Thursday, November 09, 2006

Tamil Actress Jyothika படப்பிடிப்பிலிருந்து வெளிநடப்பு !!

மொழி படத்தின் ஷýட்டிங்குக்காக ஒரு நாள் கால்ஷீட் கொடுத்திருந்த ஜோதிகா, மேக்கப்மேன் வராததால் கோபமடைந்து ஷýட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.



சூர்யாவைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பு ஜோதிகா நடித்து வந்த படம் மொழி. இந்தப் படத்தை ராதாமோகன் இயக்குகிறார். இப்படத்தின் சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சியில் ஜோதிகா நடிக்க வேண்டியிருந்தது பாக்கி இருந்த நிலையில், அவருக்கு கல்யாணம் ஆகி விட்டது.




Click here for Surya-Jothika Marriage snaps

இருப்பினும், கல்யாணத்திற்குப் பிறகு இந்தக் காட்சிகளை முடித்துக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தார் ஜோதிகா. சொன்னபடியே கல்யாணம், தேனிலவு, தலை தீபாவளி எல்லாவற்றையும் முடித்து விட்டு மொழி படத்தில் தான் சம்பந்தப்பட்ட மிச்சக் காட்சிகளை நடித்துக் கொடுத்தார் ஜோதிகா.

சமீபத்தில் மொரீஷீயஸில் ஜோதிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியைப் படமாக்கினர். இந் நிலையில், சொச்சக் காட்சிகளை முடிக்க அடிசனலாக ஒரு நாள் கால்ஷீட் கொடுத்திருந்தார் ஜோதிகா. இதற்காக ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு ஜோ வந்தார்.

இப்படத்தில் வாய் பேச முடியாத, காது கேளாத பெண்ணாக ஜோதிகா நடிக்கிறார். இதற்காக சிறப்பு மேக்கப் போட மும்பையிலிருந்து மேக்கப்மேனுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஜோதிகா வந்து நெடு நேரமாக காத்திருந்தபோதும், மேக்கப் மேன் வருவதாக தெரியவில்லை.

பொறுத்துப் பார்த்த ஜோதிகா ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தார். இதற்கு மேலும் என்னால் காத்திருக்க முடியாது என்று கடுப்பாக சொல்லியபடி கிளம்பி காரில் ஏறி வீட்டுக்குப் பறந்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர் ராதா மோகன், வேறு வழியில்லாமல் அன்றைய ஷýட்டிங்கை கேன்சல் செய்து விட்டு பின்னாலேயே ஜோதிகா வீட்டுக்கு ஓடினார்.

அங்கு ஜோதிகாவிடம் ஸாரி சொல்லிய அவர் பெரிய மனது பண்ணி இன்னும் ஒரே ஒரு நாள் மட்டும் கால்ஷீட் கொடுங்கள், எப்படியும் அன்றைக்குள் உங்களது காட்சிகளை முடித்து விடுகிறோம் என்று கோரியுள்ளார். மனம் இறங்கிய ஜோதிகா சரி என்று சொல்லியிருக்கிறாராம்.

தகவல்: தட்ஸ்தமிழ்.காம்

0 Comments:

Post a Comment

<< Home

Powered by Blogger