Thursday, October 12, 2006

Aishwarya & Abhishek in madurai - Marriage plan dropped at the last minute



நடிகை Aishwarya Rai -யும், அமிதாப் பச்சனின் மகன் நடிகர் Abhishek Bachchan -னும் Madurai மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொள்வதற்காக Madurai வந்ததாக இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Chennai க்கு வந்திருந்த சமாஜ்வாடிக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமர்சிங் அங்கிருந்து Delhi செல்லக் கிளம்பினார். ஆனால் விமான நிலையம் வந்த அவர் Delhi செல்லவில்லை. மாறாக தனி விமானம் ஒன்றைப் பிடித்து Madurai க்கு விரைந்தார்.


நேற்று பிற்பகல் 12 மணிக்கு அவர் Madurai வந்து சேர்ந்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக Madurai வந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். இருப்பினும் விமானத்தை விட்டு அவர் கீழிறங்கவில்லை.

கிட்டத்தட்ட 2 மணி நேரமாக அவர் விமானத்தை விட்டு வராததால் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் நடிகை Aishwarya Rai -யும், Abhishek Bachchan -னும் அங்கு திடீரென வந்தனர்.

இருவரும் ஒரே காரில் வந்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு இன்னும் கூடியது. இருவரும் நேராக அமர்சிங் இருந்த விமானத்தில் ஏறி உள்ளே சென்றனர். அதன் பின்னர் அந்த விமானம் Mumbai க்குப் புறப்பட்டுச் சென்றது.

அமர்சிங் வருகை, Aishwarya Rai, Abhishek Bachchan திடீர் வருகை ஆகியவற்றால் Madurai யில் பரபரப்பு ஏற்பட்டது. Abhishek க்கும், Aishwarya Rai -யும் Madurai மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து ரகசிய திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், அதை அறிந்தே, அமிதாப்பின் வேண்டுகோளின்படி அவரது குடும்ப நண்பரான அமர்சிங் Madurai க்கு விரைந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஐஸையும், அபிஷேக்கையும் அவர் சமாதானப்படுத்தி மும்பைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், Kodaikanal லில் படப்பிடிப்புக்காக ஐஸும், அபிஷேக்கும் வந்திருக்கலாம் எனவும், அமர்சிங்குடன் சேர்ந்து Mumbai சென்றிருக்கலாம் எனவும் இன்னொரு தகவலும் தெரிவிக்கிறது.

Aishwarya Rai யின் திடீர் Madurai வருகை ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் குறையவில்லை.

Source : thatstamil.com

4 Comments:

At 5:54 PM, Anonymous Anonymous said...

தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்ததை.....
இது நல்லாவா இருக்கு?

 
At 8:30 PM, Blogger oosi said...

Anony,

தேர்தல் பிரச்சாரத்திற்கா?
எந்த கட்சிக்காம்?

 
At 2:18 AM, Anonymous Anonymous said...

கேப்டன் கட்சிக்குதான்!

 
At 3:47 AM, Blogger Unknown said...

மதுரைக்கு வந்து இருக்காங்க,,, எல்லாம் நம்ம கேப்டனுக்காகத் தான் இதைப் போய்..:)

 

Post a Comment

<< Home

Powered by Blogger