Saturday, October 14, 2006

Kumudam செயலை கண்டித்து Vivek கடிதம்!!!

வணக்கம்.

விவேக் எழுதுகிறேன். தமிழின் ஒண்ணாம் நம்பர் இதழான ‘குமுதம்’ பத்திரிகையில்... சென்ற வாரம் ‘ஜாம்பவான்’ பட விமர்சனம் கண்டேன். களிப்பேருவுவகை அடைந்தேன்.

அடடா! அடடா! என்ன ஒரு விமர்சனம்! அதிலும் என் காமெடி பற்றி ஒற்றை வரியில் ‘‘வழக்கம்போல் பகுத்தறிவுப் பிரசாரம்’’ என்று திருவாய் முத்து உதிர்த்துள்ளீர்களே! அதுதான் சூப்பரோ சூப்பர்!

‘‘கலையில்லாத பிரசாரமும்; பிரசாரம் இல்லாத கலையும் _ மக்களைச் சென்றடையாது’’ என்று நான் சொல்லவில்லை; காரல்மார்க்ஸ் காரல்மார்க்ஸ் என்று தாடி மீசையோடு இருந்தாரே ஒரு பொருளாதார, சமூகவியல் மேதை! அவர் சொன்னார். (இதையே ரகஸ்யா சொல்லியிருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்!) அவர் உரைத்தது இன்றுவரை ஏனோ உங்களுக்கு உறைக்கவில்லை.

‘ஜாம்பவான்’ படத்தில் நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டதை, நான் உங்களுக்கு விண்டு ரைக்க விழைகிறேன்.

‘கல்வியறிவுதான் மக்களை மேம்படுத்தும்’ என்ற கருத்தை வலியுறுத்தும் விதத்தில், கிராம நாட்டாமை ஊருக்குப் புதிதாய் வந்திருக்கும் டாக்டரைச் (விவேக்) சந்திக்கும் காட்சியில் காமெடியாக அமைத்திருப்பேன்.

ஹீரோயின் நிலா... சித்தபிரமை அடைந்த நிலையில் இருக்கும்போது, கிராமத்து வைத்தியச்சி அவளை சாமியாடி வேப்பிலையால் அடிக்கும்போது... இது, ‘‘பேய் பிடிக்கவில்லை....’ இதற்குப் பெயர் ‘ஸ்கீசோபெர்னியா’ என்ற மனவியாதி. இதற்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொள்ளவேண்டும்’’ என்று கூறியிருக்கிறேன்.

‘சேது’வில் இருந்து ‘அந்நியன்’ வரை விக்ரம் செய்தது இந்த (ணீறீtமீக்ஷீ மீரீஷீ) ஆல்டர் ஈகோ எனப்படும் மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் என்ற ஸ்கீசோ பெர்னியா வகையைச் சார்ந்ததுதான். இதற்காக அரசும் மற்றும் பல மனநல மருத்துவ அமைப்புகளும் பல கோடி ரூபாய்களைச் செலவழித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப் போராடி வருகின்றன என்பது குமுதத்திற்குத் தெரியாமல் போய்விட்டதே!

இன்னொரு காட்சியில் பெண் சிசுக் கொலையைக் கண்டித்து வசனம் பேசியுள்ளேன். மற்றொரு காட்சியில், ஜாதிச்சண்டையை நையாண்டி செய்து காமெடி செய்திருக்கிறேன்.

இவற்றையெல்லாம் வழக்கம் போல் பகுத்தறிவுப் பிரசாரம் என்ற ஒற்றை வரியில் உதாசீனம் செய்து உதறித்தள்ளி விட்டீர்களே! இது நியாயமா?

நம் ஜனாதிபதி அப்துல்கலாமை நான் சந்தித்து எடுத்த பேட்டியையும் நீங்கள்தான் போடுகிறீர்கள்.

நல்ல விஷயத்தை காமெடி வாயிலாகச் சொன்னால், அதை ‘பகுத்தறிவுப் பிரசாரம்’ என்று டைட்டில் வைத்து புறக்கணித்தும் விடுகிறீர்கள்.

அப்படி என்றால் என்னை என்ன மாதிரி காமெடி செய்யச் சொல்கிறது குமுதம்?

பட்டாப்பட்டி டிராயர் போட்டுக்கொண்டு பக்கத்தில் நிற்பவன் புட்டத்தைக் கடிக்கவா?

சகதியில் புரளவா? வாந்தி எடுத்துக்கொண்டே வரப்பில் ஓடவா?

டபுள் மீனிங் மற்றும் ட்ரிபிள் மீனிங் டயலாக் பேசவா?

