Vijaykanth : உங்களுக்கு டி.வி.ன்னா; எங்களுக்கு ரேடியோ
உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் திமுக அணிக்கு ஆதரவாக சன் டிவியில் பிரசாரம் செய்யப்படுகிறது. அதிமுக அணிக்கு ஆதரவாக ஜெயா டிவியில் பிரசாரம் செய்யப்படுகிறது.
ஆனால் ஒரு வயதை நிறைவு செய்து தற்போதுதான் தத்தி தத்தி நடைபோடும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய டி.வி. சானல் இல்லை.
டி.வி. இல்லை என்றால் என்ன, கட்டணம் குறைவான ரேடியோ இருக்கிறது. சென்னை வானொலி மற்றும் எப்.எம் ரேடியோ எல்லோரையும் சென்றடைகிறது என்பதை உணர்ந்த அக் கட்சித் தலைவர் விஜயகாந்த், எப்.எம். ரேடியோகள் மூலம் பிரசாரம் செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து கடந்த ஒரு வாரமாக எப்.எம் ரேடியோகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஆதரித்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. "ரேடியா மிர்ச்சி', "ஹலோ எப்.எம்.,' "பிக் எப்.எம்.' ஆகிய ரேடியோக்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புதிய சின்னமான தீபத்தை பிரபலப்படுத்தும் வாசகங்கள் இந்த விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளன.
இது தவிர கொடைக்கானல் எப்.எம். ரேடியோவிலிருந்து தேமுதிக பிரசாரம் ஒலிபரப்பாகி வந்தது. ஆனால் மதுரை மத்திய தொகுதியில் பிரசாரம் நிறைவு பெற்றதை காரணம் காட்டி கொடைக்கானல் எப்.எம். ரேடியோவில் பிரசாரத்தை நிறுத்தச் சொல்லிவிட்டனர். ஆனால் சன் டிவி, ஜெயா டிவியில் மட்டும் விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதற்கு மட்டும் தடை இல்லை. அந்த சானல்களும் மதுரையில் தெரியத்தானே செய்கிறது என்று தேமுதிக பிரமுகர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார். இது குறித்து கோரிக்கை மனுவும் கொடுத்துள்ளோம் என்று தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர்கள் டிவி என்பதால் தாராளமாக விளம்பரம் செய்து கொள்கின்றனர். இந்த வாய்ப்பு மற்றவர்களுக்கு கிடையாது. எனவே இந்த தேர்தல் விளம்பரங்களையும் கட்சியின் தேர்தல் செலவு கணக்கில் கொண்டு வரவேண்டும் என்று கடந்த சட்டப்பேரவை தேர்தலிலே கோரிக்கை எழுந்தது. ஆனால் அதற்கு தேர்தல் விதிகளில் இடம் இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறிவிட்டார்.
தகவல்: தினமணி
1 Comments:
அண்ணன் விஜயகாந்த் வாழ்க
Post a Comment
<< Home