Wednesday, November 08, 2006

Dinamalar : "காட்சி பொருளானது' இலவச கலர் "டிவி'

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவுக்கு உட்பட்ட நடுவலுõர் சமத்துவபுர மக்களுக்கு அரசு வழங்கிய இலவச கலர் "டிவி' களில் படங்கள் தெரியாததால், ,பெரும்பாலானவை "காட்சி பொருளாக' வைக்கப்பட்டுள்ளன.கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தேர்தல் அறிக்கையில், "அனைவருக்கும் இலவச கலர் "டிவி' வழங்கப்படும்' என வாக்குறுதி அளித்தது.

தொடர்ந்து, தி.மு.க., கூட்டணி அரசு ஆட்சி பொறுப்பேற்றதும், தேர்தல் அறிக்கையில் கூறியபடி, முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் மற்றும் குடிசை மாற்று வாரியங்களில் உள்ள மக்களுக்கு இலவச கலர் "டிவி' களை வழங்கியது.கடந்த செப்.,15ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி இலவச கலர் "டிவி'வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். தொடர்ந்து செப்டம்பர் 16ம் தேதி மாநிலம் முழுவதும் அந்தந்த பகுதி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் தலைமையில், இலவச கலர் "டிவி'கள் வழங்கப்பட்டன.தலைவாசல் சட்டசபை தொகுதியில் கெங்கவல்லி தாலுகாவுக்கு உட்பட்ட நடுவலுõர் சமத்துவபுரத்தில் எம்.எல்.ஏ., சின்னதுரை தலைமையில் இலவச கலர் "டிவி'கள் 87 பேருக்கு வழங்கப்பட்டன. இலவச கலர் "டிவி'யை பெற்ற சமத்துவபுரம் குடியிருப்புவாசிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.அவர்களின் மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்கவில்லை. "டிவி'யை பெற்ற மறுதினம் முதலே பலரின் வீடுகளில் இலவச கலர் "டிவி' தனது "வேலையை' காட்டத் துவங்கியது. திடீரென படம் தெரியாமல் போவது, "டிவி' சூடேறி அதன் பாகங்கள் புகைந்து தீப்பிடித்தது போன்ற நாற்றம் வீசுவது என பல குறைபாடுகள் இருந்ததால், மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு சிலரின் வீடுகளில் உள்ள இலவச கலர் "டிவி'களில் "காட்சி'களை பார்க்க முடியாததால், அவை காட்சி பொருளாக மாறின.நடுவலுõர் சமத்துவபுரத்தில் வசிக்கும் முருகேசன், செல்வம், பார்வதி, பூக்காரர், சின்னு, சிவந்து, செல்லப்பன் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய"டிவி'கள் சில வாரங்களிலேயே பழுதடைந்தன. இந்த இலவச கலர் "டிவி'கள் பழுதடைந்தால், அந்தந்த மாவட்ட தலை நகரங்கள் மற்றும் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள அரசின் அங்கீகாரம் பெற்ற கடைகளில் கொடுத்து, "டிவி'யை சர்வீஸ் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாநிலம் முழுவதும் 24 எலக்ட்ரானிக்ஸ் "டிவி' சர்வீஸ் சென்டர்களுக்கு அரசின் இலவச கலர் "டிவி'கள் சரி செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சமத்துவபுரங்களில் வழங்கப்பட்ட இலவச கலர் "டிவி'களை சரிசெய்ய, சேலம், சாரதா காலேஜ் ரோட்டில் உள்ள கிருத்திகா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை அரசு நியமித்துள்ளது.இந்த நிறுவனத்தை சம்பந்தப்பட்ட நடுவலுõர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தோர் போனில் தொடர்பு கொண்டு "டிவி' பழுதடைந்தது குறித்து புகார் தெரிவித்தனர்.யாரும் வந்து பழுதை சரி செய்யவில்லை. மீண்டும் அவர்களை பல முறை தொடர்பு கொண்ட போது, அவர்கள் பழுது சரி செய்து கொடுக்க முன் வராமல், "டிவி' களை சேலம் கொண்டு வரும்படி கூறியுள்ளனர்.

இது குறித்து நடுவலுõர் சமத்துவபுரம் வீடு எண்.93 குடியிருப்பில் வசிக்கும் முருகேசன் கூறியதாவது: இந்த "டிவி' வழங்கப்பட்ட மறுநாள் முதல் படமே தெரியவில்லை. இதுகுறித்து அப்போதே சேலத்தில் உள்ள "டிவி' சர்வீஸ் சென்டரை போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தோம். அவர்களிடமிருந்து பதில் இல்லாததால், தொடர்ந்து பல முறை தெரிவித்தோம். ஆனால், யாரும் "டிவி'யைசரி செய்ய வரவில்லை."டிவி'யை சர்வீஸ் சென்டருக்கு எடுத்து வரும்படி கூறுகின்றனர்.

சேலம் ஆத்துõர் சாலை மோசமாக இருப்பதால் "டிவி'யை பஸ்ஸில் எடுத்து செல்வது கடினம் என தெரிவித்தால், "ஜமக்காளத்தில் கட்டிக் கொண்டு' துõக்கி வரும்படி கிண்டலாக பதில் தெரிவிக்கின்றனர்.என்னுடைய "டிவி' மட்டுமின்றி, இங்கு இருபதுக்கும் மேற்பட்டோரின் வீடுகளில் அரசின் இலவச கலர் "டிவி'யில் சரிவர காட்சிகள் தெரியவில்லை.இவ்வாறு முருகேசன் கூறினார்.அதே பகுதியில் வசிக்கும் பெரியம்மாள், பாப்பாத்தி ஆகியோர் கூறியதாவது:சிறிது நேரம் "டிவி' ஓடினாலே, "டிவி' சூடாகி தீப்பிடித்த நாற்றம் வீசுகிறது. சில சமயங்களில் படமே தெரிவதில்லை. பல வீடுகளில் இதே நிலை தான் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.கெங்கவல்லி சமத்துவபுரத்தில் அரசு வழங்கிய இலவச கலர் "டிவி'கள் பல பழுதடைந்த நிலையில் இருப்பதால், மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

தகவல்: தினமலர்

0 Comments:

Post a Comment

<< Home

Powered by Blogger