Bangalore Airport ல் நடிகர் பிருத்விராஜ்க்கு நேர்ந்த கொடுமை!!!
மேலே உள்ள படத்தை click செய்து video-வை காணுங்கள்.
Update 1 :
சமூகநீதி அமைச்சகம் வேதனை: இச் சம்பவம் குறித்து மத்திய சமூகநீதி அமைச்சகம் வேதனை தெரிவித்துள்ளது. மனவளர்ச்சி குன்றியவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும் என்று பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸôருக்கு அறிவுறுத்துமாறு விமான நிலைய அதிகாரிகளிடம் கூற அந்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
""பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு, அச் செய்தி உண்மையானதுதானா என்று உறுதி செய்யுமாறும்; உண்மையெனில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் எனது அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்று சமூகநீதித் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த, ஊனமுற்றோர் நல ஆணையர் மனோஜ்குமார் கூறினார்.
-------------------------------------------------------------
Click here for News about Bipasha Basu
19 Comments:
இவரைப் போன்ற ஸ்பெஷல் சிறுவர்கள் பற்றிய புரிதல் மிகக் குறைவாகவே இருப்பதனால் வரும் வினை. பொது மக்களோடு பழகும் அதிகாரிகளுக்காவது இதனைப் பற்றிய புரிதல் கொணர்வது அரசின் கடமை.
இச்சம்பவத்திற்கு உட்படுத்தப்பட்ட ப்ரித்விராஜின் குடும்பத்தினருக்கு எனது வருத்தங்கள்.
என்ன ஒரு அகம்பாவம் அந்த அதிகாரிக்கு.எப்படி அவரால் அன்று தூங்க முடிந்தது :-((((
வெட்கமாக இருக்கிறது :-(((
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post.html
அடக்கடவுளே. மனசுக்கு ரொம்பக் கஷ்டமாப் போச்சுங்க.
இப்படி கூடவா ஜனங்க இருப்பாங்க.(-:
ப்ருத்விராஜ் குடும்பத்தாருக்கு எனது வருத்தங்கள்.
அரசு அதிகாரிகளின் இந்த மனோபாவத்திற்கு நானும் மாட்டியிருக்கிறேன் ஒருமுறை. என்னுடைய சித்தி ஒருவர் பிறப்பிலேயே மனநலம் குன்றியவர். அவருக்கு ரயிலில் பயணம் செய்கையில் நல்ல கட்டணக்குறைப்பு உண்டு. அதற்கு ஒரு சான்றிதழும் காட்ட வேண்டும். ஒருமுறை அவரை கோயில்பட்டியிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்ல பயணச் சீட்டு வாங்க ரயில் நிலையத்திற்குச் சென்றேன். அப்பொழுது அந்த பயணச்சீட்டு கொடுனர் பேசிய பேச்சிருக்கிறதே. ஏதோ ஓசியில் கொடுப்பதால் நாங்கள் வந்திருக்கிறோம் என்ற அளவிற்குப் பேசினார். அவருக்குக் கொடுக்கப் பட வேண்டிய பதில் அன்றே கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் இவர்களால் எப்படி இந்த மாதிரி நடந்து கொள்ள முடிகிறது என்றுதான் தெரியவில்லை.
தன்னிடத்தில் எல்லாம் நன்றாக இருப்பதால் அடுத்தவன் குறையும் நிலையும் புரிய மாட்டேன் என்கிறது. நம்மை வைத்து அடுத்தவரை அளக்கக் கூடாது. அது மிக தவறு. மனிதர்களே இறைவன் உங்களுக்குக் கொடுத்த வேதம் உங்கள் மூளை. அதைப் பயன்படுத்துகள்.
It is an unfortunate incident . I really felt sad for Pritviraaj
இந்தியாவுக்கே கேவலம்!
//தன்னிடத்தில் எல்லாம் நன்றாக இருப்பதால் அடுத்தவன் குறையும் நிலையும் புரிய மாட்டேன் என்கிறது. நம்மை வைத்து அடுத்தவரை அளக்கக் கூடாது. அது மிக தவறு. //
இராகவன்,
சரியாகச் சொன்னீர்கள். ஒருவிதமான சுயநலம் கலந்த அலட்சிப்போக்கு பலருக்கு உண்டு.
அந்த அதிகாரி (அடத்தூ!) குடும்பத்தில் இப்படி யாருக்கேனும் இருந்திருந்தால் இப்படி தான் நடந்திருப்பானா (மரியாதை என்ன வேண்டிக்கிடக்கிறது?) என்று கேட்டு காறித் துப்ப வேண்டும்.
ப்ரிதிவிராஜ் & அவரது துணைவியாருக்கு ஆழ்ந்த ஆறுதல்கள்.
:(
கஷ்டம்! நம்மாளுங்க என்னிக்குத் தான் திருந்தப் போறாங்களோ..
differently abled child - என்பது இன்னும் அழகான பதமாக இருக்கிறது..
நிர்மல்.. வருகைக்கு நன்றி ..
அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க போற மாதிரி தெரியலை.
ஒரு பக்கம் இது போல பாதிக்கப்பட்டவர்களுக்கு " Barrier-free Environment" ஏற்படுத்த
"Natioanl Trust" போன்ற நிருவனங்கள் முயன்று வருகின்றன...
கட்டிடங்கள், பொது நிருவனங்கள் ஊனமுற்ரோரின் நலனை கருத்தில் வைத்தே கட்டவேண்டும் என்ற சட்டத்தையும் வகுத்து இருக்கிறார்கள்.. ஆனால் எந்த அளவுக்கு இந்த சட்டம் அமுலில் இருக்கிறது என்பது சந்தேகம் தான்..
அரசு அதிகாரிகளாலேயே பிரச்சனைனா என்ன செய்ய...
தொலைகாட்சியில் இந்த செய்தியை பார்த்தபோது கஷ்டமா இருந்தது..
ரெம்ப வருத்தமான செய்திங்க. நம்ம ஊர்ல எப்பத்தான் இந்த அசாதரண மனிதர்களுக்கு சாதாரண வசதிகள் கிடைக்குமோ தெரியல.
திரையில் விளையாட்டுப் பிள்ளையாய் திரியும் ப்ரித்விராஜுக்கு தனி வாழ்க்கையில இப்படி ஒரு சோதன(Challenge) இருப்பது இன்னும் வியப்பாகத் தெரிகிறது.
பதிவுக்கு நன்றி.
அந்த முட்டாள் அதிகாரிக்கு என்ன தண்டனை தரப்போகிறார்கள்?
என்றைக்கு தான் இவனுங்களை மாதிரியான ஆளுங்க திருந்தப்போறாங்களோ?
இந்த மாதிரி அறிவில்லாத, சமூகப் பொறுப்பற்ற அதிகாரிகளால் நாட்டுக்கே கேவலம்.
This is heights of Bureaucracy! A bunch of idiots screwing up the society and its people from time and again!
எனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.
ப்ரிதிவிராஜ் இதைச் சும்மா விடக் கூடாது. அந்த ஆளைக் கூண்டிலேற்றி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
Update 1:
சமூகநீதித் துறை அமைச்சகம் வருத்தம். விசாரணைக்கு உத்தரவு!!
கடைசியா ஒரு நல்ல செய்தி. அந்த அதிகாரியை தண்டிப்பதைத் தாண்டி, விழிப்புணர்வை கொண்டுவர முயற்சிகள் எடுக்க வேண்டும்.
மனம் ரொம்ப வருத்தப் படுகிறது.
பேற்றோருக்கு ஆறுதல்கள் பல
மயிலாடுதுறை சிவா...
Post a Comment
<< Home