ஊசி aka pin
இங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.
Friday, February 02, 2007
Wednesday, January 31, 2007
Vijakanth ஐ கேள்வி கேட்கிறார் Nepolean !!
கேள்வி கேட்கிறேன் என்று சொல்லிக்கொண்டு உளறி தள்ளியிருக்கிறார் நடிகர் Napolean.
நெப்ஸின் அறிக்கையிலிருந்து .....
1)
கருணாநிதியின் உழைப்பின் முன் நீங்கள் எல்லாம் எம்மாத்திரம். நீங்கள் பிறக்கும் முன்பே அவர் சினிமாவில் வசனம எழுதி 50 ஆண்டுகளுக்கு முன்பே அன்று அவர் வாங்கிய சம்பளத்திற்கு இணையாக இன்றும் நீங்கள் வாங்கவில்லை.
2)
எத்தனையோ நாடகங்கள், 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம், 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள், பத்திரிக்கைளுக்கு கதை, கட்டுரை, சிறுகதை, காவியங்கள், சங்கத்தமிழ், குறளோவியம், பாயும் புலி பண்டார வன்னியன், பொன்னர் சங்கர், தொல்காப்பியம் போன்ற இலக்கியங்கள் என 60 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி எழுதி தமிழை அன்றாடம் வளர்த்து கொண்டு இருக்கும் தலைவரை பார்த்து தொடர்ந்து தரம் தாழ்த்தி பேசி வரும் உங்களைப் பார்த்தால் நீங்களும் ஒரு தமிழனா என்று எங்களுக்கு சந்தேகம் வருகிறது.
3)
நடிகர் சங்கத்தில் அவர் தலைவராக இருந்த போது திரையுலகில் ரஜினி, கமல் என்று அனைத்து நடிகர்களும் ஒன்று சேர்ந்து சிங்கப்பூர், மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தி, அதன் மூலம் கிடைத்த பணத்தில் நடிகர் சங்க கடனை அடைத்தோம். ஏன் இவர் தன் பணத்தை கொடுத்து அடைக்கவில்லை?
4)
இன்று அரசியலில் இறங்கி விட்டதால் 232 இடங்களில் நின்று ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் வென்றார். அதற்குள் ஆட்சியை பிடித்து முதல்வர் ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறார். தன்னுடைய கல்லூரிக்கே முதல்வர் ஆக முடியாத போது நாட்டின் முதல்வர் என்றால் இவருக்கு சாதாரணம் ஆகிவிட்டதா?
இதில் 1 & 4 மிகவும் சிரிப்பை வரவழைக்கதக்கவை.