பெண்களைக் கிண்டல் பண்ணி, குபீர் சிரிப்பை ஏற்படுத்தட்டுமா?

வயதானவர்களை மண்டையில் தட்டவா? என்ன செய்து உங்களுக்கு கிச்சுகிச்சு மூட்டவேண்டும் பத்திரிகை ஜாம்பவானே!

நமீதாவின் தொப்புளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில், அசினின் இடுப்புக்குக் காட்டும் அக்கறையில், த்ரிஷாவின் உதட்டுக்குக் கொடுக்கும் பப்ளிசிட்டியில் கொஞ்சம் இந்த விவேக்கின் நகைச்சுவைக்கும் கொடுங்களேன், மிஸ்டர் குமுதம்?

கடைசியா ஒன்று, விமர்சனங்கள் படிப்பதற்கு மட்டும்; அவையே படைப்புகள் அல்ல.


தகவல்: குமுதம்

Tamil Daily Dinamani Cartoon : உள்ளாட்சி தேர்தல் காட்சிகள்


Friday, October 13, 2006

Google Maps + Yahoo Traffic report !!!


நம்மில் நிறைய பேர் Google Maps மற்றும் Yahoo maps உபயோகபடுத்தி இருப்போம். Yahoo Maps ல Traffic details அருமையா வரும். Google Maps ல அந்த வசதி இல்லை ஆனாலும் look and feel நல்லா இருக்கும். இதோ வந்து விட்டது Google Maps + Yahoo traffic details இரண்டும் சேர்ந்த ஒரு வலைதளம் Traffic.poly9.com


Yahoo weather வசதியும் உண்டு.

Thursday, October 12, 2006

இன்றைய Politics Punch !!

"மத்தியிலே உள்ள ஆட்சி, மாநிலத்தில் உள்ள ஆட்சி மற்றும் உள்ளாட்சி ஆகிய மூன்றும் மேட்ச் ஆக இருக்க வேண்டும்." (கருணாநிதி)

"ரவுடிகளுக்கு திமுக ஆதரவு தருவதாக ஜெயலலிதா கூறுவதை நம்ப தமிழ் நாட்டில் யாரும் தயாராக இல்லை " (ஆற்காடு வீராசாமி)

"எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்காக, நான் கொடுக்கச் சொன்னதாக கூறி கவரில் பணம் வைத்து வாக்காளர்களுக்குக் கொடுக்கின்றனர்" (விஜயகாந்த்)


Click here for News about Asin

Tamil Magazine Thuglak Cartoon : அன்புமணி, ராமதாஸ் உரையாடல் !!

Labels:


Aishwarya & Abhishek in madurai - Marriage plan dropped at the last minuteநடிகை Aishwarya Rai -யும், அமிதாப் பச்சனின் மகன் நடிகர் Abhishek Bachchan -னும் Madurai மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொள்வதற்காக Madurai வந்ததாக இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Chennai க்கு வந்திருந்த சமாஜ்வாடிக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமர்சிங் அங்கிருந்து Delhi செல்லக் கிளம்பினார். ஆனால் விமான நிலையம் வந்த அவர் Delhi செல்லவில்லை. மாறாக தனி விமானம் ஒன்றைப் பிடித்து Madurai க்கு விரைந்தார்.


நேற்று பிற்பகல் 12 மணிக்கு அவர் Madurai வந்து சேர்ந்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக Madurai வந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். இருப்பினும் விமானத்தை விட்டு அவர் கீழிறங்கவில்லை.

கிட்டத்தட்ட 2 மணி நேரமாக அவர் விமானத்தை விட்டு வராததால் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் நடிகை Aishwarya Rai -யும், Abhishek Bachchan -னும் அங்கு திடீரென வந்தனர்.

இருவரும் ஒரே காரில் வந்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு இன்னும் கூடியது. இருவரும் நேராக அமர்சிங் இருந்த விமானத்தில் ஏறி உள்ளே சென்றனர். அதன் பின்னர் அந்த விமானம் Mumbai க்குப் புறப்பட்டுச் சென்றது.

அமர்சிங் வருகை, Aishwarya Rai, Abhishek Bachchan திடீர் வருகை ஆகியவற்றால் Madurai யில் பரபரப்பு ஏற்பட்டது. Abhishek க்கும், Aishwarya Rai -யும் Madurai மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து ரகசிய திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், அதை அறிந்தே, அமிதாப்பின் வேண்டுகோளின்படி அவரது குடும்ப நண்பரான அமர்சிங் Madurai க்கு விரைந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஐஸையும், அபிஷேக்கையும் அவர் சமாதானப்படுத்தி மும்பைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், Kodaikanal லில் படப்பிடிப்புக்காக ஐஸும், அபிஷேக்கும் வந்திருக்கலாம் எனவும், அமர்சிங்குடன் சேர்ந்து Mumbai சென்றிருக்கலாம் எனவும் இன்னொரு தகவலும் தெரிவிக்கிறது.

