Monday, November 13, 2006

Actress Gopkia's father beaten in Kerala by gang !!!


Actress Gopikaவின் தந்தையை ரவுடிக் கும்பல் கோபிகா கண் முன்னாலேயே சரமாரியாக அடித்து உøத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



Actress Gopikaவின் சொந்த ஊர் Kerala மாநிலம் Trichur. இங்குள்ள ஒரு தியேட்டருக்கு Gopika, அவரது தந்தை, தாயார், தங்கை ஆகியோர் படம் பார்க்கச் சென்றனர்.

அப்போது, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் ஒன்றில் சபீர் என்பவர் அமர்ந்திருந்தார். அவரை எழுந்திருக்குமாறு கோபிகாவின் தந்தை கூறியுள்ளார். இதையடுத்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சபீர் தனது Cell Phone மூலம் தனது நண்பர்களை தியேட்டருக்கு வரச் சொன்னார். அவர்கள் வந்தவுடன், அத்தனை பேருமாக சேர்ந்து கோபிகாவின் தந்தையை குண்டுக்கட்டாக தூக்கி தியேட்டருக்கு வெளியே கொண்டு வந்தனர்.

அங்கு வைத்து கோபிகாவின் தந்தையை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதைப் பார்த்து Gopika , தாயார், தங்கை ஆகியோர் கதறி அழுதனர். உதவி கோரி குரல் எழுப்பினார்கள். பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது.

இந்த சம்பவம் குறித்து Gopika சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த கோபிகாவின் தந்தை Hospital லில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தகவல்: தட்ஸ்தமிழ்.காம்

1 Comments:

At 4:31 PM, Anonymous Anonymous said...

சேட்டன் பாவம் :--(

 

Post a Comment

<< Home

Powered by Blogger