Friday, November 10, 2006

Vijaykanth: திருமண மண்டபம் இடிப்பு - திட்டமிட்ட சதி!!!

சட்டப் பேரவை, உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு திருமண மண்டப இடிப்பு விவகாரத்தை எழுப்புவது திட்டமிட்ட சதி என்று தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கூறினார்.

என்னைப் அச்சுறுத்தி திமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும்; தேமுதிக கட்சியை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக Union Minister டி.ஆர். பாலு ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் மற்றும் தேமுதிக கட்சி அலுவலகத்தை இடிக்கப்போவதாக கூறியுள்ளார் என்றார் அவர்.



Chennai யில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் இப்போதைக்கு திருமண மண்டபத்தை இடிக்கும் திட்டம் கிடையாது. மாற்றுத் திட்டம் கொடுக்கலாம் என்று டி.ஆர். பாலு கூறினார்.

மாற்றுத்திட்டம்: National Highways ஆணையத்தின் திட்டப்படி, ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அமையும் பகுதியில் தரைவழிப் பாதை மட்டுமே வருகிறது. மேம்பாலம் வரவில்லை. தரைவழிப் பாதையில் மட்டும் சிறிது மாற்றம் செய்து மாற்றுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இத்திட்டத்தை, Chennai Metropolitan Developement Board முன்னாள் தலைமைத் திட்ட அதிகாரி ஒருவர் தான் தயாரித்து வழங்கினார்.

மாற்றுத்திட்டத்தை நிராகரிக்கிறோம் என்று ஒரு வரியில் அண்மையில் பதில் அனுப்பப்பட்டிருந்தது. ஏன் நிராகரிக்கிறார்கள் எனக் குறிப்பிடப்படவில்லை. எந்தப் பகுதியை இடிக்க உள்ளனர் என்பது குறித்தும் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து Kanchipuram District Special Revenue Officer க்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்து 8 மாதங்கள் ஆகின்றன.

மேலும் நாங்கள் நஷ்டஈடுத் தொகையை அதிகப்படுத்த வேண்டும் எனக் கோரியதாக பாலு தெரிவித்துள்ளதும் பொய்யான தகவல்.

குடிசைப் பகுதி மக்களுக்கு வீடு வழங்குதல் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு எனது மண்டபத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வேண்டுமென்றே என்னையும், எனது கட்சியையும் அழிக்கும் நோக்கில் இந்த மண்டபம் இடிக்கப்படுகிறது. இது அரசியல் பழிவாங்கும் படலம்.

இந்த அநீதியை மக்கள் மன்றத்தில் பேச வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது இதுகுறித்து பேசுகிறேன்.

Chennai Airport Expansion: திமுகவினரின் நிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக Airport க்கு வலதுபுறமாக உள்ள நிலங்களை விரிவாக்கத் திட்டத்துக்குக் கையகப்படுத்தவில்லை. ஆனால், பொழிச்சலூர் குடியிருப்புப் பகுதிகளைக் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார் விஜயகாந்த்.

Related Post:

3 வாரத்தில் விஜயகாந்த் திருமண மண்டபம் இடிப்பு !!!

5 Comments:

At 10:13 PM, Blogger Sridhar V said...

அவரவர் பிரச்சினை அவரவர்க்கு... அதற்குத்தானே முன்னுரிமை கொடுத்து அறிக்கை விட வேண்டும். பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு இருக்கவே இருக்கு 'இலவச வாக்குறுதிகள்'.

120 ரூபாய் மட்டுமே சொத்தாக வைத்திருந்த காமராஜரையும் பார்த்திருக்கோம்... என்று ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

 
At 9:01 AM, Blogger oosi said...

காமராஜர் இப்ப இருந்தா நொந்து நூலா போயிருப்பார் !!

வருகைக்கு நன்றி Sridhar.

 
At 5:11 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

//காமராஜர் இப்ப இருந்தா நொந்து நூலா போயிருப்பார் //

கரெக்ட். காமராஜர் இந்திராவின் எமர்ஜின்சி பிரீயடை பார்த்தே உயிரை விட்டவர்.. ஹிம்..பாவம் நாம் தான்.. சொத்து போகுதேன்னு விஜயகாந்துக்கு கவலை..

 
At 2:02 AM, Blogger bala said...

ஊசி அய்யா,

எனக்கென்னவோ கேப்டன் அளவுக்கு
அதிகமா கவலைப்பட அவசியமில்லை என்று தோன்றுகிறது.

எதற்க்கும் ஒரு விலையை பேசி முடித்து, கொள்ளை அடிப்பதில் கைதேர்ந்தவர்கள் பகுத்தறிவு பாசறையில் பயின்று வந்த கழகக் கண்மணிகள்.

பாலா

 
At 12:49 AM, Anonymous Anonymous said...

http://www.savepozhichalur.blogspot.com/
PLEASE SEE THE LINK..THANKS

//Chennai Airport Expansion: திமுகவினரின் நிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக Airport க்கு வலதுபுறமாக உள்ள நிலங்களை விரிவாக்கத் திட்டத்துக்குக் கையகப்படுத்தவில்லை. ஆனால், பொழிச்சலூர் குடியிருப்புப் பகுதிகளைக் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார் விஜயகாந்த்.//



http://www.savepozhichalur.blogspot.com/

 

Post a Comment

<< Home

Powered by Blogger