Saturday, October 07, 2006

எந்தப் பலனும் எதிர்பாராமல் தி.மு.க. கூட்டணியில்

எந்தப் பலனும் எதிர்பாராமல் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் பேசினார்.

***************************************************************************
திருமாவளவன் குறித்த எமது முந்தைய பதிவுகள்.

Thuglak cartoon: திருமாவளவனின் தாவல் குறித்து
விடுதலை சிறுத்தைகள்-பா.ம.க லடாய்
எங்கிருந்தாலும் வாழ்க: J அறிக்கை
திருமாவளவனின் திருவிளையாடல் : Photo பதிவு
கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பற்றி திருமா. BBC க்கு அளித்த பேட்டி
***************************************************************************

சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேத்துப்பட்டில் அவர் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

அதில் பேசியது:

உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் திருப்தி தரும் வகையில் இடங்களை திமுக ஒதுக்கியுள்ளது.

பேரவைத் தேர்தலின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் விகிதாரசார அடிப்படையில் இடப்பங்கீடு அளிக்கப்பட்டது.

ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் விகிதாரசார அடிப்படையில் ஒதுக்காமல் இடப்பங்கீடு அளிக்காமல் விடுதலைச் சிறுத்தைகளிடம் பாரபட்சம் காட்டப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டி வேட்பாளர்களாக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அ.தி.மு.க.வினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த போது எங்களது மானத்தை இழக்க நேரிட்டது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றார் தொல் திருமாவளவன்.

தகவல்: தினமணி

11 Comments:

At 8:45 PM, Anonymous Anonymous said...

அப்ப சீட் பிரச்சினையில்லை. மானம் போனதுதான் பிரச்சினை. நாளைக்கு அம்மா அதிகம் எடம் கொடுத்தா வண்டிய திருப்பிட்டாப் போச்சு...

 
At 8:45 PM, Anonymous Anonymous said...

அப்ப சீட் பிரச்சினையில்லை. மானம் போனதுதான் பிரச்சினை. நாளைக்கு அம்மா அதிகம் எடம் கொடுத்தா வண்டிய திருப்பிட்டாப் போச்சு...

 
At 1:10 PM, Anonymous Anonymous said...

டாக்டர், திருமாவும் சர்க்கஸில் இருக்க வேண்டியவங்க ...

 
At 1:14 PM, Blogger செல்வன் said...

எந்தப் பலனும் எதிர்பாராமல் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் பேசினார். //

அவர் அப்படி இருப்பதைதான் கலைஞரும் விரும்புவார்:-)

எந்த பலனையும் எதிர்பாராமல் இருந்தால் என்றும் கலைஞருடன் இருக்கலாம்.இதயத்தில் இடம் கொடுத்து கவுரவிப்பார்:-)

 
At 9:59 PM, Anonymous Anonymous said...

மானம் போனா திமுகவா? சரிதான். அப்ப மானங்கெட்டவங்க இருக்க சரியான எடம் திமுகதான்னு சொல்றாரா?

 
At 2:27 AM, Anonymous Anonymous said...

இவிங்கள நம்பி ஓட்டு போட்டவிங்கள என்னன்னு சொல்ல...

 
At 7:30 AM, Blogger bala said...

//இவிங்கள நம்பி ஓட்டு போட்டவிங்கள என்னன்னு சொல்ல... //

பகுத்தறிவோடு சிந்தித்து செயல்படும் மொழி மற்றும் இன மான உணர்வுள்ள திராவிடத் தமிழர்கள் என்று சொல்வது தான் பொருத்தம்.

பாலா

 
At 4:30 PM, Blogger oosi said...

வருகைக்கு நன்றி Bala !!!

 
At 4:47 PM, Anonymous Anonymous said...

Tamil natta mottai addikiroangapooo...

Sun TV Ltd has announce that SUN TV, the flagship channel of the Company, will be a pay channel with effect from December 02, 2006. The rate to the cable operator for SUN TV will be Rs 12/- per month per subscriber.


http://www.bseindia.com/qresann/news.asp?newsid={E48BCAC6-16E0-413A-9970-F48A67C03E28}

 
At 7:48 AM, Blogger சிநேகிதன் said...

பூவோடு சேர்ந்த நார் வாசம் தறும். பன்றியோடு சேர்ந்த கன்று என்ன செய்யும்.

மரம் வெட்டி (தாவி) ராமதாஸுடன் சேர்ந்ததால் திருமாவுக்கும் அவரது ஜம்போபோஃபியா வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

 
At 8:00 AM, Blogger சிநேகிதன் said...

இதத்தான்யா போட்டு வாங்குறதுன்றது. டிவியை இலவசமா கொடுக்கிறமாதிரி கொடுத்து மாசம்,மாசம் கேபிள் டிவி சந்தா என்கிற பெயரில் மாதத்தவனையாக வசூலிச்சுடுவாங்கையா. கடையில மாதத்தவனையில டிவி வாங்கினாலும் 1 வருசமோ, 2 வருசத்திலயோ தவனை முடிஞ்சிரும். ஆனால் இவனுங்களுக்கு கொடுக்கப்போற தவனை எத்தனை வருசம் ஆனாலும் முடியாது. அதோட அவன்ங்க டிவி-ல கவர்ச்சியா விளம்பரம் காட்டி அதை வாங்கு இதை வாங்குன்னு ஏழை மக்கள மேலும் ஓட்டாண்டியாக்காம விடமாட்டன்ங்க.

 

Post a Comment

<< Home

Powered by Blogger