Vimala Raman in Balachandar's New Film Poi
விழிகளாலேயே பல மொழி பேசும் நடிகைகளை இப்போது பார்ப்பது அரிது. ஆனால் ஆஸ்திரேலியக் கிளியான Vimala Raman னின் குண்டு விழிகளோ கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறது.
Tamil என்ற வார்த்தையை மட்டுமே தெரிந்த பல நடிகைகள் கொடி கட்டிப் பறக்கும் Kodampaakத்தில், அட்சர சுத்தமாக தமிழ் பேசி அசத்தலாக நடிக்க வந்துள்ளார் விமலா ராமன்.
பாப்பாவுக்கு அப்பா Bangalore, அம்மாவுக்கு Coimbatore. ஆனால் விமலா பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே கங்காரு நாடான ஆஸ்திரேலியாவில் தான்.
அப்பாவும், அம்மாவும் 35 வருஷத்திற்கு முன்பே ஆஸ்திரேலியாவுக்கு வண்டி ஏறி விட்டார்களாம். இதனால் விமலா ஒரு ஆஸ்திரேலியப் பிரஜை.
வீட்டில் Tamil தான் ஆட்சி மொழி என்பதால், ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் என்றாலும் கூட விமலாவுக்கு நினைவு தெரிந்த நாள் முதலே Tamil நன்னாத் தெரியுமாம். அத்தோடு பரதநாட்டிய¬ம் மிஸ்.ராமனுக்கு அத்துப்படியாம்.
பரதநாட்டியம் கற்ற கையோடு அடிக்கடி Tamil Nadu பக்கம் பறந்து வந்து ஆடிச் சென்றுள்ளார் விமலா. அவரது அழகைப் பார்த்த சில விளம்பர நிறுவனங்கள், 'ஆடு'க்கு நடிக்கிறேளா என்று கேட்க ஓ.கே. சொல்லி சில விளம்பரங்களில் நடித்தும் உள்ளார் விம்ஸ்.
விளம்பரத்தில் விமலாவைப் பார்த்த Kamal Hassan, தனது நள தமயந்தி படத்தில் நடிக்க அழைத்துள்ளார். ஆனால் அப்போது ரொம்பச் சின்னப் பொண்ணாக இருந்ததால் இப்போது வேண்டாம் என்று கூறி அப்பா முட்டுக்கட்டை போட்டு விட்டாராம்.
இப்போ 'செமத்தி'யாக வளர்ந்து பெரிய பெண்ணாகி விட்டதால், பொய் படத்தில் கே.பாலச்சந்தர் அழைத்தபோது வீட்டில் பச்சைக் கொடி காட்டி விட்டார்களாம். இப்படித்தான் Vimala சினிமா நடிகையானாராம்.
பொய் படத்தில் நடிப்பதற்காக முதன் முதலில் Balachandar அழைத்தபோது அவரது அலுவலகத்திற்கு விமலாவும், அப்பா விமலாவும் போயுள்ளனர். நேராக கே.பி.யின் கேபினுக்குள் நுழைந்த விமலா, விவேக் பாணியில் ஹாய் ஹாய் என்றபடி கே.பிக்கு கை கொடுத்து விட்டு இருக்கையில் உட்கார்ந்து கொண்டாராம்.
அவர் பேசியது, நடந்து கொண்டதை கூர்ந்து கவனித்த கே.பி. நீதாம்மா என்னோட ஹீரோயின் என்று அப்பாயிண்ட்மென்ட் பண்ணியுள்ளார். ஆனால் ஆஸி ஐஸ் பெண்ணான விமலாவோ, கொஞ்சம் யோசித்துச் சொல்கிறேன் என்று கூலாக கூறி விட்டு கிளம்பியுள்ளார்.
அதற்கு கே.பி. என்னம்மா நீ, என்னோட படத்துல நடிக்க பொண்ணுங்க ஏங்கிட்டிருக்காங்க, நீ இப்படி சொல்றியேன்னு அதிர்ச்சி காட்டியுள்ளார். ஆனாலும் அசராத விமலா, பத்து நாள் டைம் கொடுங்க சார், யோசித்துச் சொல்கிறேன் என்று கூறி விட்டு 'எஸ்' ஆனாராம்.
அப்புறமாக, கே.பி.யின் அலுவலகத்திலிருந்து ஒரு மேனேஜர் விமலாவுக்கு SMS அனுப்பி பல அறிவுரைகளை கூறியுள்ளார். அதன் பிறகே பாலச்சந்தரின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஓடோடி வந்து ஓ.கே. சொன்னாராம்.
தான் கே.பியிடம் பட் பட்டென்று பேசியது, அவருக்கு எதிராக உட்கார்ந்தது, தடாலடியாக டைம் கேட்டது எல்லாமே தவறு என்று கே.பி. அலுவலகத்தில் இருந்தவர்கள் விமலாவிடம் எடுத்துக் கூறினராம். ஆனால் அப்படிப்பட்ட பார்மாலிட்டிகள் எல்லாம் ஆஸ்திரேலியாவில் கிடையாது என்பதால் தான் அப்படி நடந்து கொண்டதாகவும், மற்றபடி பாலச்சந்தர் சாரை மதிக்காத தன்மை கிடையாது என்று சமாளித்தார் விமலா.
எப்படியோ, அழகு நிலாவைப் பிடித்து பொய் அழகியாக்கி உலவ விட்டுள்ளார் Balachandar.
இந்த அழகுப் பிசாசு என்ன பாடுபடுத்தப் போகிறதோ ரசிகர்களை.