Saturday, October 14, 2006

Kumudam செயலை கண்டித்து Vivek கடிதம்!!!

வணக்கம்.

விவேக் எழுதுகிறேன். தமிழின் ஒண்ணாம் நம்பர் இதழான ‘குமுதம்’ பத்திரிகையில்... சென்ற வாரம் ‘ஜாம்பவான்’ பட விமர்சனம் கண்டேன். களிப்பேருவுவகை அடைந்தேன்.

அடடா! அடடா! என்ன ஒரு விமர்சனம்! அதிலும் என் காமெடி பற்றி ஒற்றை வரியில் ‘‘வழக்கம்போல் பகுத்தறிவுப் பிரசாரம்’’ என்று திருவாய் முத்து உதிர்த்துள்ளீர்களே! அதுதான் சூப்பரோ சூப்பர்!

‘‘கலையில்லாத பிரசாரமும்; பிரசாரம் இல்லாத கலையும் _ மக்களைச் சென்றடையாது’’ என்று நான் சொல்லவில்லை; காரல்மார்க்ஸ் காரல்மார்க்ஸ் என்று தாடி மீசையோடு இருந்தாரே ஒரு பொருளாதார, சமூகவியல் மேதை! அவர் சொன்னார். (இதையே ரகஸ்யா சொல்லியிருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்!) அவர் உரைத்தது இன்றுவரை ஏனோ உங்களுக்கு உறைக்கவில்லை.

‘ஜாம்பவான்’ படத்தில் நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டதை, நான் உங்களுக்கு விண்டு ரைக்க விழைகிறேன்.

‘கல்வியறிவுதான் மக்களை மேம்படுத்தும்’ என்ற கருத்தை வலியுறுத்தும் விதத்தில், கிராம நாட்டாமை ஊருக்குப் புதிதாய் வந்திருக்கும் டாக்டரைச் (விவேக்) சந்திக்கும் காட்சியில் காமெடியாக அமைத்திருப்பேன்.

ஹீரோயின் நிலா... சித்தபிரமை அடைந்த நிலையில் இருக்கும்போது, கிராமத்து வைத்தியச்சி அவளை சாமியாடி வேப்பிலையால் அடிக்கும்போது... இது, ‘‘பேய் பிடிக்கவில்லை....’ இதற்குப் பெயர் ‘ஸ்கீசோபெர்னியா’ என்ற மனவியாதி. இதற்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொள்ளவேண்டும்’’ என்று கூறியிருக்கிறேன்.

‘சேது’வில் இருந்து ‘அந்நியன்’ வரை விக்ரம் செய்தது இந்த (ணீறீtமீக்ஷீ மீரீஷீ) ஆல்டர் ஈகோ எனப்படும் மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் என்ற ஸ்கீசோ பெர்னியா வகையைச் சார்ந்ததுதான். இதற்காக அரசும் மற்றும் பல மனநல மருத்துவ அமைப்புகளும் பல கோடி ரூபாய்களைச் செலவழித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப் போராடி வருகின்றன என்பது குமுதத்திற்குத் தெரியாமல் போய்விட்டதே!

இன்னொரு காட்சியில் பெண் சிசுக் கொலையைக் கண்டித்து வசனம் பேசியுள்ளேன். மற்றொரு காட்சியில், ஜாதிச்சண்டையை நையாண்டி செய்து காமெடி செய்திருக்கிறேன்.

இவற்றையெல்லாம் வழக்கம் போல் பகுத்தறிவுப் பிரசாரம் என்ற ஒற்றை வரியில் உதாசீனம் செய்து உதறித்தள்ளி விட்டீர்களே! இது நியாயமா?

நம் ஜனாதிபதி அப்துல்கலாமை நான் சந்தித்து எடுத்த பேட்டியையும் நீங்கள்தான் போடுகிறீர்கள்.

நல்ல விஷயத்தை காமெடி வாயிலாகச் சொன்னால், அதை ‘பகுத்தறிவுப் பிரசாரம்’ என்று டைட்டில் வைத்து புறக்கணித்தும் விடுகிறீர்கள்.

அப்படி என்றால் என்னை என்ன மாதிரி காமெடி செய்யச் சொல்கிறது குமுதம்?

பட்டாப்பட்டி டிராயர் போட்டுக்கொண்டு பக்கத்தில் நிற்பவன் புட்டத்தைக் கடிக்கவா?

சகதியில் புரளவா? வாந்தி எடுத்துக்கொண்டே வரப்பில் ஓடவா?

டபுள் மீனிங் மற்றும் ட்ரிபிள் மீனிங் டயலாக் பேசவா?

பெண்களைக் கிண்டல் பண்ணி, குபீர் சிரிப்பை ஏற்படுத்தட்டுமா?

வயதானவர்களை மண்டையில் தட்டவா? என்ன செய்து உங்களுக்கு கிச்சுகிச்சு மூட்டவேண்டும் பத்திரிகை ஜாம்பவானே!

