Monday, October 16, 2006

Rajini Kanth பேச்சு : துண்டை அடகு வைக்கலாம்; ஆனால் வேட்டியை ...

"இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் 2-ம் பாகத்தை எடுத்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு முதன்முறையாக கதாநாயகனாக நடித்த "இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் 100 வது நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.



விழாவுக்குத் தலைமைதாங்கி ரஜினிகாந்த் பேசியதாவது:

பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த "சரஸ்வதி சபதம்' படம் வெளியானது. அதில் கல்வி, செல்வம், வீரம் இவற்றில் எது சிறப்பானது என்ற போட்டி வரும். இறுதியில் மூன்றும் முக்கியம் என்ற கருத்து சொல்லப்பட்டது.

இப் படத்தைப் பொறுத்தவரை கதை, எழுதி இயக்கிய சிம்புதேவன் கல்வியையும், பணம் போட்ட ஷங்கர் செல்வத்தையும், தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்திய வடிவேலு வீரத்தையும் நினைவுபடுத்துகிறார்கள். இந்த மூன்றும் சரியான விகிதத்தில் அமைந்ததால் படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தவரை இப் படத்தின் முதல் பாராட்டு செல்வத்தை வழங்கிய தயாரிப்பாளர் ஷங்கருக்குத்தான். ஏனென்றால் சிம்புதேவன் சொன்ன மூன்று கதைகளை கேட்டுவிட்டு, இக் கதையைத் தேர்ந்தெடுத்து அதை நம்பி பணம் போட்டதற்காக அவருக்குத்தான் முதல் பாராட்டு.

அவர் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல; நல்ல தயாரிப்பாளரும் கூட. இப் படம் தயாரான பிறகு படத்தை வெளியிடுவதற்காக ஷங்கர் மிகவும் சிரமப்பட்டார். அதற்காக அவருடைய வீட்டை அடமானம் வைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஷங்கருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்... ஒரு சிரமம் என்றால் துண்டை அடகு வைக்கலாம்; ஆனால் வேட்டியை அடகு வைத்துவிடக் கூடாது.

அன்றைய காலகட்டத்தில் இயக்குநர்கள் ஸ்ரீதர், கே.பாலசந்தர் படங்கள் எல்லாம் உடனடியாக வியாபாரம் ஆகிவிடும். ஆனால் சின்ன வயதிலேயே ஷங்கர் படங்கள் தமிழகம் தாண்டி இந்தியா முழுக்க உடனடியாக வியாபாரம் ஆகிறது.

அதற்குப் பின்னால் அவருடைய கடுமையான உழைப்பும், நேரத்தை அவர் பயன்படுத்தும் விதமும் அடங்கியிருக்கிறது. ஷங்கரைப் பற்றி இன்னும் விரிவாக "சிவாஜி' வெற்றி விழாவில் பேசுகிறேன்.

அதேபோல் படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம் இயக்குநர் சிம்புதேவன். இந்தக் காலத்தில் சரித்திரப் பின்னணியோடு கூடிய ஒரு கதையைத் தேர்வு செய்து, அதற்கு மிகச் சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார். அவரிடம் 100 படங்களை இயக்கிய அனுபவம் தெரிகிறது.

இது வெறும் நகைச்சுவைப் படம் மட்டுமல்ல; சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளையும் உள்ளடக்கிய படம். குறிப்பாக படத்தின் இறுதியில் வரும் 10 கட்டளைகள் சம்பந்தப்பட்ட காட்சி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இதுபோன்ற படங்களை அவர் இயக்க வேண்டும். ஏன் இதே கூட்டணி இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

இப் படத்துக்கு ஆணிவேர் போன்றவர் நடிகர் வடிவேலு. சிவாஜிகணேசனின் நடிப்பைப் பார்த்துத்தான் அவரை "வீரபாண்டிய கட்டபொம்மன்', "திருவிளையாடல்', "சரஸ்வதி சபதம்' போன்ற படங்களில் நடிக்க அழைத்தார்கள். நாகேஷின் நடிப்பைப் பார்த்து "சர்வர் சுந்தரம்', "நீர்க்குமிழி', "எதிர் நீச்சல்' போன்ற படங்கள் அமைந்தன.

