Wednesday, January 31, 2007

Vijakanth ஐ கேள்வி கேட்கிறார் Nepolean !!


கேள்வி கேட்கிறேன் என்று சொல்லிக்கொண்டு உளறி தள்ளியிருக்கிறார் நடிகர் Napolean.




நெப்ஸின் அறிக்கையிலிருந்து .....

1)
கருணாநிதியின் உழைப்பின் முன் நீங்கள் எல்லாம் எம்மாத்திரம். நீங்கள் பிறக்கும் முன்பே அவர் சினிமாவில் வசனம எழுதி 50 ஆண்டுகளுக்கு முன்பே அன்று அவர் வாங்கிய சம்பளத்திற்கு இணையாக இன்றும் நீங்கள் வாங்கவில்லை.

2)
எத்தனையோ நாடகங்கள், 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம், 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள், பத்திரிக்கைளுக்கு கதை, கட்டுரை, சிறுகதை, காவியங்கள், சங்கத்தமிழ், குறளோவியம், பாயும் புலி பண்டார வன்னியன், பொன்னர் சங்கர், தொல்காப்பியம் போன்ற இலக்கியங்கள் என 60 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி எழுதி தமிழை அன்றாடம் வளர்த்து கொண்டு இருக்கும் தலைவரை பார்த்து தொடர்ந்து தரம் தாழ்த்தி பேசி வரும் உங்களைப் பார்த்தால் நீங்களும் ஒரு தமிழனா என்று எங்களுக்கு சந்தேகம் வருகிறது.

3)
நடிகர் சங்கத்தில் அவர் தலைவராக இருந்த போது திரையுலகில் ரஜினி, கமல் என்று அனைத்து நடிகர்களும் ஒன்று சேர்ந்து சிங்கப்பூர், மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தி, அதன் மூலம் கிடைத்த பணத்தில் நடிகர் சங்க கடனை அடைத்தோம். ஏன் இவர் தன் பணத்தை கொடுத்து அடைக்கவில்லை?


4)
இன்று அரசியலில் இறங்கி விட்டதால் 232 இடங்களில் நின்று ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் வென்றார். அதற்குள் ஆட்சியை பிடித்து முதல்வர் ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறார். தன்னுடைய கல்லூரிக்கே முதல்வர் ஆக முடியாத போது நாட்டின் முதல்வர் என்றால் இவருக்கு சாதாரணம் ஆகிவிட்டதா?

இதில் 1 & 4 மிகவும் சிரிப்பை வரவழைக்கதக்கவை.

8 Comments:

At 12:25 PM, Blogger வெற்றி said...

ஹம்ம்..."பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டதாம் கருடா செளவுக்கியமா" என்று கவியரசரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. விஜயகாந்திற்கு மக்களிடம் உள்ள செல்வாக்கில் 0.00001% கூட இல்லாத நெப்போலியன், ஆட்சியில் இருக்கிறோமென்ற ஆணவத்தில் கேட்கிறார் போலும்!

 
At 1:11 PM, Blogger VSK said...

இதுவரை குறை சொல்லமுடியாத அரசியல் நடத்திவரும் விஜய்காந்தைப் பார்த்து, ஊழல் பெருச்சாளிக் கூட்டம் ஓலமிடுகிறது!

:))

 
At 3:36 PM, Anonymous Anonymous said...

//....காவியங்கள், சங்கத்தமிழ், குறளோவியம், பாயும் புலி பண்டார வன்னியன், பொன்னர் சங்கர், தொல்காப்பியம் போன்ற இலக்கியங்கள் ...//

ஐயா உங்கள் அரசியல் சில்லெடுப்புகளுக்கு ஏன் ஐயா 'பாயும் புலி பண்டாரவன்னியனையும்" இழுக்கிறீர்கள். பண்டாரவன்னியனைப்பற்றி புத்தகம் எழுதியது எல்லாம் கொளரவம் தராது மாறாக பண்டாரவன்னியனின் பரம்பரைக்காக குரல் கொடுக்கச் சொல்லுங்கள்!!!!!