நமீதாவின் தொப்புளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில், அசினின் இடுப்புக்குக் காட்டும் அக்கறையில், த்ரிஷாவின் உதட்டுக்குக் கொடுக்கும் பப்ளிசிட்டியில் கொஞ்சம் இந்த விவேக்கின் நகைச்சுவைக்கும் கொடுங்களேன், மிஸ்டர் குமுதம்?

கடைசியா ஒன்று, விமர்சனங்கள் படிப்பதற்கு மட்டும்; அவையே படைப்புகள் அல்ல.


தகவல்: குமுதம்

9 Comments:

At 11:11 PM, Blogger Sivabalan said...

சாதி நையான்டி பன்னுகிறார் எனபது சரிதான்..ஆனால் இவர் ஏன் சாதி கூட்டத்தில் கலந்து கொண்டு சாதிக்காரன் என்று பறை சாற்றினார்??

என்னமோ போங்க..

பதிவுக்கு நன்றி

 
At 11:36 PM, Blogger Santhosh said...

முதலில் இவரை ஜாதியை விட்டு வெளியே வர சொல்லுங்க அப்புறம் அடுத்தவங்களை நக்கல் அடிக்கலாம்.

 
At 12:40 AM, Blogger VSK said...

மறைமுகமாக வடிவேலுவைத் தாக்க இதைப் பயன்படுத்தி இருக்கிறார்.

அவர் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் வடிவேலு பண்ணியவை!

மற்றபடி, விவேக் நகைச்சுவையாகச் சொல்லும் காமெடி எனக்கு பிடித்த ஒன்று.

 
At 7:41 AM, Blogger oosi said...

sivabalan & சந்தோஷ்,

உங்க ரெண்டு பேர் கேள்வியும் சரியான ஒன்றே !

வருகைக்கு நன்றி.

 
At 7:48 AM, Blogger oosi said...

sk,

வடிவேலுவை தான் தாக்குகிறார். வடிவேல் காமெடியும் மட்ட ரகம்தான். குடும்பத்துடன் சேர்ந்து உட்கார்ந்து பார்க்க இயலாது. தனியாகவே பார்த்தாலும், சாப்பிட்டு கொண்டிருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான். வாந்தி எடுக்க வைக்கும் வசனங்கள் + காட்சிகள். இதுதான் வடிவேலு காமெடி.

விவேக்கும் ஒரே பாணியை கடைபிடித்து முகம் சுளிக்க வைக்கிறார்.

 
At 7:56 AM, Blogger bala said...

வடிவேலுவை தான் தாக்குகிறார். வடிவேல் காமெடியும் மட்ட ரகம்தான். குடும்பத்துடன் சேர்ந்து உட்கார்ந்து பார்க்க இயலாது. தனியாகவே பார்த்தாலும், சாப்பிட்டு கொண்டிருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான். வாந்தி எடுக்க வைக்கும் வசனங்கள் + காட்சிகள். இதுதான் வடிவேலு காமெடி.

விவேக்கும் ஒரே பாணியை கடைபிடித்து முகம் சுளிக்க வைக்கிறார்.//

ஊசி அய்யா,

மிகவும் சரியாக சொன்னீர்கள்.

தங்கவேலு,சந்திரபாபு,நாகேஷ் காலத்தோடு கண்ணியமான காமெடி யுகம் முடிந்தது.

பாலா

 
At 6:39 AM, Blogger oosi said...

வருகைக்கு நன்றி பாலா !!

 
At 7:05 AM, Blogger Muse (# 01429798200730556938) said...

விவேக், விவேக்ன்னா இந்த "எனக்குப் பின்னாடி பசும்பொன் தேவரின் மக்கள் 13 லச்சம்பேர் இருக்கிறார்கள்" என்று சொன்னாரே, அவருங்களா?

அவரு ஸினிமால நல்லா ப்ரச்சாரம் பண்ணுவாருங்களே.

"காரல் மார்க்ஸ்" பெயரை நம்மூர் கம்யூனிஸ்ட்கள் கெடுத்தது போதாது என்று இவர் வேறா. நல்ல வேளை செத்துவிட்டார் மார்க்ஸ்.

 
At 10:36 PM, Anonymous Anonymous said...

சினிமாவில் காமெடியனுக்கு கோமாளி வேலை. அதை சரியாக செய்து சிரிக்கவைத்துவிட்டு போவதை விட்டுவிட்டு தன்னை தானே ரொம்ப சீரியஸாக் எடுத்துக்கொண்டு அறிவுரை செய்ய ஆரம்பித்ததால் தான் விவேக் மார்க்கெட் அவுட் ஆனது. மேலும் இவர் காமெடி மட்டும் ரொம்ப உயர்தரமெல்லாம் ஒன்றுமில்லை. கலைஞர் பாராட்டு விழாவில் கூட தன் புட்டத்தை புடைத்து காட்டி *த்துல என்று எதுகை மோனை செய்தவர்தான் விவேக்.

எல்லாம் மார்க்கெட் போனதால் வந்த பினாத்தல்.

 

Post a Comment

<< Home

Powered by Blogger