Tuesday, November 14, 2006

Rajini யின் Hotel மீது கல் வீசிய வாலிபர் கைது !!!

Actor Rajini யைப் பார்க்க முடியாத ஆத்திரத்தில், அவருக்குச் சொந்தமான Hotel மீது கல்வீசிய நபரை போலீஸôர் கைது செய்தனர்.



திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அருள் (32). இவர், ராயப்பேட்டை பகுதியில் தங்கி கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். Rajini யைப் பார்க்க வேண்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றார். அங்கிருந்தவர்கள், Rajini படப்பிடிப்புக்கு வெளியே சென்றுள்ளார். எனவே, அவரை பார்க்க முடியாது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அவ்வழியே சென்ற ஒருவரிடம், Rajini க்கு சொந்தமான Hotel எங்கே உள்ளது என்று கேட்டுள்ளார். அவர், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது என்று கூறியுள்ளார்.

உடனே நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலைக்கு வந்த அருள், Rajini க்கு சொந்தமான ஹோட்டலுக்குள் உள்ள ஒரு உணவு விடுதியின் கண்ணாடி மீது கல்வீசினார்.

இதுதொடர்பாக, அங்கிருந்தவர்கள் போலீஸýக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு வந்த போலீஸôர், அருளை கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், Rajini யைப் பார்க்க முடியாத ஆத்திரத்தில், அவருக்குச் சொந்தமான Hotel மீது கல்வீசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தகவல்: தினமணி

4 Comments:

At 9:29 PM, Anonymous Anonymous said...

கல்லெறியத்தான் ரஜினி சாரைத் தேடினாரோ என்னவோ.

 
At 9:45 AM, Anonymous Anonymous said...

muttappaya,
thiraiyum , nijamum veru
Rajini tamilnattin saabhakkedu

 
At 1:39 PM, Blogger oosi said...

anony and anony,

Thanks for stopping by...

 
At 7:27 AM, Anonymous Anonymous said...

:-)

 

Post a Comment

<< Home

Powered by Blogger