அதுபோலத்தான் வடிவேலுவுக்கு "இம்சை அரசன்...' படம் அமைந்துள்ளது. காலத்துக்கு ஏற்றவாறு தன்னுடைய நடிப்பை மெருகேற்றிக்கொண்டு படிப்படியாக முன்னேறியவர். அதுபோல தொழிலில் அர்ப்பணிப்பும், மற்றவர்களிடம் மரியாதையும் காட்டுபவர் என்றார் ரஜனிகாந்த்.

10 Comments:

At 12:06 PM, Blogger ச.சங்கர் said...

//// ஒரு சிரமம் என்றால் துண்டை அடகு வைக்கலாம்; ஆனால் வேட்டியை அடகு வைத்துவிடக் கூடாது./////

கடங்காரங்களே வந்து அவுத்துட்டு விட்டுருவாங்க :))

 
At 12:14 PM, Blogger G.Ragavan said...

// இப் படத்துக்கு ஆணிவேர் போன்றவர் நடிகர் வடிவேலு. சிவாஜிகணேசனின் நடிப்பைப் பார்த்துத்தான் அவரை "வீரபாண்டிய கட்டபொம்மன்', "திருவிளையாடல்', "சரஸ்வதி சபதம்' போன்ற படங்களில் நடிக்க அழைத்தார்கள். //

:-)))))))))))))))))))

 
At 8:11 PM, Blogger பெத்தராயுடு said...

//இதுபோன்ற படங்களை அவர் இயக்க வேண்டும். ஏன் இதே கூட்டணி இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.//

மொத பாகத்தோட ரம்பத்தையே தாங்க முடியல. இதுல ரெண்டாம் பாகம் வேறயா?

ஒரு வேளை, என்னோட ரசனைலதான் தப்போ?

 
At 8:17 AM, Anonymous Anonymous said...

Brother! What is the Price of 2nd Hand XL Size Kovanam in Chennai?



Monkey Boy

 
At 10:27 AM, Anonymous Anonymous said...

15-20 கோடி சம்பளம் வாங்கி, படம் ஹிட் ஆனால் இமயமலைக்கு போகும் போலி சாமியார்கள் சம்பளத்தை குறைத்தால் தயாரிப்பாளர் ஏன் வேட்டி, துண்டு, கோவணம் எல்லாம் அடகு வைக்கிறார்? முடிந்தால் சம்பளத்தை குறை, நீ செய்தால் எல்லாரும் செய்வார்கள். இல்லாவிட்டால் காசை கணக்கில் போட்டுக்கொண்டு பொத்திக்கொண்டு போ! யாருக்கு வேண்டும் உன் ஓசி அறிவுரை?

 
At 12:55 PM, Blogger oosi said...

சங்கர் & G.Ragavan, வருகைக்கு நன்றி !!!

பெத்த ராயுடு ...

உங்க ரசனையில் தப்பு இல்லைன்னு நினைக்கிறேன் .. :-)

Anonymous & Anonymous ,

வருகைக்கு நன்றி !!!

 
At 6:03 PM, Blogger -L-L-D-a-s-u said...

15-20 கோடி சம்பளம் வாங்கி, படம் ஹிட் ஆனால் இமயமலைக்கு போகும் போலி சாமியார்கள் சம்பளத்தை குறைத்தால் தயாரிப்பாளர் ஏன் வேட்டி, துண்டு, கோவணம் எல்லாம் அடகு வைக்கிறார்? முடிந்தால் சம்பளத்தை குறை, நீ செய்தால் எல்லாரும் செய்வார்கள். இல்லாவிட்டால் காசை கணக்கில் போட்டுக்கொண்டு பொத்திக்கொண்டு போ! யாருக்கு வேண்டும் உன் ஓசி அறிவுரை?

Adhu !!

 
At 7:28 PM, Anonymous Anonymous said...

are the producers doing Public service? producers are getting profit because of Rajni that is why they are SHARING with him.

Rajni was advicing Producers not to spread legs beyond that ability and get "injured"

 
At 7:30 PM, Anonymous Anonymous said...

Rajni is simply saying
Don't be Greedy...
Rajni's "Pay" is for the fans whom he brings to the movies.....
if Rajni reduced his pay can anyone gurantee that Producers would share the profit with PUBLIC???

 
At 10:04 PM, Anonymous Anonymous said...

It is easy to advice others not to be greedy when you make 15-20 crores a movie!

It is a well established fact that the single biggest component of the cost of making a movie is the hero & heroine's pay.

If film production companies become public in India, shareholders can enjoy the benefit of reduced cost.

 

Post a Comment

<< Home

Powered by Blogger