பத்மினி மற்றும் ஸ்ரீவித்யா இரங்கல் கூட்டத்தில் நடிகர்கள் கமல், ரஜினி, விஜய், விக்ரம், அஜீத், சிம்பு, ஆர்யா, ஜெயம் ரவி, நடிகைகள் அசின், த்ரிஷா, மீரா ஜாஸ்மின் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் கலந்து கொள்ளவில்லை. இதனால், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும், பொதுச் செயலர் ராதாரவியும் கோபித்துக் கொண்டனர்.
இரங்கல் கூட்டத்தில், நடிகர்கள் விஜய டி.ராஜேந்தர்,பார்த்திபன்,சரத்குமார்,கவிஞர் வைரமுத்து, நாகேஷ், ராஜ்கிரண், ராஜேஷ், எஸ்.வி.சேகர், விஜயகுமார், பிரசாந்த், சூர்யா, பாண்டியராஜன், அலெக்ஸ், ரமேஷ்கண்ணா, சார்லி, மயில்சாமி, நடிகைகள் மனோரமா, ராதிகா, ஸ்ரீப்ரியா, ஜோதிகா, ஷோபனா, பசிசத்யா, சத்யப்ரியா, கே.ஆர்.வத்சலா, திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன், தயாரிப்பாளர்கள் கோவை தம்பி, அருள்பதி, கலைப்புலி சேகரன், காஜாமைதீன், சிவசக்தி பாண்டியன், பட்டியல் சேகர், பிலிம்நியூஸ் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர். முன்னதாக பின்னணி பாடகி ரகுமாயிராமன் குழுவினரின் பக்தி பாடல்கள் பாடப்பட்டன. ராமேஸ்வரி மற்றும் புவனா ஆகியோர் பாடினர்.
தகவல்: தினமலர்.
Related Posts:
Srividya gives her Assets to MusicKamal Visits Srividya at the HospitalSrividya Admitted in HospitalActress Srividya dies of Heart AttackList of films acted by Actress Srividya