Sunday, November 05, 2006

Weekly Special : Wonderful Websites அறிமுகம் - 1 !!

இந்த வாரம் முதல் Weekly Special பகுதி அறிமுகமாகிறது. முதல் வார special-லில் நான் கேட்டு, கண்டு, ரசித்த வித்தியாசமான வலைதளங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வழக்கம் போல் பாராட்டுக்களையும், குறைகளையும் வெளுத்து வாங்குங்கள்.


முதல் வாரத்தில், முதல் நாளான இன்று தமிழ் வாக்கு
என்ற வலைதளத்தை பார்ப்போம்.

தமிழ்மணம், தேன்கூடு வரிசையில் இப்பொழுது தமிழ் வாக்கு
என்ற வலைதளம் வந்துள்ளது. ஒரு பெரிய வேறுபாடு என்னவென்றால் இதில் தானாகவே பதிவுகளை திரட்டும் வசதி கிடையாது. யார் வேண்டுமானாலும் எந்த பதிவையும் சமர்ப்பிக்கலாம்.



பெறும்பாலானோர் ,Digg.com பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். இது ஆங்கில வலைபதிவுகளை, சனநாயக முறைப்படி வெளியிடுகிறது. பதிவுகளை படிக்கும் வாசகர்கள், அதில் தெரியும் Digg பொத்தான அழுத்தி வாக்களிக்கலாம்.


அதிகம் வாக்கு பெற்ற பதிவுகள் ,Digg.com வலைதளத்தின் முதல் பக்கத்தில் நிறைய நேரம் தென்படும் வாய்ப்பினை பெறுகிறது.


தமிழ் வாக்கு வலைதளம், Digg.com வலைதளத்தின் Xerox copy என்றே சொல்லலாம். ஆனால் இன்னும் நம் பதிவுகளில் வாக்கு பொத்தானை, பதிவை வெளியிடும் போதே வெளியிட்டுக்கொள்ளும் வசதி இல்லை. என்ன புரியலையா? அதாவது தமிழ்மணம் கருவிபட்டை நம் பதிவுகளில் வர, நம்முடைய template களில் ஒரு சிறிய code script சேர்த்து கொள்கிறோம் இல்லையா? அது போல் தமிழ் வாக்கு தளத்தின் வாக்கு பொத்தானை வர செய்ய வசதி இல்லை. எனினும் தமிழ் வலைப்பதிவுகளை ஒரு சேர காண மேலும் ஒரு இடம் கிடைக்கிறதே என்று மகிழ்ந்து கொள்ள வேண்டியது தான். என்ன நான் சொல்றது?

3 Comments:

At 6:36 AM, Anonymous Anonymous said...

நல்ல விசயம்தான் ...நிறைய சொல்லுங்க ...

 
At 7:13 AM, Blogger சின்னக்குட்டி said...

நல்ல விசயங்களை ... சொல்றியள்.... தொடரட்டும்...

 
At 10:43 AM, Blogger oosi said...

சின்னக்குட்டி ...வருகைக்கு நன்றி ...உங்கள் ஊக்கம் ஊட்டும் வார்த்தைகளுக்கும் நன்றிறிறி....!!

 

Post a Comment

<< Home

Powered by Blogger