 
At 6:58 PM, Blogger வடுவூர் குமார் said...

தேர்தல் சமயத்தில் ஊரில் இருந்தால் என் ஓட்டு விஜயகாந்துக்கே.
இவருக்கும் ஒரு சான்ஸ் கொடுத்துப்பார்ப்போமே!!
இருந்தாலும் இவருடன் கூட வரும் ஆட்கள்- எப்படியோ என்ற பயமும் இருக்கிறது.
நெப்போலியன் - அவர் கருத்தை கூறியிருக்கிறார். அதில் நாம் தவறு காணமுடியாது.

 
At 7:18 PM, Anonymous Anonymous said...

The way in which the questions raised may look silly. Let "Mr.Clean" Viyakanth deny that he had not swindled the money collected as alleged by Mr.Napoleon

 
At 10:32 PM, Blogger G.Ragavan said...

அரிவாளை மட்டுந்தான் தூக்கத்தெரியும் நெப்போலியனுக்குன்னு நெனைச்சேன். ஆனா இப்பிடி கேணைத்தனமா பேசவும் முடியுமோ! விஜயகாந்துக்கு என்னோட ஆதரவு இல்லைங்குறது வேற விஷயம். ஆனாலும் நெப்ஸ் நல்லா காமெடி பண்றாரு.

1. தேவையில்லாம கருணாநிதியின் நிதியைப் பத்திப் பேசுறாரே.....ஏற்கனவே நதிப்பிரச்சனையை விட நிதிப்பிரச்சனைக்கு அங்க மதிப்பு உண்டுங்குறது தெரிஞ்சதுதானே.

2. அப்ப கருணாநிதியை எதுத்துப் பேசுனா தமிழன் இல்லையாமா? ஏன் நெப்போலியனுக்கு புத்தி இப்பிடிப் போகுது? பகுத்தறிவுங்குறது கொஞ்சமாவது வேணும் நெப்ஸ் ஒங்களுக்கு.

3. இவரு மேடையில ஆடிக் கடனை அடைப்பாராம். அவரு கைக்காசைப் போட்டு அடைக்கனுமா? வாழ்க. வளர்க.

4. இதுதாங்க சூப்பர் காமெடி. 2007ன் சிறந்த நகைச்சுவை வசனமா இதை எடுத்துக்கலாம்.

 
At 11:55 PM, Blogger ரவி said...

ஜீ.ரா, இனிப்பாயிருக்கு உங்க பின்னூட்டம்...

நெப்ஸ் எப்பவுமே எனக்கு ஒரு காமெடியந்தான்...இது எல்லாம் விஜயகாந்தை பேசுது.

கொடுமை...

 
At 6:16 AM, Blogger சீனு said...

நெப்போலியன் தன் முதல் படத்தில் சொல்லியிருப்பார், 'ஏண்டா! எனக்கு கும்பிடு போட்டு கும்பிடு போட்டே ஓஞ்சு போன உன் கைய, எனக்கு கணக்கெழுதி கணக்கெழுதியே ஓஞ்சு போன உன் கைய, இன்னொருத்தன் வெட்ட விட்டுடுவனா?' என்று கேட்டு அவரே வெட்டிடுவார். அது மாதிரி தான் இருக்கு அவர் கலைஞருக்கு சப்போர்ட் பன்னுறது.

விஜயகாந்த் கலைஞரை பற்றி சொன்னதற்கு, கலைஞருக்கு எந்த நடிகரும் சப்போர்ட் பன்னவில்லையே என்ற வருத்தமாம். மே பி, அதற்காக கூட நெப்ஸ் நெப்பே இல்லாமல் அறிக்கை விட்டுருப்பார்...('விஜி அண்ணே! கண்டுக்காதீங்க'-ன்னு ஃபோன் போட்டிருப்பார்...)

 

Post a Comment

<< Home

Powered by Blogger