Vijaykanth opposes death sentence to Saddam !!!
Iraq முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
Iraq முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது மனிதாபிமானமற்ற செயல். கோர்ட்டில் சதாம் உசேன் முன் வந்து வழக்காடினார். கோர்ட் அதை புறக்கணித்தது மட்டுமல்ல, அவர் சார்பான வாதங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
சதாம் உசேனுக்கு அளித்த துõக்கு தண்டனை நியாயம் அற்றது என்ற உணர்வே உலக மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது. மேலை நாடுகளின் நிர்பந்தத்தால் அவருக்கு துõக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவே மக்கள் கருதுகின்றனர்.
சதாம் உசேன் சார்பாக வாதாடிய வக்கீல்களும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நீதி வழங்கினால் மட்டும் போதாது. நியாயமான முறையில் நீதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும்.
அதற்கொப்ப நீதி வழங்கப்படவில்லை என்றே தெரிகிறது. ஆகவே சதாம் உசேனுக்கு அளிக்கப்பட்ட துõக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்து, நியாயமான விசாரணைக்கு வழிவகுப்பதே முறை.
இந்த சூழ்நிலையில் அவருக்கு வழங்கிய தீர்ப்பை கண்டிப்பது மட்டுமல்ல. அதனால், Iraq-கில் ஏற்பட்டிருக்கும் அமளி, உலக அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் என்பதை மேலைநாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
பின் குறிப்பு : விஜயகாந்தின் இந்த அறிக்கை, அதிபர் புஷ்சை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கேப்டனின் வேண்டுகோளை ஏற்று, சதாம் உசேனை விடுதலை செய்ய திட்டமிடுவதாகவும் தெரிகிறது.
Related Post:
3 வாரத்தில் விஜயகாந்த் திருமண மண்டபம் இடிப்பு !!!
2 Comments:
கேப்டன்னா கேப்டன்தான் ...
உள்ளூரில் பற்றி எரியும் பிரச்சினைகளைப் பற்றி வாய் திறாக்காதவர்
சதாமுக்கு குரல் கொடுக்கிறாரா!
Post a Comment
<< Home