Aishwarya Rai யின் திடீர் Madurai வருகை ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் குறையவில்லை.

Source : thatstamil.com

Wednesday, October 11, 2006

Vijaykanth : உங்களுக்கு டி.வி.ன்னா; எங்களுக்கு ரேடியோ


உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் திமுக அணிக்கு ஆதரவாக சன் டிவியில் பிரசாரம் செய்யப்படுகிறது. அதிமுக அணிக்கு ஆதரவாக ஜெயா டிவியில் பிரசாரம் செய்யப்படுகிறது.

ஆனால் ஒரு வயதை நிறைவு செய்து தற்போதுதான் தத்தி தத்தி நடைபோடும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய டி.வி. சானல் இல்லை.

டி.வி. இல்லை என்றால் என்ன, கட்டணம் குறைவான ரேடியோ இருக்கிறது. சென்னை வானொலி மற்றும் எப்.எம் ரேடியோ எல்லோரையும் சென்றடைகிறது என்பதை உணர்ந்த அக் கட்சித் தலைவர் விஜயகாந்த், எப்.எம். ரேடியோகள் மூலம் பிரசாரம் செய்ய முடிவு செய்தார்.

இதையடுத்து கடந்த ஒரு வாரமாக எப்.எம் ரேடியோகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஆதரித்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. "ரேடியா மிர்ச்சி', "ஹலோ எப்.எம்.,' "பிக் எப்.எம்.' ஆகிய ரேடியோக்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புதிய சின்னமான தீபத்தை பிரபலப்படுத்தும் வாசகங்கள் இந்த விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளன.

இது தவிர கொடைக்கானல் எப்.எம். ரேடியோவிலிருந்து தேமுதிக பிரசாரம் ஒலிபரப்பாகி வந்தது. ஆனால் மதுரை மத்திய தொகுதியில் பிரசாரம் நிறைவு பெற்றதை காரணம் காட்டி கொடைக்கானல் எப்.எம். ரேடியோவில் பிரசாரத்தை நிறுத்தச் சொல்லிவிட்டனர். ஆனால் சன் டிவி, ஜெயா டிவியில் மட்டும் விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதற்கு மட்டும் தடை இல்லை. அந்த சானல்களும் மதுரையில் தெரியத்தானே செய்கிறது என்று தேமுதிக பிரமுகர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார். இது குறித்து கோரிக்கை மனுவும் கொடுத்துள்ளோம் என்று தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர்கள் டிவி என்பதால் தாராளமாக விளம்பரம் செய்து கொள்கின்றனர். இந்த வாய்ப்பு மற்றவர்களுக்கு கிடையாது. எனவே இந்த தேர்தல் விளம்பரங்களையும் கட்சியின் தேர்தல் செலவு கணக்கில் கொண்டு வரவேண்டும் என்று கடந்த சட்டப்பேரவை தேர்தலிலே கோரிக்கை எழுந்தது. ஆனால் அதற்கு தேர்தல் விதிகளில் இடம் இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறிவிட்டார்.

தகவல்: தினமணி

Flash News: Aircraft crashes into New York building


An aircraft has crashed into the middle of a brick highrise residential building on Manhattan's Upper East Side at 72nd Street and York Avenue, police officials said.

The building is located near Rockefeller Center and is very close to the Hudson River. A North American Aerospace Defense Command (NORAD) spokesperson told CNN that it had not been tracking the plane.

There was no word on casualties as firefighters battled the flames that shot up from several windows on the 10th story. The Federal Aviation Administration has said a "general aviation" aircraft had hit the building.

Video from the scene shows at least three apartments in the high rise fully engulfed in flames.

Source : CNN

Madurai Central ஓட்டு பதிவு முடிந்தது !!!

