Sunday, November 12, 2006

Vijayakanth ஒத்துழைக்க வேண்டும்: T.R. Balu

Chennai கோயம்பேட்டில் அமையவுள்ள அடுக்கு மேம்பாலம் உருவாக விஜயகாந்த் ஒத்துழைக்க வேண்டும் என்று Union highways Minister T.R. Balu கூறியுள்ளார்.


இதுதொடர்பாக Chennai Guindy யில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோயம்பேட்டில் பல திசைகளுக்கு வாகனங்கள் செல்வதற்கு வசதியாக அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

இந்த மேம்பாலம் அமைப்பதற்காக அங்கு Vijayakanth தின் கல்யாண மண்டபம் உள்பட 164 கட்டடங்களை இடிக்கவுள்ளோம். இதில் Vijayakanth அரசியல்வாதி என்பதால் அவரது கட்டடத்தை இடிக்கத் துடிப்பதாக கூறுவது நியாயமல்ல. மற்ற கட்டடங்களுக்குச் சொந்தமானவர்கள் சாதாரணர்கள் தான், அவர்கள் அரசியல்வாதிகள் கிடையாது.

இத்திட்டத்திற்கு Vijayakanth மாற்றுத் திட்டம் கொடுத்தார். ஆனால் அவர் தந்த திட்டத்தில், வலது புறம் அதாவது Paris corner இருந்து பாடி செல்ல வழி இல்லை. மேலும் Paris corner ல் இருந்து கத்திப்பாராவுக்கு செல்லும் பாதை 40 அடியாக உள்ளதா என்பதைக் கூற வேண்டும்.

மாற்றுத் திட்டம் Indian Legislation க்கு உட்பட்டு உள்ளதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

முன்பு கத்திப்பாராவில் பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட SIDCO கட்டடம், அங்கு கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளுக்காக இடிக்கப்பட்டது. அதற்காக அரசை எதிர்ப்பதாக அர்த்தம் கிடையாது. வளர்ச்சித் திட்டங்களுக்கு அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். அது Vijayakanth க்கும் பொருந்தும் என்றார் Balu.

தகவல்: தட்ஸ்தமிழ்.காம்

Related Post:

3 வாரத்தில் விஜயகாந்த் திருமண மண்டபம் இடிப்பு !!!
Vijaykanth: திருமண மண்டபம் இடிப்பு - திட்டமிட்ட சதி!!!

0 Comments:

Post a Comment

<< Home

Powered by Blogger