Tamil Actress Srividya in Hospital - Advanced Cancer
Srividya passes away
நடிகை ஸ்ரீவித்யா புற்று நோயால் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர் ஸ்ரீவித்யா. சிவாஜி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஏராளமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீவித்யா, மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஆவார்.
ஸ்ரீவித்யா கடந்த 2 ஆண்டுகளாகவே வெளியில் எங்கும் காண முடியவில்லை. படங்களிலும் அவர் நடிக்கவில்லை. மலையாள டிவி தொடர் ஒன்றில் நடித்து வந்த அவர் அதிலிருந்தும் விலகி விட்டார். அத்தொடரும் நிறுத்தப்பட்டு விட்டது.
சென்னையைக் காலி செய்து விட்டு கேரளாவுக்கு இடம் பெயர்ந்த ஸ்ரீவித்யாவுக்கு என்ன ஆனது என்பதே தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் ஸ்ரீவித்யா, உடல் நிலம் மோசமாகி கேரளாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியானது. ஆனால் எந்த மருத்துவமனை என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அந்த விவரம் தெரிய வந்துள்ளது.
கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் ஸ்ரீவித்யா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவும், அது உச்சத்தை அடைந்திருப்பதாகவும், இதனால் அபாய கட்டத்தில் ஸ்ரீவித்யாவின் உடல் நலம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீவித்யாவின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் கடுமையாக முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கணவரை விட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்ட ஸ்ரீவித்யா, உற்றார், உறவினர்களுடனும் சேராமல் தனித்தே வாழ்ந்து வருகிறார்.
தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீவித்யாவுக்கு மலையாள நடிகரும், எம்.எல்.ஏவுமான கணேஷ்குமார்தான் உதவியாக இருந்து வருகிறார். ஸ்ரீவித்யாவின் நிலை குறித்து கணேஷ்குமார் கூறுகையில், ஸ்ரீவித்யா எனக்கு தாய் போன்றவர். அவரது உடல் நிலை மோசமாக உள்ளது. அவரைக் காப்பாற்ற கடுமையாக முயன்று வருகிறோம் என்றார்.
Courtesy : Thatstamil.com