Madurai Central தொகுதி இடைத் தேர்தலில் மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்தது. 65 முதல் 67 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் திடீர் மறைவு காரணமாக மதுரை மத்திய தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் கௌஸ் பாட்ஷா, அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா, தேமுதிக சார்பில் பன்னீர் செல்வம் உள்பட மொத்தம் 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்குப் பதிவு வீடியோவில் படமாக்கப்பட்டது. மொத்தம் உள்ள 154 வாக்குச் சாவடிகளும் பதட்டமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலமாசி வீதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில், திமுக வேட்பாளர் கௌஸ் பாட்ஷா வாக்களித்தார். வாக்குப் பதிவு தொடங்கிய 1 மணி நேரத்திலேயே 20 சதவீத வாக்குகள் பதிவாகின.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி 45 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் உதயசந்திரன், தென் மண்டல காவல்துறை ஐஜி சஞ்சீவ் குமார் ஆகியோர் சென்று சுற்றிப் பார்த்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் உதயசந்திரன் பேசுகையில், வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது. எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

வாக்குச் சாவடிகளுக்கு போதிய அளவில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. மத்திய ரிசர்வ் போலீஸ், தொழிலக பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர் போலீஸார், வெளி மாநில போலீஸார் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்னர்.

வெளியூர்க்காரர்கள் தொகுதிக்குள் நுழையக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே தொகுதியின் எல்லையில் வெளி மாநில போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தொகுதி முழுவதையும் அதி விரைவுப் படையினரும் ரோந்து சுற்றி வந்தனர். வாக்குச் சாவடிகளுக்கு 100 மீட்டர் தொலைவிலேய வாக்காளர்கள் நிறுத்தப்பட்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது அடையாள ஆவணங்களை காட்டி தங்களது அடையாளத்தை நிரூபித்த பின்னரே வாக்குச் சாவடி உள்ள பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்றார்.

இந்த நிலையில் காலை முதல் மாலை விறுவிறுப்பாக நடந்து வந்த வாக்குப் பதிவு 5 மணிக்கு முடிவடைந்தது. 65 முதல் 67 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவில் அசம்பாவிதம், வன்முறை எதுவும் இல்லாமல் மதுரை மத்திய தொகுதிக்கான இடைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது Madurai மக்களிடையே நிம்மதிப் பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்: தட்ஸ்தமிழ்.காம்

Tuesday, October 10, 2006

Rajini starrer tamil film பில்லா மீண்டும் புதுப்பொலிவுடன்!!!

ஹிந்தியில் பிரபல நடிகர்களின் படங்கள் அதே பெயரிலேயே மீண்டும் தயாரிக்கப்பட்டு வெளியாவது தற்போது வழக்கமாகி வருகிறது. அதுபோல தமிழிலும் பிரபல நடிகர்களின் பழைய படங்கள் அதே பெயர், அதே கதையுடன் தயாரிக்கப்படவுள்ளன. அந்த வகையில் ரஜினிகாந்தின் படங்கள் தற்போது அதே பெயரில், கதையில் வேறு நடிகர்களின் நடிப்பில் வெளிவரவுள்ளன.பிரபல தயாரிப்பாளர் கே.பாலாஜி சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் ரஜினிகாந்தை வைத்து "பில்லா', "தீ' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். இவர் தற்போது சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் காலத்துக்கு ஏற்றவாறு சில மாற்றங்களுடன் புதிய நடிகர்களை வைத்து மீண்டும் "பில்லா', "தீ' என்ற தலைப்பில் படங்களைத் தயாரிக்கிறார். 79-ல் வெளியான "பில்லா' படத்தில் ஸ்ரீப்ரியா கதாநாயகியாக நடித்தார். 80-ல் வெளியான "தீ' படத்தில் அன்றைய மிஸ் இலங்கை தமரா சுப்ரமணியம் கதாநாயகியாக நடித்தார். இவர்கள் இருவரையும், பழைய பெயரில் புதிதாக வெளிவரவுள்ள இந்தப் படங்களில் நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

தகவல்: தினமணி

Superstar Rajinikanth படம் புகழ் பெற்ற அருங்காட்சியத்தில்!!

Superstar மட்டும்தானா? இதோ ஜெ., முக ஆகியோர் படங்களும் ...


இதில் ஜெ. படம் இருப்பது, புகழ் பெற்ற ஒவியம் "The Last Judgement" by Peter Paul Rubens. இது பல நூற்றாண்டுகள் பழமையானது.

சரி அடுத்த கேள்வி. இது மாதிரி உங்க படத்தையும் வர என்ன பண்ணனும்?

இருக்கவே இருக்கு museumr இங்கே போங்க ...

Monday, October 09, 2006

Google Acquires YouTubeதற்பொழுது internet video உலகில் படு வேகமாக வளர்ந்து வரும் YouTube.com வலை தளத்தை Google இன்று விலைக்கு வாங்கிவிட்டது. மொத்த தொகை 1.65 பில்லியன் டாலர்கள்.

