Vijaykanth வெட்டி பேச்சு பேசுகிறார் : T.R. Balu !!!
கல்யாண மண்டபத்தை இடிக்கப் பார்க்கிறார்கள், கட்சியை அழிக்கப் பார்க்கிறார்கள் என வீண் வம்பு பேசிக் கொண்டிருக்கிறார் Vijaykanth என்று Union Highways Minister T.R.Balu கூறியுள்ளார்.
தேமுதிகவை அழிக்கும் நோக்கில்தான் தனது கல்யாண மண்டபத்தை திமுக இடிக்கப் பார்க்கிறது என Vijaykanth குற்றம் சாட்டியுள்ளார்.இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன், என்னை அழிக்கப் பார்க்கும் திமுகவின் எண்ணம் பலிக்காது என்றும் கூறியுள்ளார்.
இந் நிலையில், Vijaykanthதின் பேச்சுக்கு Union Minister T.R. Balu காட்டமாக பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அமைச்சர் தனது திருமண மண்டபத்தை இடிக்கிறார் என்று புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள Vijaykanth, வீண்பழி சுமத்தி, மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட நினைக்கிறார்.
என்னிடம் சினம் கொண்டு சீறிப் பாய்வதை Vijaykanth நிறுத்திக் கொண்டு, மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து, சிந்தித்துப் பார்த்து உண்மை உணர்வது நல்லது.
கோயம்பேட்டில் Vijaykanth மனைவி Premalathaக்கு சொந்தமான இந்த நிலத்தை National Highways Department-ன் தேவையைக் கருதி அரசினால் கையகப்படுத்தப்பட இருக்கிறது என்று 20.12.2005 அன்று வெளியிட்ட முதல் அறிவிக்கையை தெரிவித்தபோது Vijaykanth ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை?
எவ்வளவு இடத்தை கையகப்படுத்துகிறோம் என்று மத்திய அரசு கூறவில்லை என்று தெரிவித்துள்ளார். கோயம்பேடு சர்வே எண் 14/2ல் 286 சதுர மீட்டரும், சர்வே எண் 14/3ல் 165 சதுர மீட்டரும், சேர்த்து மொத்தம் 451 சதுர மீட்டர் என்பதை பத்திரிக்கைகளில் வெளியிட்ட அறிவிக்கையில் இருப்பதை படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்வாரா?
Vijaykanth கொடுத்துள்ள மாற்றுத் திட்ட வரைபடத்தில் பாரிமுனையிலிருந்து அம்பேத்கர் சிலை சந்திப்பில் திரும்பி பாடி பகுதிக்கு செல்ல வழி வகுக்கப்பட்டிருக்கிறதா? பாரி¬முனையிலிருந்து கிண்டி செல்வதற்கு தந்துள்ள சாலையில், வட்டப் பகுதியில் உள்ள விட்ட அளவு இந்திய சாலை குழுமத்தின் விதிப்படி உள்ளதா?
இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் 164 பேரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களா? பொதுமக்கள்தானே.
இப்படிப்பட்ட சாலை விரிவாக்கத்தினால் Hindu, Muslim, Christian வழிபாட்டுத் தலங்கள், திருமண மண்டபங்கள் இடிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதே இல்லையா?
தாம்பரம் சானட்டோரியத்தில் இருந்த அஷ்டலட்சுமி, ஆஞ்சநேயர், ராமர் கோவில்கள், காயிதே மில்லத் தொழுது வந்த குரோம்பேட்டை மசூதி, சிங்கபெருமாள் கோவில் கோவில் கட்டடங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறை பணிகளுக்காக கையகப்படுத்தவில்லையா?
கத்திப்பாரா சந்திப்பில் நடைபெறும் பல கோடி ரூபாய் பணிகளுக்காக அரசுத் துறையின் SIDCO கட்டடம் இடிக்கப்படவில்லையா?
நேருவின் சிலை கத்திப்பாரா சந்திப்பிலிருந்து இடமாற்றம் செய்யப்படவில்லையா? இந்த கோயம்பேடு சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலை மாற்று இடத்தில் அமைத்திட Dalit இயக்கங்களும், அரசியல் தலைவர்களும் ஒத்துழைப்பு தரவில்லையா?
கோயம்பேடு, மீனம்பாக்கம், கத்திப்பாரா, பாடி ஆகிய இடங்களில் கட்டப்படும் மேம்பாலப் பணிகளை 2005 பிப்ரவரி 1ம் தேதி முதல்வர் Karunanidhi துவக்கி வைத்துப் பேசினார் என்பதை நாடறியும். மதுரையில் Vijaykanth தேமுதிக என்ற கட்சியை 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதியன்றுதான் தொடங்கினார்.
Karunanidhi கோயம்பேடு திட்டப் பணிகளை துவக்க வைத்த பிறகு 8 மாதம் கழித்துத்தான் Vijaykanth அரசியல் கட்சியைத் தொடங்கினார். இதுதான் வெளிப்படையான உண்மை. சுமார் 8 மாதத்திற்குப் பின்னர் துவக்கப்படவிருந்த ஒரு கட்சியை அழிப்பதற்கு முன் கூட்டியே திமுக திட்டமிட்டதா?
57 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாவால் துவங்கப்பட்ட அமைப்பு திமுக. இது ஒரு லட்சிய அமைப்பு. வீண் வம்பு, வானத்தை வளைத்து வில்லாக்கும் வெட்டிப் பேச்சு இவைகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பு என்று கூறியுள்ளார் பாலு.
Related Post:
Vijayakanth ஒத்துழைக்க வேண்டும்: T.R. Balu
3 வாரத்தில் விஜயகாந்த் திருமண மண்டபம் இடிப்பு !!!
Vijaykanth: திருமண மண்டபம் இடிப்பு - திட்டமிட்ட சதி!!!
2 Comments:
சிநேகிதன் ...அதென்ன அப்படி கேட்டு புட்டீங்க ...அவுங்க ஏரியால நெரிசல் எப்படிங்க ஏற்படும் ?
சிநேகிதன் ...அதென்ன அப்படி கேட்டு புட்டீங்க ...அவுங்க ஏரியால நெரிசல் எப்படிங்க ஏற்படும் ?
Post a Comment
<< Home