JIPMER விவகாரம் : ராமதாஸ் ஆவேச பேட்டி !!!
Puducherry யில் உள்ள JIPMER மருத்துவனைக்கு சுயாட்சி அதிகாரம் கொடுப்பதை எவனாலும் தடுக்க முடியாது என்று பாமக நிறுவனர் Ramadoss படு ஆவேசமாக கூறியுள்ளார்.
Puducherry பாமக எம்.பி. Ramadoss ன் பொது வாழ்வுச் சாதனைகளைப் பாராட்டும் விதமாக Puducherry யில் பாமக சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பாமக நிறுவனர் Ramadoss படு ஆவேசமாகவும், காட்டமாகவும் பேசினார்.
ராமதாஸின் பேச்சு புதுவை முதல்வர் ரங்கசாமியை குறி வைத்து ஆவேசமாக இருந்தது. குறிப்பாக JIPMER விவகாரம் தொடர்பாக அவர் பேசும்போது அவன், இவன் என்று ஒருமையிலும் கோபமாக பேசினார்.
ராமதாஸ் பேசுகையில், JIPMER மருத்துவனைக்கு கண்டிப்பாக சுயாட்சி அந்தஸ்து கொடுக்கப்படும். அந்த மருத்துவமனை மிகச் சிறந்த வசதிகளைப் பெறும் பொருட்டுதான் சுயாட்சி அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சுயாட்சி அதிகாரம் கொடுக்கப்படுவது நிச்சயம். அதை எவனாலும் தடுக்க முடியாது. எந்த நாயாலும் தடுக்க முடியாது. JIPMER க்கு சுயாட்சி அந்தஸ்து கிடைப்பதால் தங்களுக்கு பாதிப்பு வரும் என ஊழியர்கள் நினைக்கத் தேவையில்லை.
ஊழியர்கள் தங்களது போராட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். அவர்களை சிலர் பின்னால் இருந்து தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களின் சதி பலிக்காது.
இங்கே என்ன ஆட்சி நடக்கிறது என்றே தெரியவில்லை. ரங்கசாமி முதல்வராக நீடித்தால், Puducherry மாநிலம் சீரழிந்து விடும், சின்னாபின்னமாகிப் போய் விடும். அவரது ஆட்சியில் Puducherry சிதிலமடைந்து போய்க் கிடக்கிறது.
Pondicherry என்ற பெயரை Puducherry என்று மாற்ற முக்கியக் காரணம் இங்கே உள்ள பாமக எம்.பி. Ramadossதான். அவரது இந்த வரலாற்றுச் சாதனையை பாடப்புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்.
அதேபோல Puducherry யில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் எம்.பி. Ramadoss தான் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். பஞ்சாயத்துக்குளுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார்.
தேசிய பஞ்சாலைக் கழகம் வசம் இருந்த பாரதி மற்றும் சுதேசி மில்களைப் பெற்று அதை மாநில அரசிடம் ஒப்படைத்த பெருமையும் பாமகவுக்கே உண்டு என்றார் Ramadoss.
முதல்வர் ரங்கசாமியையும், Puducherry காங்கிரஸ் ஆட்சியையும் Ramadoss கடுமையாக விமர்சித்துப் பேசியிருப்பது புதுவை காங்கிரஸார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Source: Thatstamil.com
5 Comments:
பச்சைதுரோக கழகத்துடன் மஞ்சள் துண்டு போட்டு மாட்டுத்தரகு ரேஞ்சில ஜிப்மருக்கு நடத்தியாச்சுல்ல அதான் ஏகபோக உரிமைக்குத் தடையா இருக்கிற ரங்கசாமியை ஏகவசனத்துல இடிதாங்கியாக்கி தாக்கியிருக்காரு குடிதாங்கி மருத்துவர்!
18 எம்.எல்.ஏ + அஞ்சாறு எம்.பிக்கு ஒரு பெரிய ஜிப்மர் அறுவடையாகுதுன்னா. புதுச்சேரி நல்லா நாலுபோகம் விளைக்கிற அரசியல் புதியபூமிதான் நம்ம பெரிய & சின்ன மரு(ந்)துகளுக்கு!
எவனும் குறுக்கப் பேசினா தமிழ்ப்பாதுகாப்பு ஊசியப் போட்டுற வேண்டியது தான்!
தமிழ் ஊசிக்கும் அடங்காதவனை சாலையோரப் புளிய மரவெட்டியா மாறி அவன் வாயில் கெரசின ஊத்தி எரிச்சு வெட்டிரலாம்!
பின்ன அவங்க உரிமைக்கு குறுக்க வந்தா மரவெட்டிதான்!
அவர் பேசும்போது அவன், இவன் என்று ஒருமையிலும் கோபமாக பேசினார்.
அதை எவனாலும் தடுக்க முடியாது. எந்த நாயாலும் தடுக்க முடியாது.
JIPMER விஷயம் என்னவோ இருந்துட்டு போகுது. மேடை நாகரிகமே தெரியலே. கேட்டா "எங்கள் தலைவர் சற்று உணர்ச்சி வசப்படுவார், மற்றபடி நல்லவர்", அப்பிடினு சொல்லுவாங்க. இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் காவடி தூக்கறவனயெல்லாம் என்ன சொல்றது?
//இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் காவடி தூக்கறவனயெல்லாம் என்ன சொல்றது//
ஹரி அய்யா,
குழலின்னு பேர் வச்சுக்க சொல்லலாம்.
பாலா
Hari, Hariharan & Bala,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி !!
வருகைக்கு நன்றி சிநேகிதன் !!!
Post a Comment
<< Home