மேலும் விவரங்கள்

some what related old post:

Google ஐ விலைக்கு வாங்கிட்டேன் !!!

Congresss Leader SRB சிக்-குன்-குனியா தாக்கி மருத்துவமனையில் அனுமதி!!

SRB
மூத்த தமிழக Congresss Leader SRB வை சிக்-குன்-குனியா தாக்கியதாக 'இந்து' நாளிதழ் தெரிவித்துள்ளது. அவர் கோவையில் ஒரு தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.

சமீபத்தில்தான் காங். சார்ந்த கூட்டணி கட்சிகளின் தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான மு.கருணாநிதி " அதிமுக வினருக்குதான் சிக்-குன்-குனியா நோய் தாக்குவதாக " தெரிவித்திருந்தார்.

தமிழக அரசும் "மாநிலத்தில் சிக்-குன்-குனியா நோய் கிடையவே கிடையாது" என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறியது.

Kamal Hassan Visits SriVidya at the Hospital !!!>Srividya passes away

கேரள மருத்துவனையில் புற்றுநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை ஸ்ரீவித்யாவை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள அருமையான நடிகை ஸ்ரீவித்யா. மறைந்த பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகளான ஸ்ரீவித்யா சமீப காலமாக எங்கும் காணப்படவில்லை.

Chennai யிலிருந்து கேரளாவுக்கு இடம் பெயர்ந்து விட்ட ஸ்ரீவித்யா அங்கு Malayala TV serial லில் நடித்து வந்தார். ஆனால் பாதியிலேயே அதிலிருந்தும் விலகி விட்டார். அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் தான் ஸ்ரீவித்யாவுக்கு cancer ஏற்பட்டிருப்பதும், நோய் முற்றிய நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள அமிர்தா மருத்துவ ஆய்வு கழகம் மற்றும் மருத்துவனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதும், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.தனி அறையில் தலை முடி எல்லாம் உதிர்ந்து போய் மிகவும் பரிதாபகரமான நிலையில் ஸ்ரீவித்யா சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஸ்ரீவித்யாவைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர். யாரையும் பார்க்க ஸ்ரீவித்யா விரும்பவில்லை. மிக நெருங்கியவர்கள் மட்டுமே அவரைப் பார்க்க முடிகிறதாம்.

இந்த நிலையில் சமீபத்தில் Kochi சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன், அங்கிருந்து திருவனந்தபுரம் சென்றார். ஸ்ரீவித்யா சிகிச்சை பெற்று வரும் Hospital க்கு வந்த கமல், நேராக அவர் சிகிச்சை பெற்று வரும் அறைக்கு சென்றார். கமல் வருவதை அறிந்த ஸ்ரீவித்யா, அவரை உள்ளே அனுப்புமாறு டாக்டர்களிடம் தெரிவித்தார்.

ஸ்ரீவித்யாவைப் பார்த்ததும் கமல் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி விட்டாராம். ஸ்ரீவித்யாவுக்கு ஆறுதல் கூறிய கமல்ஹாசன், கவலைப்படாமல் இருக்குமாறு கூறியுள்ளார். இருவரது சந்திப்பும் மிகவும் உருக்கமாக இருந்ததாக தெரிகிறது.

பின்னர் கலங்கிய கண்களுடன் கமல் விடைபெற்று Chennai திரும்பினார். அவரிடம் ஸ்ரீவித்யாவின் உடல் நலம் குறித்து கேட்டபோது, உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நிலை குறித்து வெளியே சொல்வது அநாகரீகம். எனவே அதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்று மட்டும் தெரிவித்தார் கமல்.

நல்ல நடிகை ஸ்ரீவித்யா நலம் பெற நாமும் பிரார்த்திப்போம்!

previous related post :
Tamil Actress SriVidya in Hospital - Advanced Cancer

Sunday, October 08, 2006

Little super star முந்தானை முடிச்சு 'தவக்களை'

தற்சமயம் Yahoo Video வில் 10 லட்சம் நேயர்கள் பார்த்து ரசித்த, இன்னும் பல பேர்களுடைய ஆவலை ஈர்த்து கொண்டிருப்பது நம்ம ஊர் தவக்களையின் ஆட்டம் தான் !!!

இதோ அந்த Video.


Bahujan Samaj Party leader கன்சிராம் காலமானார்.


உத்திர பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை நிறுவிய அக்கட்சியின் மூத்த தலைவர் கன்சிராம் உடல்நலக் குறைவு காரணமாக அதிகாலை 12. 30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 72. இவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக அவதிபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தகவல் : தினமலர்.

Powered by Blogger