியதையும், அதைக் கண்டு கவியரசர் மனம் கொதித்து போராட்டம் நடாத்தவென துணிந்த போது, வாரியார் இதைப் பெரிதாக்க வேண்டாமென கவியரசரைக் கேட்டுக் கொண்டதையும் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன், தி.மு.க வினர் தன் மீது நடத்திய தாக்குதலை கவியரசருக்கு விவரித்த போது வாரியார் அழுதே விட்டாராம்.

குமரன், பழ.செடுமாறன் ஐயா சொன்ன இவ் விடயத்தை அப் புத்தகத்தில் இருந்து எடுத்து ஒரு பதிவாகப் போடுகிறேன் [விரைவில்].

குமரன், இப் புத்தகத்தை எழுதியது தமிழ் இன உண்ர்வாளர் ஐயா நெடுமாறன் அவர்கள். எமது திராவிட நண்பர்கள் அவரையும் விரைவில் பார்ப்பணர் அருவருடி என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.::)))

 
At 4:41 PM, Anonymous Anonymous said...

His Ministers go to Temple. His Family Members go to Temples. He accept PERIYAR. HE says his POLICY.
BUT NEVER FORCE ANYONE to obey to his POLICY.
BABA want to meet him.
Baba want to help to TN.
HE welcomes BABA.

HE IS CM KARUNANITHI

BLACK CAT

 

Post a Comment

<< Home

Powered by Blogger