Weekly Special : Wonderful Websites அறிமுகம் - 2 !!
இந்த தொடரின் முதல் நாளான நேற்று நாம் பார்த்தது தமிழ் வாக்கு வலைதளம். இன்று நாம் காண இருப்பது இரு Video sharing தளங்கள்.
YouTube.com பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. சமீபத்தில் அதை Google.com, 1.65 பில்லியன் டாலர்கள் கொடுத்து விலைக்கு வாங்கியதும் பரபரப்பாக பேசப்பட்டது. YouTube.com தளத்தை போன்ற இரு Website-களை நான் சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தேன்.
இப்பொழுது மேலும் இரு Video Sharing தளங்கள் இதோ உங்களுக்காக. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், கீழ் கண்ட இரு தளங்களும் இந்தியர்களால் இந்தியர்களுக்காக உருவாக்கபட்டது. நான் பார்த்த வரையில் வட இந்தியர்களின் நடமாட்டமே அதிகமாக தென்படுகிறது.
1) www.meravideo.com

2) www.apnatube.com

இதில் apnatube.com தளத்தில் Adults only சமாச்சாரங்கள் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. மற்றபடி இந்த தளங்களில் இருந்து வீடியோக்களை பதிவுகளில் embed செய்யும் வசதி உண்டு.
meravideo.com தளத்தில் இருந்து ஒரு video இதோ இங்கே. ஒரு ஆணும், பெண்ணும் வேகமாக வரும் ரயில் வண்டியில் அடி படாமல் மயிரிழையில் தப்பிப்பதை தெளிவாக காட்டும் Video.
3 Comments:
பயனுள்ள தகவல்..நன்றி
Thanks for the very useful info :)
Thanks for coming back Arunkumar !!
Thank you Anony !!
Post a Comment
<< Home