Thursday, February 08, 2007

Guru படத்தால் பொதுமக்களுக்கு ரூ. 1 கோடி நட்டம் !!!

Guru படத்திற்கு உத்திர பிரேதச அரசு கேளிக்கை வரி விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் பொது மக்கள் பணம் சுமார் ரூ. 1 கோடி பட்டை நாமம் !!!

இதோ செய்தி ....


8 Comments:

At 9:49 PM, Blogger சதுக்க பூதம் said...

அதை பார்க்க வந்த மக்கள் டிக்கட் வாங்கி செலவு செய்ததை கணக்கில் எடுத்து கொண்டால் மொத்த‌ நஷ்டம் பல கோடி தாண்டும்

 
At 10:29 PM, Blogger வெங்கட்ராமன் said...

நம்மூரல ஷகிலா, படத்துக்கே வரி விலக்கு உண்டு.

நீங்க என்னன்னா ஒரு படத்துக்கு வரி விலக்கு போட்டதுக்கு சொல்றீங்க.

 
At 7:28 AM, Blogger Hari said...

உத்திரபிரதேச ஆட்சியாளர்களுக்கும் பச்சனுக்களுக்கும் இருக்கும் உறவு அனைவரும் அறிந்ததே. அதன் விளைவே இந்த சலுகை

 
At 8:19 AM, Blogger bala said...

//உத்திரபிரதேச ஆட்சியாளர்களுக்கும் பச்சனுக்களுக்கும் இருக்கும் உறவு அனைவரும் அறிந்ததே. அதன் விளைவே இந்த சலுகை//

ஹரி அய்யா,

போற போக்கைப் பாத்தா,முலயம் சிங் யாதவ் அய்யா,அமிதாபுக்கு இன்னும் கொஞ்சம் வெள்ளை தாடி ஒட்ட வைத்து பெரியார் பச்சனாக்கி ஓட்டு வியாபாரம் பண்ணினாலும் ஆச்சிரியப்படுவதற்க்கில்லை.

பாலா

 
At 8:54 AM, Blogger Madhu Ramanujam said...

தமிழ்ல பேர் வெச்சாலே போதும் வரி குடுக்க வேண்டாம்னு சொல்லியிருக்காங்களே நம்ம ஊர்ல, இந்த வயித்தெரிச்சலை எங்க போய் சொல்றது. இந்த எழவுக்கு உத்திரபிரதேச அரசு எவ்வளவோ தேவலாம்.

 
At 9:05 AM, Blogger Madhu Ramanujam said...

நல்ல யோசிங்க. அப்படியே இதையும் படிங்க

கேளிக்கை வரி விலக்கு - வேண்டுமா வேண்டாமா ?

 
At 10:20 AM, Blogger Boston Bala said...

---- தமிழ்ல பேர் வெச்சாலே போதும் வரி குடுக்க வேண்டாம்னு சொல்லியிருக்காங்களே நம்ம ஊர்ல, இந்த வயித்தெரிச்சலை எங்க போய் சொல்றது. இந்த எழவுக்கு உத்திரபிரதேச அரசு எவ்வளவோ தேவலாம்.---

: )))

ஜெயலலிதா ரொமப் பெரிய திருடி. கருணாநிதி கொஞ்சம் கம்மியா திருடறான். எனவே, கலைஞருக்கு வாக்களியுங்க என்று சொல்வது போல், 'தமிழகம் ரெண்டு கண்ணையும் புடுங்குது; உ.பி. ஒத்தைக் கண்ணைக் கழட்டுது. எனவே, உத்தர பிரதேசத்துக்குப் போய் கண்ணைப் பறி கொடுக்கலாம்' என்று டயலாக் விடுவீங்க போல ; ))

எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?

---,முலயம் சிங் யாதவ் அய்யா,அமிதாபுக்கு இன்னும் கொஞ்சம் வெள்ளை தாடி ஒட்ட வைத்து பெரியார் பச்சனாக்கி ஓட்டு வியாபாரம் பண்ணினாலும் ஆச்சிரியப்படுவதற்க்கில்லை.---

பெண்ட்லி கார் எல்லாம் பரிசாகக் கொடுக்கிறாரா... ஆதாயம் இல்லாம எந்த அன்னமாவும் ஆத்தோட போமாட்டா.

இன்னிக்கு இம்புட்டுதான் பழமொழி ; )

 
At 10:58 AM, Blogger SurveySan said...

அடப்பாவிகளான்னு சொல்லத் தோணுது. ஆனா உள்ளூர்லயே இது நடக்குதே. தமிழ்ல படத்துக்கு பேர் வச்சா வரி விலக்குன்னு சொன்னதால என்னமா பேர் வெக்கராங்க சுத்தத் தமிழ்ல - உனக்கும் எனக்கும்; லீ; ஈ;

சுத்த வெட்டிப் பயலுவ.

டெண்டுல்கருக்கு வரிவிலக்கு கொடுக்கும்போது கொடி பிடிச்சவன் இப்பவும் பிடிக்கணும்.

முதல்வர் தமிழ வளர்க்கணும்னு நெனச்சா, பேசாம தமிழ்ல படத்துக்கு பேர் வெக்கரத சட்டமா போட ஏற்பாடு பண்ணலாம். அத விட்டுட்டு இவனுங்க எடுக்கர வெண்ண வெட்டி படத்துக்கு பல கோடி விரயம் பண்றது பேத்தல்.

(அடுத்த சர்வேக்கு ஐடியா வந்துடுச்சு :) )

 

Post a Comment

<< Home

Powered by Blogger